Tuesday, March 6, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 3

பாபாசாகேப் சொல்கிறார் ''தன் வரலாறு தெரியாதவன் வரலாறு படைக்க முடியாது'' ''know what your history, never create a history''ன்னு சொல்றார். நம் வரலாறை எங்கே பார்க்கணும்னா, அது பாபாசாகேப் புத்தகங்களில் உள்ளது. நாம ஸ்கூல்ல வரலாறு படிச்சிருக்கோம். அது என்ன சொல்லுதுன்னா ' இந்திய நாட்டின் வரலாறு என்பது ஆரியர்களின் வருகைக்கு பிறகுதான் தொடங்குது''ன்னு சொல்லுது. அப்ப இந்த ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவங்க. ஆரியர்களுக்கு முன்னாடி இந்த நாட்டில் மக்களே கிடையாதா? இருந்தாங்க. அவங்க யார்? பாபாசாகேப் சொல்கிறார். அவர்கள்தான் நாகா'ஸ், (நாகர்கள்). இந்த நாகர்கள் வாழும் இடத்திற்கு பெயர் நகரம் (சிட்டி). நாகர்கள் வாழ்ந்த விதம்தான் நாகரிகம். இதை பாபாசாகேப்பின் ''தீண்டபடாதவர்கள் யார்?'' (Untouchables, who are they??'')ல் குறிப்பிடுகிறார். நம்முடைய வரலாற்றை பாபாசாகேப் அம்பேத்கருக்கு முன்பு வேறு எவறுமே எழுதவில்லை. எழுதியதற்கு பின்பு அதை எவராலும் மறுதலிக்கவும் முடியவில்லை. அப்படியான ஆதாரங்களை அடிக்குறிப்பிட்டு வழங்கியுள்ளார். அதில் அவர் சொல்வது என்ன? நாம் காலகாலமாய் பிச்சைகாரர்கள், அகதி, அநாதை என்று எழுதலை. ''இந்த மண்ணுக்கு சொந்தகாரர்கள் தான் நாகர்கள். இவர்களின் மொழி தமிழ்.  இது அப்பொழுது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு குமரி முதல் காஷ்மீர் வரை பேசப்படும் மொழியாயிருந்தது. இப்ப இந்த தமிழை தமிழ்நாட்டில் மட்டும் அதுவுமே தங்ளிஸ்தான் பேசறாங்க. உலகத்திலேயே மூத்த மொழியாய் தமிழ்தான் இருந்திருக்க வேண்டும். இலக்கணம் இருந்த மொழினா அது தமிழ்தான். அந்த காலத்தில் சிலம்பம் கற்கும்போதே தமிழையும் பாடமாக கற்றுக்கொள்வார்கள்.
'அ' என்று ஆரம்பமாகும் சிலம்பம், 'ஆ' என்பது இரண்டாவது ஸ்டெப். இப்படியாக தமிழில் எத்தனை எழுத்துகள் இருக்குமோ, அத்தனையும் சிலம்பம் வீச தெரிந்தால் அவன்தான் மொழியிலும், வீரத்திலும் நம்பர் 1. அப்படி சிலம்பமுடன் அறிவையும் கற்றுக்கொண்ட  நம் முன்னோரெல்லாம், எல்லாவற்றிலும் கைதேர்ந்தவர்கள். (இன்று இந்த சிலம்பத்தை ஆர்.எஸ்.எஸ். குரூப் கையில் எடுத்து நம் காலனிகளிலும், சேரிகளிலும் நுழைகிறார்கள், யோகா. சிலம்பத்தை விட ஆரிய வேதத்தை கற்று கொடுப்பதுதான் அவர்கள் பிளான்). நம் முன்னோர் சிலம்பத்தில் பாடல் பாடுகிறார்கள். அந்த பாட்டிற்கும், சிலம்பத்திற்கும் ஒரு தொடர்புள்ளது. அதற்கு இசைஞானி போன்றவர்கள்தான் அர்த்தம் சொல்ல முடியும். இப்பவும் உலகிலுள்ள அனைத்து மொழிக்கும் வேர் இந்த தமிழ்தான் என்கிறார்கள். (இந்த தமிழ்மொழி தமிழ்நாட்டிலேயே முடக்கபட்டது. அதற்கு இப்பொழுது கூட சில தலைவர்கள் உணர்ச்சியை தூண்டி, துண்டாடும் நிலை). இப்படிபட்ட ஞானமுள்ள சமுதாயத்தை 'புத்தி கம்மியான முட்டாள் இனம்'' என யாராவது சொல்ல முடியுமா? அப்ப ஏதோ நடந்திருக்கிறது என்பதை உணர முடிகிறதா? அது என்னன்னு பாபாசாகேப் பார்வையில் நம் வரலாற்றை பார்க்க போகிறோம். பார்ப்போமா?
இப்படிபட்ட தமிழ்மொழி பேசிய, பாரதம் முழுவதும் பரவியிருந்த நாகர்களின் தென்னாட்டில் நடந்ததை பார்ப்போம். இங்கே சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் ஆட்சி வரலாற்றை ஆராயும்போது, அதில் ''சேரி'' என்ற வார்த்தை எங்கேயுமே வரவில்லை. அதை போல் ''சாதி'' என்ற விஷயமும் இல்லை. இனம், குலம் உண்டு, ஆனால் சாதி என்பது இல்லை. அப்படின்னா சாதி, சேரி என்பது நடுவுல எப்ப வந்தது? இது முதல் கேள்வி.இரண்டாவதாக, சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் 2000 வருஷம் ஆட்சி செய்தவர்கள். அதன் வம்சம் இப்போ எங்கே? வெளியிலிருந்து வந்த ஆரியர் வம்சம், முகலாயர் வம்சம், கிறித்துவ இனம் இருக்கு. ஏன் 8000 வருஷத்துக்கு முந்தைய யூத இனம் கூட மும்பை நாரிமன் மேடு, தூத்துக்குடி சீயோன் என்ற பகுதிகளில் உள்ளபோது, வெறும் 400, 500 வருஷத்திற்கு முன்பிருந்த இந்த அரச வம்சம் என்னவானது? மூணாவதா அப்ப இல்லாத சேரிகள் இப்ப எப்படி வந்தது?
இராமாயணம், மகாபாரதம், கீதை போன்ற புராணங்களை சிலர் படித்திருப்பீர்கள். அதில் வரும் பாத்திரங்களான பிராமணர், சத்திரியன், தேவர்கள், ராட்சதர்கள் போன்ற பாத்திரங்கள் வருகிறது. அதில் வரும் பிராமணர்கள் இன்னும் இருக்காங்க. தேவர்கள் எங்கே? சரி சொர்க்கத்தில் இருப்பதாக எடுத்து கொள்ளுவோம். ராட்சதர்கள் எங்கே? அவங்க இருந்துதானே ஆகணும். அவர்களை எப்படி அடையாளபடுத்தினாங்க. கருப்பா, தடியா, வாயில் பல்லோடு, கொம்போடு காட்டினாங்க. மத்ததை விடுங்க. கருப்பா இப்போ யாரு இருக்கா? அட அது நாமதாங்க. பாபாசாகேப் என்ன சொல்றாருன்னா, ''இந்திய வரலாற்றைதான் கொஞ்சம் பொய் கலந்து புராணமாக எழூதியிருக்கிறார்கள். குழந்தை, பெண்களை கவரும் கதையாக்கிட்டாங்க. ராமன் என்பவன் ராமாயணத்தில் மட்டுமல்ல, மகாபாரதத்திலும் உள்ளான் இராகுவண்ணனாக. இராவணன், கிருஷ்ணன், துரியோதணன், பீமன் எல்லோருமே இருந்தாங்க. இந்த ராவணன் இருந்தானே, அவன் பரம்பரை என்னாச்சி? புராணத்தில் வரவங்க வரலாற்றில் மிஸ்ஸிங். வரலாற்றில் சேரக்கூடாதுன்னு நீக்கியிருக்காங்க. அதைப்போல் மெளரியர்கள், குஷாணர், சாக்கியர் இருந்தாங்க. இப்ப அவங்க பரம்பரை என்னாச்சி? அதுக்கு பதிலா கவுண்டர், தேவர், பள்ளர், நாடார், பறையர், கோனார், வன்னியன், சக்கிலியர்ன்னு வந்தாங்க. திடீரென எங்கேயிருந்து வந்தது? 500 வருஷத்திற்கு முன்பு இவங்க எவனுமே இல்லையே? இதை வைத்து பாபாசாகேப் என்ன சொல்றாருன்னா... தொடரும்

No comments: