*சிலையை திறக்க மோடி வருவாராம்... ஆறுகளை காக்க மிஸ்ட்டுகால் கொடுக்கனுமாம்!*
ஆட்சி நடத்துறிங்களா, கால்சென்டர் நடத்துறிங்களடா?
மரங்களை நடுவோம், ஆறுகளைக் காப்போம், விவசாயம் செய்வோம் என்று கூவுவது எல்லாம் யாரென்று கவனிக்க வேண்டும். எல்லோரையும் நிம்மதியில்லாமல் ஆக்கியவன்தான்;
யோகாவில் உட்காரச் சொல்லி நிம்மதியடைய அழைக்கிறான். மனதை அலைபாயவைத்து, பைத்தியக்காரனாக்கி, உரிமைகளைப் பிடுங்கி சமூகத்தை சீரழித்த பாவிகள்தான் சாமி, மடம், ஆசிரமம் என்ற பெயரில் மனதை ஒருநிலைப்படுத்த அழைக்கிறான்.
யார் அழைத்தாலும் செல்வதும், எவன் என்ன சொன்னாலும் அதைப்பரப்புவதும் என்ன புத்தியோ... இதெல்லாம் தற்கொலைக்கு சமமென்பதை எப்போது புரிந்துகொள்வீர்கள்?
சரி தகவலுக்கு வருகிறேன். ஈஷா ஆசிரம முதலாளி ஜக்கி வாசுதேவ் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஆறுகளை, நதிகளைக் காக்க
8000980009 என்ற எண்ணிற்கு மிஸ்ட்டுகால் கொடுக்கனுமாம். அதை நான், நீ என்று கூத்தாடிகளும், உட்கார்ந்த இடத்திலிருந்து புரட்சி புண்ணாக்கு விற்பவனும் பரப்பிவருகிறான்.
பல வருடங்களாக மரங்களை நட்டு பசுமைபூமியாக தமிழ்நாட்டை மாற்றி பூஞ்சோலை நடுவே நம்மையெல்லாம் வாழவைத்துக் கொண்டிருக்கும் ஈஷா வாசுதேவ்...... மலையையும், காடுகளையும் ஆக்கிரமித்து, அழித்துக் கட்டிய
சிவன் சிலையை திறந்து வைக்க
இந்திய பிரதமரை கூட்டி வந்து நிறுத்த முடிகிறதெனில்
ஆறுகளையும், நதிகளையும் காப்பாற்ற
மோடியிடமே கூற முடியாதா?
தமிழ்நாட்டில் ஆறுகளையும், பசுமையையும் காப்பாற்ற
இன்னும் எத்தனை மக்கள் தயாராக இருக்கின்றனர்
என்று தெரிந்து கொள்ள
மிஸ்டு கால் டேட்டா பேஸ்
தயார் செய்கிறார்கள் என்றால்
உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா?
நீங்கள் உங்கள் சிம்கார்டினை
ஆதார் அட்டை கொண்டு வாங்கியிருப்பீர்கள்.
உங்கள் எண்ணிலிருந்து ஒரு மிஸ்டு கால் சென்றால் போதும்.
உங்களது மொத்த விவரமும்
அவர்களுக்கு அடுத்த நொடியே தெரிந்துவிடும்.
உதாரணமாக முதுகுளத்தூர் பகுதியில் 100 மிஸ்டுகால் வருகிறது எனில் அவர்களை குறிப்பெடுத்துக் கொள்ளும் இந்த மாஃபியா அணி.
இன்னும் மிச்சமிருக்கும் 100 பேரும் தீவிரமாக
கண்காணிக்க, முடக்கிட முடியும்.
எங்கோ ஒரு மூலையில் இருக்கும்
குப்பனும் சுப்பனும் போராடி குண்டர் சட்டத்தில் அடைக்கும் அரசுக்கு நேரடி தொடர்பிலுள்ள ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் மிஸ்டு கால் நாடகம் போடுவதை மக்கள் இனியேனும் புரிந்து கொள்ள வேண்டும்.
1 லட்சம் பேருக்கு பகிருங்கள் அரசு கவனிக்கும் என்பதுவும், மிஸ்டு கால் கொடுத்தால் மரபணு மாற்றத்தை அரசு நிறுத்திவிடும் என்பதுவும், பத்துபேருக்கு சாய்பாபா போட்டோவை அனுப்பினால் நல்லது நடக்கும் என்பதுவும் ஒரே பைத்தியக்காரத்தனம்தான்.
புரிந்து செயல்படுங்கள். புரியாதவர்களுக்கு விளக்கம் கொடுங்கள். ஏதோ சொல்லனும்னு தோனுச்சு... மந்தையான மக்கள்மீது வெறுப்புடன்...........
For more good messages visit whatsapprecords.blogspot.com
No comments:
Post a Comment