Friday, November 3, 2017

சிந்தனைக்கு சில வரிகள்...

🚩வாழ்க்கையில் நாம் நாள்தோறும் பேசும் வார்த்தைகளில் நடக்காது, முடியாது, கிடைக்காது, போன்ற எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.
நீங்கள் கூறும் சொற்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தவை, எப்போதும் நேர்மறையான  வார்த்தைகளையே பயன்படுத்துங்கள்.
🚩சிறிதளவு ஊக்கம் ஒரு பெரிய சாதனையின் துவக்கமாகும் ஈட்டி முனையால் சாதிக்க முடியாததைக்கூட இதய கனிவால் சாதிக்க முடியும்.
🚩ஒருவன் சுயநலமாய் மட்டும் இருப்பது தவறாகும் . ஆனாலும் அந்த சுயநலத்தில் அடுத்தவர் நலன் பாதிக்கப்படாத அளவுக்கும் மற்றும் பொதுநலமும் கலந்து இருந்தால் நிச்சயம் தவறில்லை.
🚩சொல்லும் செயலும் தூய்மையாக இருக்க வேண்டும். சொல்வதொன்றும் செய்வது வேறாக இருந்தால் இறுதியாக அது தீமையில் தான் முடியும்.
🚩அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும். அவற்றைக் கடந்து சென்றால்  அவை சிறிதாகிவிடும் (கஷ்டம்). இருக்கும் இடத்தில் இந்த நொடியில் இன்பமாக இரு. இதுவே வாழ்க்கை.           
🚩இளமைக்காலம் : சக்தி இருக்கும், நேரம் இருக்கும், பணம் இருக்காது.
உழைக்கும் காலம் : பணம் இருக்கும், சக்தி இருக்கும், நேரம் இருக்காது.
முதுமைக் காலம் : நேரம் இருக்கும், பணம் இருக்கும், சக்தி இருக்காது.
அதனால் பணத்தின் பின்னே ஓடாமல் வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்போம்.
🚩நமது வார்த்தைகளில் இனிமையும், பணிவும் நிறைந்திருந்து, அகங்காரமற்றதாக இருந்தால் மட்டுமே பிறர் அதை கவனத்துடன் கேட்க முற்படுவார்கள். பேசுகிறவன் விதைக்கிறான், கேட்பவன் அறுவடை செய்கிறான்.
🚩வறுமைல வாடுறவன் உணவ தேடுறான்.. வயிறு நெறஞ்சவன் வசதிய தேடுறான் .. வசதி நெறஞ்சவன் புகழ தேடுறான்... ஆனா மனசு நெறஞ்சவன் வாழ்வை மகிழ்ச்சியா வாழ்றான்..
🚩தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்​.

No comments: