பிரச்னைகளால் அணைத்து பக்கங்களிலும் கதவு மூடப்பட்டு விட்டது என்று ஒரு மனிதன் எடுக்கும் இறுதி ஆயுதம் தற்கொலை. தற்கொலை செய்து கொள்வதால் பிரச்னை முடிந்து விடுகின்றதா இதுதான் இப்போதைய கேள்வி? அப்படியென்றால்? இல்லை மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கும் என்பதை பற்றி மனிதன் சற்று சிந்தித்தால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஒரு மனிதனுக்கு துளி அளவும் வராது.
ஒருவன் செய்த பாவ வினை ஜென்ம ஜென்மத்திற்கு பின் தொடரும் எனும் பொழுது அவன் செய்த பாவத்தால் பின் தொடரும் பிரச்சனையும் தற்கொலை செய்வதால் இத்துடன் முடிந்து விடும் என்று மனிதனின் நம்பிக்கை அவனை வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் இக்கட்டில் தள்ளிவிடுகின்றது.
உண்மையில் பிரச்னைகள் அதற்கு பின்தான் ஆரம்பிக்கின்றன. இதற்கு ஒரு திரைப்படம் அந்த காலத்தில் வந்தது குறிப்பிடதக்கது படத்தின் பெயர் முதல்தேதி. அது ஒரு கற்பனையான விஷயம் என்றாலும் அதில் சொல்லப்பட்டுள்ள அணைத்தும் நூற்றுக்கு நூறு சரியான விஷயங்கள் தான்.
ஏனென்றால், மனிதன் அழிவற்ற ஆன்மா என்று தன்னை உணராத காரணம்தான் தற்கொலை செய்வதற்க்கு முதல் விதை. தன்னை உடல் என்று நினைப்பவர் உடலை அழித்து விட்டால் எல்லாமே முடிந்தது என்று நினைக்கின்றார். ஆனால், பாவத்தின் தண்டனையை ஒருவர் அனுபவிக்கவேண்டும் என்று இருந்தால் அவர் நீதிக்கு முன் தேடப் படும் குற்றவாளியாவர். ஆனால் மனிதனிடம் மறைந்து வாழலாம், இறைவனிடம் பாவத்தை மறைக்கமுடியுமா? இறைவன் உடலை கொடுத்தது இப்பூமியில் நல்ல, தீய கர்மத்தின் வினைப்பயன்களைஅனுபவிக்கத்தான்.
தீய கர்மத்தின் துன்பத்திற்கு ஆளாகும் ஒருவர், இறைவனின் சன்னதியை நாடி தன்னுடைய பாவத்தின் கணக்கை மனம் திறந்து ஒப்படைக்க வேண்டும்.பிறகு,செய்த பாவங்கள் திரும்ப தன்னுடைய வாழ்வில் துளியும் நடந்து விடாமல் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நேர்மையுடன் வாழ்வேன் என உறுதிமொழி எடுத்தால் எப்பேர்ப்பட்ட பாவமும் அதனுடைய தண்டனையும் நீங்க தந்தை ஈசன் கண்டிப்பாக வழிகாட்டுவார்.
செய்த பாவத்தை திரும்ப திரும்ப செய்யும் ஒருவரின் மனோ நிலையே அவரை தற்கொலைக்கு தூண்டுமாறு அமைகின்றது. பாவ எண்ணங்களின் சுமை, பாவ ஆத்மாக்களின் தொடர்பு, கீழான கர்மங்கள் இவைகள் தான் மனித வாழ்வை அழிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. குடிகாரர் என்ன சொல்லுவார் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தனால் குடிச்சேன். இல்லாவிட்டால், இன்னைக்கு மனசுக்கு ரொம்ப சந்தோசம் அந்த மகிழ்ச்சியை கொண்டாட குடிச்சேன். ஆக பாவம் செய்ய அவருக்கு காரணம் தேவை. தன்னுடைய வாழ்க்கையை திருத்தி கொள்வதில் அவருக்கு எந்தவித அக்கறையும் இல்லை.
ஆக, துன்பமும் இன்பமும் கலந்து வந்துகொண்டே இருக்கும் இந்த வாழ்வில் அவருக்கு பாவம் செய்ய ஒரு காரணம் கிடைத்துவிட்டது. இந்த மாதிரி வாழ்வில் தன் மூலம் பிறருக்கு துன்பத்தை ஏற்படுத்துபவர் பாவத்தின் தண்டனைக்கு ஆளாகின்றார். சிலந்தி இரைக்கு வலையை பின்னி அதிலேயே சிக்கிக்கொண்டு இறந்து போன கதைதான் நம்மில் பலர் செய்வது. இறைவன் கொடுத்த உடலை அழித்துக் கொள்ளும் அதிகாரத்தை உங்களுக்கு யார் வழங்கியது?
உடல் என்பது ஆன்மா என்ற குருவி குடியிருக்கும் கூடு. அந்த மரத்தின் கூட்டை இழந்து விட்டால் குருவி திரும்ப கட்டிவிடும் ஆனால், இந்த மனித கூட்டை விட்டுவிட்டால் குடியிருக்க வீடில்லாதவர் தெருத்தெருவாக அலைந்த கதைதான் ஆன்மாவிற்கு உண்டாகும்.உங்கள் கணக்குப்படி உங்களுக்கு இன்னொரு தாயின் கர்ப்பத்தில் உடல் தயாராகும் வரை அலைந்து கொண்டு சூட்சும உடல் என்னும் ஆவி உடலில் சுற்றவேண்டும். கெட்ட மனிதர்களின் சூழ்நிலை காரணமாக உங்கள் உடலை நீங்கள் அழித்துக் கொண்டு இருக்கலாம் ஆனால் இறந்துபோன கெட்ட மனிதர்களின் ஆவி அதைவிட மிகவும் கொடூரமானது என்பதை நீங்கள் உணர வேண்டும். பாவம் செய்தவர் செத்தாலும் கெட்ட கர்மம் பின்னால் வந்தே தீரும்.
அவரால் ஒரு இஷ்டப்பட்டதை சாப்பிடமுடியாது. எந்த ஒரு விருப்பமான காரியத்தை செய்யவும் முடியாது. அந்தோ பரிதாபம் தற்கொலை செய்பவரின் நிலைமை. நீங்க வேற ஆவியாவது, பூதமாவது செத்துட்டா அவ்ளோ தாங்க என்று நீங்கள் கூறினால் டிஸ்கவரி சேனலில் வரும் ஆவிகளை பற்றிய நிகழ்வுகளை சற்றே காண்பதும் கூட நல்லது. ஏனென்றால் அவை ஆதார பூர்வமான உண்மைகள் ஆகும். மேலும் பயணத்தில் வழிதவறிய சிலர் அனுபவங்கள், மற்றும் ஆபத்தில் மீண்டு உயிர் தப்பிய அனுபவங்கள் இவையெல்லாம் மனித வாழ்க்கையில் மனித உயிரின் மதிப்பை புரிந்துகொள்ள உதவும் நிகழ்ச்சிகளாகும்.
உடல் என்பது கடவுள் தந்த பரிசாகும். இந்த பரிசை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். சிலர் நோய் வந்தால் கவனிக்காமல் இருப்பது மேலும் அந்நோயை குணமாக்கி கொள்ளாமல் இருப்பது, தவறான வழியில் செல்வது அந்த தவறை திருத்திக்கொள்ளாமல் இருப்பது இதுவும் தற்கொலைக்கு சமமே ஆகும். எப்பேர்ப்பட்ட பிரச்சினையையும் தீர்ப்பதற்கு தந்தை ஈசன் இருக்கின்றார். அவரிடம் உங்கள் சுமைகளை கொடுத்துவிட்டு நீங்கள் லேசாக
இருக்கவேண்டும். கடவுள்கிட்ட பிரச்சனைய கொடுத்திட்டேன். ஒரு பிரச்சனையும் தீரவேமாட்டேங்குது என்று நீங்கள் சொன்னால், நீங்கள் கடவுளிடம் சத்தியமாக உண்மையாக இல்லை.
இருக்கவேண்டும். கடவுள்கிட்ட பிரச்சனைய கொடுத்திட்டேன். ஒரு பிரச்சனையும் தீரவேமாட்டேங்குது என்று நீங்கள் சொன்னால், நீங்கள் கடவுளிடம் சத்தியமாக உண்மையாக இல்லை.
நீங்கள் கடவுளிடம் மறைத்துக் கொண்டு இன்னும் பாவ செயல்களில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றீர்கள். மனிதனுக்கு மனிதன் ஒரு மடங்கு தண்டணை தான் கொடுப்பான் ஆனால் மேலான இறைவனிடம் உறுதி மொழி கொடுத்துவிட்டு பாவம் செய்தால் அதற்கு நீங்கள் செய்த பாவமே நூறுமடங்கு தண்டணையை உங்களுக்கு வழங்கிவிடும். தந்தை ஈசனோ அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்கும் சுகக்கடல் ஆவார். அவரவர் செய்த பாவமே அவரவரை தண்டிக்கின்றது. எனவே உலகில் எப்பொழுதும் நம்மை ஒருவர் கவனித்துக் கொண்டே இருக்கின்றார் என்பதுவே மனிதன் பாவம் செய்யாமல் வாழ்வதற்கான வழி.
No comments:
Post a Comment