Thursday, October 11, 2018

முக அழகு : தேன் மற்றும் தயிர்

*தயிர் தேனில் செய்யும் இந்த அழகுக் குறிப்பு உங்கள் முகத்தில் ஒரு சில நாட்களில்* *வசீகரத்தை உண்டு பண்ணும் என்பது உண்மையே*.

தேனைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எந்தவித சருமத்தையும் அழகாக்கும் மேஜிக் தேனிடம் உண்டு.அதேபோல் தயிர் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த இரண்டு பொருட்களும் சேர்ந்து உங்கள் சருமத்தில் செய்யும் மாயாஜாலத்தை கவனிக்க ஆசையா? மேலும் தொடர்ந்து படியுங்கள்.

*எப்படி முகத்தில் உபயோகிக்கலாம்?*

1 ஸ்பூன் தேனை 2 ஸ்பூன் தயிருடன் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். தொடர்ந்து இதனை செய்யும்போது உங்கள் வறண்ட, டல்லாகியிருக்கிற சருமத்தை, பளிச்சின்னு மாற வைக்கும் என்பது உறுதி.

*சிறந்த மாய்ஸ்ரைஸர்* :

தேன் மற்றும் தயிர் இரண்டும் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. வறண்ட சருமமாம இருந்தால், ஈரபதத்தை அளித்து மென்மையாக்குகிறது.

*சிவப்பழகை தருவிக்கிறது*:

மெலனின் நம் சருமம் கருமை அடைவதற்கு காரணமான ஹார்மோன் ஆகும். தயிரிலுள்ள டைரோசின் என்கின்ற அமினோ அமிலம் இந்த மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இதனால் சிவப்பழகு கூடும். சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கும்.

*அலர்ஜியை தடுக்கும்*:

சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் க்ரீம்கள் போடும்போது உண்டாகும் அலர்ஜியை இந்தக் கலவை போக்கும். இவ்விரண்டிலுமே ஜின் என்ற மினரல் உள்ளது. சருமத்தில் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்துகிறது.

*முகப்பருக்கு பை பை* :

உங்களுக்கு முகப்பரு தொல்லை தருகிறதா? அப்படியெனில் இதுதான் பெஸ்ட் சாய்ஸ். தயிரும் தேனும் சிறந்த கிருமி நாசினி. இவைகள் முகப்பருவை அண்ட விடாமல் தடுக்கின்றன.

*கருவளையம்போக்குகிறது* :

கண்களும் அதற்கு கீழ் உள்ள பகுதிகளும் மிகவும் சென்ஸிடிவானது. அங்கு எளிதில் சுருக்கங்கள் வந்துவிடும். கண் சுருக்கங்களை இந்த கலவை நாளடைவில் குறைத்து உங்களை அழகாக காட்டும்.

*சுருக்கங்களை போக்கும்* :

தயிர் மற்றும் தேன் சருமத்திற்கு இறுக்கத்தினை தருகிறது. கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் சுருக்கங்கள் மறையும். இளமையாக உங்கள் முகத்தினை காட்டும்...

No comments: