Thursday, May 20, 2021

கருப்புப் பூஞ்சை (MUCOR MYCOSIS) பற்றி தெரிந்து கொள்வோம்...

கருப்புப் பூஞ்சை (#MUCOR_MYCOSIS) தொற்றை மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை 

நோயைக் கண்டறியும் மருத்துவர்கள்/ மருத்துவ ஊழியர்கள் உடனே அரசாங்கத்திடம் 

நோயாளியின் பெயர், வாழ்விடம் போன்ற அடையாளங்களைத் தெரிவிக்க வேண்டும் 

இதுவே #NOTIFIED_DISEASE என்பதன் பொருள்.

சமூகத்தில் எதிர்பார்க்கப்படும் அளவை விட ஒரு தொற்று நோய் அதிகமான அளவில் மக்களிடையே காணப்படும் நிலையில் அந்த நோயை #NOTIFIED_DISEASE என்று அறிவிப்பார்கள் 

காலரா 
டெங்கு 
மலேரியா 
லெப்டோ ஸ்பைரோசிஸ் 
ஸ்க்ரப் டைஃபஸ் 
காச நோய் 
தொழுநோய் 

போன்ற நோய்கள் ஏற்கனவே #NOTIFIABLE_DISEASE பட்டியிலில் இருக்கின்றன 

பல இடங்களில் தற்போது ம்யூகார் மைகோசிஸ் தொற்றை 
"தொற்று நோயாக" அறிவிக்கப்பட்டுள்ளது என்று செய்தி பரவுகிறது 

ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் 

ம்யூகார் மைகோசிஸ் என்பது 
பொதுவெளியில் சுற்றித்திரியும் பூஞ்சையின் நுண்ணியிர்விதைகளை(Spores) எதிர்ப்பு சக்தி குன்றியவர்கள் நுகர்வதால் ஏற்படும் தொற்று நோயாகும். எனவே இது INFECTIOUS DISEASE பட்டியலில் வரும்

ஆனால் இந்த நோய் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவாது. 
MUCOR MYCOSIS IS NOT A CONTAGIOUS DISEASE. 

எனவே தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். 

இந்த தொற்று ஏற்பட்டவர்களிடம் இருந்து அவர்களை கவனித்துக்கொள்பவர்களுக்குப் பரவாது. 

எனவே இந்த தொற்றாளர்களை ஒதுக்குதல் செய்யக்கூடாது. 

தனிமைப்படுத்திடத் தேவையில்லை 

அவர்களை உடனே அடையாளம் கண்டு சிகிச்சை அளித்திட வேண்டும். 

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

No comments: