நான் காய்கறி வாங்க கடைக்கு சென்றேன்.. அங்க எனக்கு முன் ஒரு பெண் வாங்கி கொண்டிருந்தார்....
காய்கறிகளை வாங்கி முடித்ததும், கடைக்காரர் பாலிதீன் பை எடுத்தார்...
பெண் : வேண்டாம்பா எங்கிட்டயே இருக்கு...
கடைக்காரர் : பழைய அழுக்கு புடிச்ச பாலீத்தின் பைய ஏன் தூக்கிட்டு திரியுறிங்க?.....
உங்களுக்கு கொடுக்கிற ஒரு பையில் நான் கொறஞ்சிட மாட்டேன்...
உங்களுக்கு கொடுக்கிற ஒரு பையில் நான் கொறஞ்சிட மாட்டேன்...
பெண் : நீ பெரிய கர்ணப்பிரபுன்னு எனக்கு தெரியும்... இந்த கருமத்தால (பாலிதீன்) வீடு
குப்பையாச்சி... ஊரு குப்பையாச்சி... நாடு குப்பையாச்சி... இந்த உலகமே குப்பையாச்சி... மண்ணுல போட்டா மண்ண கெடுத்துடுது... எரிச்சு விட்டா காத்த கெடுத்துடுது... அதுக்காக ஏன் நல்லா இருக்குறத குப்பைல போடணும்.... இந்த பை எவ்வளவு காலம் உழைக்குதோ அதுவரைக்கும் பயன்படுத்திட்டு இனி முடியாத என்ற நிலை வரும்போது தூக்கி குப்பைல போட்டுருவேன்.... இப்படி செஞ்சாலே கொட்டுற முக்காவாசி குப்பைங்க கொறஞ்சிடும்...
பயன்படுத்திய பொருளை எடுத்து வச்சி திரும்ப பயன்படுத்துவதில் என்ன வெக்கம்?...(முணுமுணுத்து கொண்டே சென்றார்...)

சுட்டிவிரலில் ஊசியால் குத்தியதுபோல் சுள் என்று இதயத்தில் ஒரு வலி....
படித்தவர்கள்.....
பட்டத்துக்கு மேல் பட்டம் வாங்கி குவித்தவர்கள்....
நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள்...
அனைத்து மொழி செய்தித் தாளையும் தினந்தோறும் தவராமல் படித்து பொதுஅறிவை வளர்ப்பவர்கள்....
இதில் எத்தனை பேர் இதை யோசிச்சிருப்பாங்க.....
எத்தனை பேர் பின்பற்றுவாங்க.....
பயன்படக்கூடிய பொருள் குப்பைக்கு போவதை தடுத்தாலே...
சுற்றுசூழல் பிரச்சனை பாதியாக குறையும் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது....

No comments:
Post a Comment