Wednesday, September 6, 2017

மருத்துவ படிப்பு ஒரு மாயை...

மருத்துவ படிப்பின் மாயையில் இருந்து வெளிவாருங்கள். இந்த மாயையில் விழுந்த லட்சகணக்கான மாணவ மாணவியர் தங்களுடைய திரும்ப பெறமுடியாத அருமையான மாணவ பருத்தையும் இளமை பருவத்தையும் தொலைத்து விட்டு உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல்  அடிமை பள்ளிகளில் லட்சகணக்கில் செலவு செய்து புத்திசாலிகளாக மாறுவதாக  நினைத்து செக்கு மாடுகளாக மாறி வருகிறார்கள்.இந்த நிலை மாற வேண்டும்.

இதுவரை

தமிழ்நாட்டில் உள்ள 6000 மருத்துவ சீட்களில் உண்மையான ஏழைகளுக்கு குறைந்த அளவு சீட்கள்தான் கிடைக்கும்.ஆனால் பண பலம் மற்றும் அதிகார பலம் படைத்தவர்களின் பிள்ளைகள் தகுதியற்ற மார்க்( +2வில் 800 ) வாங்கியிருந்தாலும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கோடிகணக்கான ரூபாய்கள் கறுப்பு பணமாகவோ அல்லது லஞ்சபணமாகவோ செலுத்தி கெளரவத்திற்கு படித்து தரமற்ற முறையில் வெளிவந்து சாதாரண மலேரிய காய்ச்சலை மலேரியவுக்கான மருந்து கொடுக்காமல் மர்ம காய்ச்சல் என்று கூறி வெறும் பாரசிட்டமால் மாத்திரையும், ஆண்டிபயாடிக் மாத்திரைகளையும் கொடுத்து 60 வருடத்திற்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். இதனால் ஏற்படும் மரணங்கள் கேவலமானது.

MBBS மருத்துவத்தின் மறுமுகத்தை பார்த்தால் மிகவும் கேவலமாக இருக்கும். இவர்களின் கொள்ளையை பார்த்து இவர்களிடம் உதவியாளராக கடந்த 30வருடங்களாக பணிபுரிந்ததை கேவலமாக நினைத்து தற்போது விவசாயத்திற்கே திரும்பி விட்டேன். இருந்தாலும் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் அப்ரூவராக மாறி இவர்களின் கொள்ளைகார மறுமுகத்தை சாட்சிகளுடன் வெளி உலகத்திற்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த பதிவில் சில விஷயங்களை சொல்கிறேன்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக நினைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் MBBS படித்தவர்களில் 97% பேருக்கு மக்கள் சேவை, மனிதாபிமானம்,மனசாட்சி என்று எதுவும் தெரியாது. பணத்திற்காக எதுவும் செய்வார்கள். புகழாசை, பணத்தாசை வெறிபிடித்தவர்கள்.

1.Cetrizine 10mg மாத்திரை Lupin கம்பெனி Mrp.ரூபாய் 20.83 நம்மிடம் வாங்குவார்கள். அதனுடைய உண்மையான விலை ரூபாய்  2.94 மடட்டுமே.லாபம் ஆயிரகணக்கான %.
2.குளுக்கோஸ் ஏற்ற போடப்படும் IV set MRP 100ரூபாய். ஆனால் உண்மையான விலை 8.75ரூபாய் மட்டுமே.1100% லாபம்.
உங்களிடம் வாங்கும் கன்சல்ட் பீஸ் அதுவே பெரிய கொள்ளை. 
மேலும் உங்களுக்கு பரிந்துரைக்கும் லேப் பரிசோதனை Xray மற்றும் ஸ்கேன் அனைத்திற்கும் 70% கமிஷன் தினமும் இவர்களை தேடி வந்து விடும். 
இந்த கொள்ளை பணத்தை வாங்காத யோக்கியமான டாக்டரை இது வரை நான் கேள்விபட்டதில்லை.

இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

இந்த கேவலமான MBBS படிப்பதற்கு நீட் வந்தாலென்ன வரவில்லை என்றால் என்ன?
ஏன் இவ்வளவு கூப்பாடு. இதை விட நாட்டில் நிறைய பிரச்சனைகள் தலைவிரித்து ஆடி கொண்டிருக்கிறது. ஏழை மாணவர்களை காட்டி கொள்ளை கும்பல் நம்பை ஏமாற்ற பார்க்கிறது. அதிகாரம், அதிக சம்பளம் கிடைக்ககூடிய படிப்புகள் நிறைய உள்ளது. எந்த அரசு ஊழியரும் பகுதி நேர பணிபுரிய கூடாது என்கிற சட்டம் நடைமுறையில் உள்ளபோது MBBS படித்த இந்த அறிவாளிகள் மட்டும் சட்டத்தை மதிக்காமல் தனியே கிளினிக் வைத்து கொண்டு சட்ட விரோத செயலை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த சட்ட விரோத செயலை தட்டி கேட்கிற அளவிற்கு இது வரை யோக்கியமான தைரியசாலிகள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. இந்த படிப்பு தவிர வேற படிப்பு படித்தவர்கள் அறிவற்றவர்களா? கொஞ்சம் யோசியுங்கள்.

மேலும் ஆங்கில மருத்துவத்தின் கோரமுகத்தை கான *போஸ்ட்மார்டம்* எனும் சென்னையில் உள்ள ஓர் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையின் ஆங்கில மருத்துவர் ஒருவர் வேலையை உதரிவிட்டு அயோக்கியத்தனத்தை கிழித்தெரிய இந்த *போஸ்ட்மார்டம்* புத்தகத்தை பல எதிர்ப்புக்களுக்கு பிறகு எழுதி 7 வருடமாக விற்று வருகிறது...

For more good messages visit whatsapprecords.blogspot.com


No comments: