Sunday, November 26, 2017

அன்புள்ள அம்மாவுக்கு...

#யாரோ_ஒரு_நண்பனின்_மடல் இதை படித்தவுடன் என் கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை, ஆகவே இதை உங்களுடன் பகிர்கின்றேன்...
இதில் உள்ள அத்தனை வரிகளும் உண்மையில் என் வாழ்வில் நடந்தவைகள்...
அம்மா...
நான் பிறந்து விழுந்த போது... உன் சேலைதான் ஈரமானது...!!!
நான் உறங்க... உன் சேலைதான் ஊஞ்சல் ஆனது..!!!.
நான் பால் அருந்தும் போது... உதட்டினை துடைத்தது உன் சேலைதான்...!!!
எனக்கு பால் கொடுக்கும்போது... உன் சேலை தான் எனக்கு திரையானது...!!!
நான் மழையில் நனையாமல் இருக்க... உன் சேலை தான் குடையானது...!!!
நீச்சல் பழக... என் இடுப்பில் கட்டியதும் உன் சேலை தான்...!!!!
மழையில் நனைந்த என் தலையை... துவட்டியதும் உன் சேலைதான்...!!!
மாம் பழம் தின்று என் கை துடைத்தும் உன் சேலைதானம்மா...!!!
ஆசிரியரின் மிரட்டலுக்கு... ஓடி ஒளிந்ததும் உன் சேலைதான்...!!!
அப்பா அடிக்க வரும் போது... என்னை ஒலித்து வைத்ததும்... உன் சேலைதானம்மா...!!!
அண்ணனுக்கு தெரியாமல் மறைத்து வைத்து... மிட்டாய் கொடுத்ததும் உன் சேலைதான்...!!!
காசு எடுத்தால் என்னை கட்டி வைத்து அடித்ததும்... உன் சேலை தான்...!!!
தலை வழிக்கு ஒத்தடம் கொடுத்தும்... உன் சேலைதான் அம்மா...!!!
அம்மா உன் சேலையை தொட்டு பார்கிறேன்...!! தொலைந்த இன்பத்தை உன் கண்ணில் பார்கிறேன்...!!!
மறு பிறவியிலும் நீயே வேண்டுமென்று... இறைவனிடம் கேட்கிறேன்...அம்மாவாக....

No comments: