Tuesday, March 6, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 2

2000 வருஷமா சில பேர் மட்டுமே படிக்கணும், சில பேர் மட்டுமே ஆட்சி செய்யணும், சிலபேர் மட்டுமே தொழில் செய்யணும், மீதியுள்ளவங்க இந்த மூவருக்கும் சேவகம் பண்ணுற அடிமையா வைத்தது கடவுள்தான்னு, கடவுள் மேலே பழியை போட்டு, கதை கதையா எழுதி வைச்சுட்டாங்க. அதை சட்டமாகவும் ஆக்கினாங்க. அதுதான் ''மனுநீதி, மனுஸ்மிருதி, மனுதர்மம்''. மேலேயுள்ள படத்தை பாருங்க.  எல்லோருக்கும் மேலே பிராமணன். கல்வி அவனுக்கு மட்டும்தான் ரிசர்வ். அதேதான் அரசனுக்கும் ''ஆட்சி என்னைக்குமே அவனுக்கு ரிசர்வ்''. வைசியனுக்கு தொழில் ரிசர்வ். பாருங்க. இந்த மூனு பேருக்கும் சேவை செய்வதே சூத்திரனுக்கு ரிசர்வ். இதுதான் சாதியை ஆதரிக்கும் ரிசர்வேசன். இப்போ உள்ள சாதியை எதிர்த்த இட ஒதுக்கீடுதான், அரசியல் அமைப்பு சட்டம்.
இந்த சாதிய அடிப்படையிலான மனுஸ்மிருதி என்ற அமைப்பினால், 2000 வருஷமா கீழே அடங்கி அடிமையாக இருந்துட்டு, இப்போதுதான் கல்வி, வேலைவாய்ப்பு சூத்திரனுக்கு கிடைக்கிறதென்றால் நாம என்ன நினைக்கிறோம்னா, ''நாம அடிமையா இருக்கிறதாலதான் இதை கொடுக்கிறாங்க'' என்ற எண்ணம் வந்திடிச்சி. ஆக இந்த இட ஒதுக்கீடு வரலாறை நாம இப்படிதான் புரிஞ்சுக்கிறோம். பத்து பேரு நம்மை ''தாழ்த்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன்''ன்னு சொன்னா, பதினொறாவது ஆளா நாமே அதை சொல்லிக்கிறோம். சரி யாரால தாழ்த்தப்பட்டோம்?, தாழ்த்தப்படும் முன் நாம் யார்? இதைதான் நாம பார்க்கப்போறோம். இனிமே நாம புரிஞ்சுக்க போற விஷயம் என்னன்னா, சூத்திர, பஞ்சமரை (இந்த பஞ்சமர் 140 வருடங்களுக்கு முன்னர்தான் உருவாக்கினர்) என்ன சொல்வாங்கன்னா, ''பூர்விக குடிகள்'' அல்லது ''மண்ணின் மைந்தர்கள்''ன்னு சொல்வாங்க. யாருங்க அது? நாமதான். இதை கேள்விபட்டிருக்கீங்களா?
நம்மோட பூர்வீகமே இங்கதான். நம்ம தாத்தா, பாட்டன், முப்பாட்டன் எல்லோரும் இங்கேயே உருவானோம். சிம்பிளா இப்படி சொல்லலாம் ''இந்த மண் எப்ப உருவாச்சோ அப்பவே நாங்க இங்கே வந்துட்டோம்'' அதுதான் மண்ணின் மைந்தர்கள் என்பது. இந்த மண்ணிலேயே பிறக்கிறோம், இந்த மண்ணிலேயே இறக்கிறோம். அதனால்தான் நாம செத்தா, நம்மள மண்ணுல பொதைக்கிறாங்க. பார்ப்பான் செத்தா எரிக்கிறாங்க. ஏன்னா அவன் வந்தேரி. இந்த மண்ணுக்கு அவன் சொந்தமில்லை. அதுதான் நாம எந்த நாட்டில் இருந்தாலும் ''நான் செத்தா என் சொந்த ஊரில்தான் அடக்கம் பண்ணணும்னு'' நாம சொல்றோம். இந்த மண்ணை நேசிக்கிறோம். இதுக்கு என்ன அர்த்தம்னா ''இந்த மண்ணுல இருக்கிற நாம செத்தா இந்த மண்ணுக்கே வந்திடணும்''னுதான். ஆக இந்த மண்ணின் மைந்தர்களான நமக்கு, இந்த மண்ணுல பொறந்த நமக்கு, எத்தனை ஏக்கர் மண்ணிருக்கு? அதாவது எத்தனை ஏக்கர் நிலமிருக்கு? 10 ஏக்கருக்கு மேலே யாராவது வைச்சிருந்தா சொல்லுங்க.    
மண்ணின் மைந்தர்களான நமக்கு 10 ஏக்கர் கூட நிலமில்லாத நிலைக்கு என்ன காரணம்? இந்த மண்ணின் மைந்தர்களான நாம முதலாளியா இருந்தோமா? அடிமையாயிருந்தோமா? கண்டிப்பா முதலாளியாகத்தான் இருந்திருப்போம். ஆனா இப்ப நம்ம மண்ணுலேயே நாம அடிமையாயிருக்க காரணம் என்ன? வித்திருந்தா அதுக்கு துட்டு வந்திருக்கும் இல்லையா? அப்ப இடையிலே என்னமோ நடந்திருக்கும்தானே, இப்ப நாம கொஞ்சம் வசதியான உடனே நாம நம்ம மண்ணை, உறவுகளை, உதாசினபடுத்த ஆரம்பித்து விடுகிறோம். அரசாங்க வேலையில் இணைந்தவுடனே நம் சமுதாய உறவுகளை துண்டித்து விடுகிறோம். சேரி, காலனியை தாண்டி ஊருக்கு போனவுடனே ''ஊரோடு ஒத்து'' போக ஆரம்பித்து விடுகிறோம். ஊராருக்கு தேசபக்தி வந்தால் நமக்கும் வந்து விடுகிறது. கலாமுக்கு வருந்துகிறோம், சுந்தர் பிச்சைக்கு (C.E.O.) பெருமையடைகிறோம். நாம் எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாதுன்னு வேறொருத்தன் முடிவெடுக்கிறான். ''ஊரோடு ஒத்து'' வாழலைன்னா எங்கே நம்ம தேசபக்தி காணாம போயிடுமோன்னு பயப்படுகிறோம். நம்மை திசைதிருப்ப 1000 வேலைகள் நடக்குது. இதெல்லாமே என்னையும் சேர்த்துதான். ஆக நம்ம உண்மையான வரலாறுதான் என்ன? ரிசர்வேசன் வரலாறுதான் என்ன? இதைதான் இனிமே நம்ம கண்ணுல பார்க்க போறோம். தயாரா?

No comments: