Saturday, March 17, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 10

பாபாசாகேப்பின் புரட்சி நம்மிடமிருந்த ஆட்சி ஆரியனிடம் போனதும் முதலில் பறிபோனது நம் கல்வியும், பொருளாதாரமும்தான். பிரிட்டிஷ் ஆட்சியில் நமக்கு வந்ததும் இந்த இரண்டும்தான். எப்படி? 1919ல் government of act சட்டத்தால ''அனைவருக்கும் கல்வி'' என எல்லா குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி என்ற விஷயம் கிடைத்தது. கல்வியால் வேலைவாய்ப்பும் கிடைச்சிச்சு. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் நம்ம சூத்திர சமுதாயத்தை சேர்ந்த குறிப்பா ''தீண்ட முடியாதோர்'' 4 பேரை நியமனம் பண்ணினாங்க. இது எதுக்குன்னா, இந்த சட்டம் ஒழுங்கா நடைமுறைப் படுத்தபடுகிறதா என்ற சர்வே எடுக்க. இதை 10 வருடமாவது தீவிரமா நடைமுறைப்படுத்த ஒரு கமிட்டி அமைத்து கண்காணிப்பது என்று முடிவானது. அந்த கமிட்டிக்கு பெயர்தான் ''சைமன் கமிட்டி''. பாபாசாகேப் கல்வியை முடித்து வந்ததும், ''ஒதுக்கப்பட்டோர் நலசங்கம்'' என்ற அமைப்பின் சார்பில் பிரதிநிதியாக பங்கெடுத்து, இந்த சட்டத்தின் மூலம் நமக்கு பல சலுகைகள், உரிமைகளை மீட்டெடுக்க முயற்சித்தார். ஆனால் நடைமுறையில் 10% கூட வரவில்லை. ஏன்னா எல்லா நகரங்களிலும் ஆங்கில மீடியம் இருக்குது. ஆனால் கிராமங்களில் பள்ளியே கிடையாது. பள்ளி இருந்தால் மாணவர்களை சேர்ப்பது கிடையாது. சேர்த்தாலும் சூத்திரர்களை ஒதுக்கி வைத்தார்கள். எல்லா கிராமங்களிலும் தீண்டாமை தலைவிரித்தாடியது. படிச்சி வேலைக்கு சேர்ந்தாலும் தீண்டாமை இருந்தது. டாக்டராகலாம், ஆனா நோயாளியை தொடக்கூடாது. ஊசி கூட கம்பவுண்டரை வைத்துதான் போட வேண்டும். ஸ்டெதஸ்கோப் காதில் இருந்தாலும், மார்பில் வைத்து பார்க்க ஆதிக்கசாதிதான் தொடணும். தாசில்தார் ஆகலாம். ஆனால் பியூன் வந்தால் எந்திரிச்சி நிக்கணும். ஏன்னா பியூன் உயர்சாதி. கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க இதை.
இதெல்லாம் எப்படி நடக்குது? சட்டசபையில் வந்து சட்டத்தை நிறைவேத்துர இடத்தில் சூத்திரர் சார்பாக யாருமே இல்லை. ஏன் இல்லை? இவனுக்கு ஓட்டு போடுற உரிமை இல்லை. ஓட்டு போட்டு எம்.எல்.ஏ. தேர்ந்தெடுக்க முடியலை. அப்ப ஓட்டு யாருக்கு இருந்தது? நிலமிருக்கிற ஜமீனுக்கு, வரி கட்டுற பணக்காரனுக்கு, கல்வி கற்ற பட்டதாரிக்கு இருந்தது. பாப்பானுங்க பட்டதாரி, ஷத்திரியர்கள் ஜமீன், வைசியர் வரி கட்டுறதால ஓட்டு அவங்க 3 பேருக்குதான். அதனால அவன் வைச்சதுதான் சட்டமாச்சி. சூத்திரனுக்கு ஓட்டு கிடையாது? ஏன்னா இவன் வரி கட்டலை, நிலமில்லை, கல்வியுமில்லை. அதனால்தான் பாபாசாகேப் பிரிட்டிஷாரிடம் சொன்னார். ''நீங்க இப்படி பார்த்தா இந்திய தேசத்தில் 2 சதவீதமுள்ள மேல்தட்டு மக்களுக்குதான் ஓட்டு கிடைக்கும்''. ''அப்ப எப்படி பார்க்கணும்?'' ''எல்லா ஜனங்களுக்கும் 21 வயது ஆகிறதோ, அவர்களுக்கு ஓட்டு கொடுத்தால்தான் சேரியிலுள்ளவன் கூட ஓட்டு போடுவான். சேரியிலிருப்பவனுக்கு என்ன தேவைன்னு சேரியிலுள்ளவனுக்குதான் தெரியும். பண்ணையாருக்கு என்ன தெரியும்? சேரியில ஒருத்தன் சட்டசபையில் இருக்கணும்னா, சேரியிலுள்ளவன்தான் ஓட்டு போடணும். அதனால யாருக்கு 21 வயது ஆகிறதோ அவங்கெல்லாம் ஓட்டு போடலாம்'' என்றார் பாபாசாகேப். இன்றைக்கு குவார்ட்டர்க்கும், கோழி பிரியாணிக்கும் இந்த ஓட்டு விக்கிறவங்களுக்கு தெரியுமா இந்த ஓட்டு வந்த வரலாறு, அதன் பின்னேயுள்ள வலி, போராட்டங்கள்? ஆனாலும் அவங்களுக்கு கத்துக்கொடுக்க வேண்டியது நமது கடமை. படித்தவர்களே சொல்ல கேட்டிருக்கேன். இவன்ட்டயும் வாங்கிக்க. அவன்ட்டயும் வாங்கிக்க. ஓட்டு யாருக்காச்சும் போட்டுக்க. ஆனா பாபாசாகேப் விரும்புவது கோடி ரூபா கொடுத்தாலும் ''என் ஓட்டு விற்பனைக்கல்ல'' எனகூறும் திமிர் நமக்கு இருக்கிறதா?
21 வயது வந்தால் ஓட்டு (தற்போது 18) என்பது எல்லாருக்கும் சம நீதியாகும் இல்லையா? இதைத்தான் பாபாசாகேப் வலியுறுத்தினார். பிரிட்டிஷாரும் ஏற்றுக் கொண்டனர். சரி. நமக்கு ஓட்டுரிமை வந்தாச்சி. ஆனா நமக்கு யாரு ஓட்டு போடுவா? இப்போ கூட பாருங்க. நோட்டாவிற்கு எங்கே அதிகமாய் ஓட்டு விழுதுன்னா? அது தனித்தொகுதியில்தான். தனித்தொகுதி அறிவிச்ச பிறகே ஓட்டு போட மறுக்கும் காலம் இதுன்னா, அப்போது எப்படியிருந்திருக்கும்? எல்லாமே பொதுத்தொகுதி என்றால், நம்ம பள்ள, பறைய, சக்கிலியர் சட்ட, பாராளுமன்றத்தில் இருக்க முடியுமா? இதை உணர்ந்தே பாபாசாகேப் சொன்னார் ''ஓட்டுரிமை கிடைச்ச யாருமே M.L.A., M.P. ஆக முடியாது. எனவே எங்களுக்கு தனித்தொகுதி கொடுங்கள். அதாவது அங்கே நாங்க மட்டும்தான் போட்டியிடணும். எங்கள் மக்கள் மட்டும்தான் எங்களுக்கு ஓட்டு போடணும். எங்க மக்களின் ஓட்டு எவன் அதிகம் பெறுகிறானோ? அவன்தான் எங்க பிரதிநிதியா சட்ட, பாராளுமன்றம் செல்வான்''. இதற்கு வெள்ளைக்காரன் ஒத்துக்கிட்டான். ஆனா இந்த நாட்டின் கொள்ளைக்காரன் ஒத்துக்கலை. குறிப்பா காங்கிரஸ். ஏன் ஒத்துக்கலைன்னா, ''நீயும், நானும் இந்துவாய் இருக்கறச்ச ஏன் தனித்தொகுதி கேட்கிறே? நாமெல்லாம் இந்துதானே? ஏன் பிரிந்து போறீங்க? நீங்க பிரிந்தா இந்து மதம் இரண்டாய் உடையும்'' என்றார்கள். அதற்கு பாபாசாகேப் ''இப்ப மட்டும் சேர்ந்தா இருக்கிறோம்? ஊரும், சேரியும் பிரிஞ்சுதானே இருக்கு. நாங்களும் இந்து என்கிறாய். பின்ன ஏன் நாயும், நரியும் குடிக்கிற செளதார் குளத்தில் எங்களுக்கு தண்ணீர் தரலை? உன் காலாராம் கோயில்ல எங்களை ஏன் உள்ளே விடலை? எப்படிய்யா நீயும், நானும் இந்து என்கிரே?'' என்றார். இதை கேட்ட வெள்ளைக்காரன் ''பாபாசாகேப் சொல்றதுதான் சரி'' என ஒத்துக்கொண்டான். ஆனா?
- தொடரும்

No comments: