Friday, November 17, 2017

சிந்தனை செய் மனமே

✔ஆண்டுகள் முதிர்ந்து வயதாகியும் அறிவு முதிராதவர், பூத்தாலும் காயா மரம் போன்றவர். புதைத்தாலும் முளைக்காத விதையைப் போன்று அறிவில்லாதவனுக்கு எவ்வுரையாலும் அறிவுண்டாகாது.
✔ஒருவர் மீது நாம் வைக்கும் உண்மையான அன்பின் அடையாளம் நமக்கு பிடித்ததை அவர் செய்கின்றாரா என்பதில் அடங்குவதில்லை. அவருக்கு பிடித்ததை நாம் செய்கின்றோமா என்பதில் தான் அடங்கியுள்ளது...
✔ஒரு நொடியில் கெட்ட பெயர் வாங்குவது எளிது. ஆனால் ஒரு லட்சம் நொடி முயன்றாலும் ஒரு நல்ல பெயர் வாங்குவது கடினம். முடிந்தவரை நல்லவனாக வாழ முயற்சி செய். அது உன்னை பெருமைப்படுத்தும்.
✔விதி என்பது உன் எண்ணங்களால் உருவாக்கப்பட்ட உலகம்... அது நல்ல எண்ணங்களாக இருந்தால் சொர்க்கம்... தீய எண்ணங்களாக இருந்தால் நரகம்...
✔சில நேரங்களில் தாகம் என்பது தண்ணீருக்காக மட்டும் அல்ல...
✔அன்புதான்உலகைஆளும் : ஒருநாள் சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது. "உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன் ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே என்று... அதற்கு சாவி சொன்னது "நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தையல்லவா தொடுகிறேன்." என்று. அன்பால்தான் கல்லான இதயத்தை கரைக்க முடியும். முயன்றால் இமயத்தையும் கரைக்கமுடியும்.
✔எல்லாம் வேடிக்கை தான்... உனக்கு நடக்காமல் மற்றவர்களுக்கு நடக்கும் வரை... அக்கறையோடு வாழ கற்றுக் கொள்வோம்... 
✔துன்பம் ஏற்பட்டால், அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற  வேண்டும் என எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்வோம்... வெற்றி நிச்சயம் 
✔சூழ்நிலைகள் எவ்வளவு மோசமாக அமைந்தாலும் நல்ல ஒரு நண்பன் கிடைத்தால் அது போதும்... சூழ்நிலை கண்டிப்பாக மாறும்... 
✔நம்பிக்கை கடவுளையும் அசைக்கும்... பயம் எதிரியையும் செயல்பட வைக்கும்..

No comments: