Saturday, November 25, 2017

இதுதாங்க வாழ்க்கை

நேரா போய் ரைட் எடுத்தா, ஒரு தோல்வி வரும்... அங்கிருந்து லெப்ட் போனா பெருசா ஒரு துரோகம் இருக்கும்... கொஞ்ச தூரம் போயி ஒரு யு டேன் அடிச்சா, அங்க கடன் என்கிற ஒரு பெரிய பள்ளம் இருக்கும்... அந்த பள்ளத்துல விழுந்து மூஞ்சி மொகர எல்லாம் பேந்து எந்திருச்சு நேரா போனா, ஏமாற்றம்ங்கர ஒரு சிக்னல் இருக்கும், அதையும் தாண்டி போனா, போட்டி, பொறாமைங்கர ஸ்பீடு பிரேக்கர் வரும், அதையும் தாண்டி டாப் கியர் போட்டு போயிகிட்டே இருந்தால் அதுக்கடுத்தது தான் நீங்க கேட்ட வெற்றி வரும்... வெற்றிய தொட்ட அடுத்த கணமே திரும்பி பார்த்தால் எமன் எருமையில நம்மள விட வேகமா வருவான்...
☹☹☹☹☹☹இது தானுங்க வாழ்க்கை☹☹☹☹☹☹
🍼 தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்- அப்படியானால் *பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை?*
🚶தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்-அப்படியென்றால் *யானை ஏன் எடை குறையவில்லை?*
🏊 தினமும் 2 மணி நேரம் நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்- அப்படியென்றால் *திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை?*
🐐 கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டால், உடம்பில் கொழுப்பு அதிகமாகி அவதிப்படுவீர்கள் என்றால், *புல்லை மட்டும் சாப்பிடும் ஆட்டின் உடம்புக்குள் அவ்வளவு கொழுப்பு எங்கிருந்து வந்தது?*
🌝 தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும்-
அப்படியென்றால் *நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும்?*
எனவே நீங்க நீங்களாகவே இருந்து, தினமும் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே கவலைப்படாமல் இருங்கள்...  அதுதான் நல்லது... *நலம்* *பெறுக*
☹☹☹☹☹☹இது தானுங்க வாழ்க்கை☹☹☹☹☹☹
வசந்தம் ஒரு நாளில் மலர்ந்து விடுவதில்லை, அதேபோல வாழ்வில் உயர்வும் ஒரே நாளில் கிட்டிவிடாது.
வாய்ப்பு என்ற வாகனம் வரும் வரை காத்திருப்பதை விட வரும் வழியில் மறித்து ஏறிக்கொல்லலாம் என்ற நம்பிக்கையான நடைபயணம் தான் காலம் தாழ்த்தா வெற்றி...
உருவத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாதென அனுபவப்பூர்வமாக உணர்ந்த நாள் இன்று! *"பெரிய" வெங்காயம் கிலோ 50 ரூபாய்!* *"சின்ன" வெங்காயம் கிலோ 140 ரூபாய்!*
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை. அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும். அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகிவிடும்
☹☹☹☹☹☹இது தானுங்க வாழ்க்கை☹☹☹☹☹☹

No comments: