Friday, November 24, 2017

யார் இந்த மனிதர்?

📍வேதியியலில்📍 அவர் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார்.
📍உயிரியலில்📍 சாதாரணமாக கருத்தரிக்காமல் பிறந்தவர்.
📍இயர்பியலில்📍அவர் வானத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டப்போது புவியீர்ப்பு விசையின் விதியை பொய்யாக்கினார்.
📍பொருளாதாரத்தில்📍இரண்டு மீன்களையும், ஐந்து அப்பங்களையும் கொண்டு, 5000 பேருக்கு உணவளித்து, வரவு குறையும் விதியை பொய்யாக்கினார்.
📍மருத்துவத்தில்📍 அவர் வியாதியஸ்தரையும், குருடரையும் மருந்தேயில்லாமல் குணப்படுத்தினார்.
📍வரலாற்றில்📍 அவரே ஆதியும் அந்தமுமாயிருக்கிறார்.
📍அரசாங்கத்தில்📍அவர் தாமே ஆலோசனைக்கர்த்தர், சமாதானப்பிரபு என்று கூறியுள்ளார்.
📍ஜீவமார்க்கத்தில்📍 என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்று கூறியிருக்கிறார்.
எனவே, அவர் யார்? அவர் இயேசு தான்!
என்னோடு சேர்ந்து அவரை கொண்டாடுங்கள். அவரே பாத்திரர்.
அவருக்கு ஊழியக்காரர்கள் இல்லை, எனினும் அவரை எஜமானன் என்று அழைத்தார்கள்.
அவர் பட்டம் பெறவில்லை, எனினும் அவரை போதகரே என்று அழைத்தார்கள்.
அவரிடத்தில் மருந்து இல்லை, எனினும் அவரை குணமாக்குபவர் என்று அழைத்தார்கள்.
அவருக்கு இராணுவம் இல்லை, எனினும் ராஜாக்கள் அவருக்கு பயந்தார்கள்.
அவர் இராணுவப் போர்களில் வெற்றிப் பெறவில்லை, எனினும் அவர் உலகத்தை ஜெயித்தார்.
அவர் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டார், எனினும் அவர் இன்றும் வாழ்கிறார்.

No comments: