Saturday, July 24, 2021

அனுபவம் தத்துவம்...

தோள் கொடுக்கும் தோழன் 
இருந்தால் போதும். நம்மால் பறவைகள் போல பறக்க கூட முடியும் சிறகுகள் தரும் சிற்பியாய் நண்பன் இருக்கும் வரை..எல்லாவற்றுக்கும் 
நியாயமும் காரணமும் அவரவர்களுக்கானது 
நேர்மை மட்டுமே பொதுவானது

இன்பம் துன்பம் கலந்த வாழ்வில் துன்பத்தில் துவளும் மனம் இன்பத்தை பெரிதாய் கொண்டவில்லை எனில் வாழ்க்கை எப்படி ரசனை கொள்ளும் 😍

பிரச்சினை வரும் எனில் பேசுவதைத் தவிர்ப்பதே நல்லது.! பேசி பிரச்சினையை வளர்க்காமல், அமைதி நிலவிட வழிவகுப்போம்..! ஏனெனில் வாழ்க்கை வாழ்வதற்கே; நம் நியாயங்களை பிறர் குற்றங்கள் மீது வைத்து பேசுவதற்கு அல்ல..!

விட்டுட்டு 
போனவங்கள நினச்சு 
பீல் பண்றத விட 
கூட இருக்குறவங்கள 
தக்க வச்சுகிறது தான் 
புத்திசாலித்தனம்..!!!உண்மையில் பிறருடைய மனதை கவிர்பிப்பது என்பது 
நம்முடைய அழகோ, அறிவோ அல்ல..! 
நம்முடைய பழகும் விதமும், பிறரை நாம் மதிக்கும் விதத்தில் தான் அமையும்.!

யாரிடமும் உங்களுக்கான நியாயத்தை எதிர்பார்க்காதீர்கள்.

காரணம் அவர்கள் வைத்திருப்பது அவர்களுக்கான நியாயத்தை..

அடுத்தவரை வெல்வது
வெற்றியல்ல

அடுத்தவர் மனதை 
வெல்வதே வெற்றி

மற்றவர்களுக்கு உதவிட இயலாவிட்டாலும் கூட 
அவர்கள் மனதில் 
நம்மால் எதையும் செய்ய
முடியும் என்ற
#நம்பிக்கையை
விதைத்து செல்லுங்கள்
அதுவே அவர்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய தூண்டுகோலாகும்....
திருவாசகத்திற்க்கு உருகார் ஒரு வாசகத்திற்க்கும் உருகார்

பேரும் குணமும் பிணிப்பு உறும் இப் பிறவி தனைத் தூரும் பரிசு துரிசு அறுத்துத் தொண்டர் எல்லாம் சேரும் வகையால் சிவன் கருணைத் தேன் பருகி ஆரும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டு அன்றே..
கேட்கப்படாத கதறல்
பார்க்கப்படாத மன்றாடல்
உணரப்படாத காதல்....
இவையாவும் ஒரு மரணத்திற்கு
ஒப்பானவை.

நான் இப்பொழுது
என் கதறலைவிட்டு 
மன்றாடலைவிட்டு
காதலைவிட்டு....
மரணத்திலிருந்து
உயிர்த்தெழுந்திருக்கிறன்.....என்ன நடந்ததென்றே விளங்கவில்லை
சும்மா வேடிக்கைதான்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
சட்டென்று வயதாகிவிட்டது.
என்ன அநியாயம்
எனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதா 
எல்லோர்க்கும் இப்படித்தானா
இருக்கும் போது தெரியவேயில்லை.

இளமை இவ்வளவு
குறுகியதா..மனிதர்கள் குறைகள் உள்ளவர்கள் தாம்.
அந்தப் பக்கத்தை மூடிவிட்டு
அனைவரையும் நேசிக்க அன்பு என்ற கதவை மட்டும் திறந்து வையுங்கள்.
உங்கள் அன்பு உண்மையாக இருக்கும் போது உலகம் பிரகாசமாக இருக்கும்.

📣📣📣📣📣📣📣📣📣📣📣📣

No comments: