Tuesday, March 6, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 4

பாபாசாகேப் என்ன சொல்றாருன்னா, இந்த நாகர்களாக இருந்தவர்கள், ஆட்சியில் உள்ளபோது சாதியே இல்லை. நாக அரசர்களுக்குள் போர் இருந்தாலும் ஒரு வம்சம், இன்னொரு வம்சத்தை அழித்தது இல்லை. ஆட்சி மாறும், ஆனால் வம்சத்தை அழிப்பவர்கள் இல்லை அவர்கள். வம்சம் அழியலைனா ஒட்டுமொத்த நாக வம்சங்கள் எங்கே போனார்கள்? தமிழ்நாட்டில் முக்கியமா 13ம் நூற்றாண்டுல்தான் இந்த பிரச்சனை ஆரம்பமாகுது. வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் ''அரச வம்சத்தில் புகுந்து''  சண்டைமூட்டி, ஒருத்தருக்கு விரோதமாய் பூசல்களை கிளப்பி, அதே சமயம் வெளியிலிருந்நு ஈரானிய, ஆப்கன் படையை கொண்டு,  போருக்கு முன் அரசனின் சகோதரரை (அ) உறவினரை ''நான் உன்னை அரசனாக்கிறேன்'' என்பதாக கூறி,  தன் வயப்படுத்தி, நடந்த சூழ்ச்சிதான் ''புராணம்'' என்பதாக கூறுகிறார். எப்படி?இராவணனை கொன்னுட்டு விபூசணனை அரசனாக்கினாங்க. விபூசணன் வம்சம் என்னவாயிற்று? இரணியனை அழிச்சி பிரகலாதனை அரசனாக்கினாங்க. பிரகலாதன் வம்சம் என்னவாச்சு? வாலியை கொன்று சுக்ரீவனை கொண்டு வராங்க. சுக்ரீவன் வம்சம் எங்கே? அண்ணனை கொன்று அவன் தம்பி பலராமனை கொண்டு வாராங்க. பலராமன் வம்சம் எங்கே? மாபலி சக்கரவர்த்தி இன்னும் சில என புராணங்கள் முழுவதும் சூழ்ச்சி, துரோக வரலாறுதான். இதில் நாம் கவனிக்க வேண்டியது மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை, போரில் தோற்கடிக்க முடியாதலால்,  சகோதர உறவுகளை அரசனுக்கு எதிரா நிறுத்தி கொணர்ந்த தம்பிங்க என்னவானாங்க? அவங்க வம்சம் என்னவாச்சு?
கடந்த பதிவின் போது சூழ்ச்சி செய்து, பெரிய சாம்ராஜ்யங்களை அவர் சகோதரர்களை கொண்டே வீழ்ச்சியடைய செய்தார்கள் ஆரியர்கள். வீழ்ந்த அரசனுக்கு பின் வந்த சகோதரர்கள் வம்சம் என்னவானது? என்பதாக முடித்திருந்தேன். அதாவது தம்பிக்கு உதவிய பின் அந்த நாட்டின் ஒட்டுமொத்த கண்ட்ரோல் ஆரியன் வசமானது. தம்பிக்கு ராஜகுரு பார்ப்பனனானான். ஆக தம்பி ஆட்சி நடக்கலை. பார்ப்பனனோட மனுஸ்மிருதி சட்டம்தான் நடைமுறையானது. அரசன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டான். ராஜகுரு முதலிடம். (பிராமணன், ஷத்திரி, வைசியன், சூத்திரன்) ராஜகுரு சொல்வதை அரசன் கேட்க ஆரம்பித்து விட்டான். முதலிடத்தை இழந்ததால் அரசன் டம்மி பீஸ் ஆகிட்டான். (அந்த நடைமுறைதான் இப்போவரைக்கும். சோனியாவுக்கு ஒரு டம்மி பீஸ் மன்மோகன் சிங், ஆர்.எஸ்.எஸ்க்கு ஒரு டம்மி பீஸ் நரேந்திர மோதி. இவன் ஊரை சுத்துவான். ஆர்.எஸ்.எஸ். ஆட்சி நடத்துவான். யார் ஆட்சிக்கு வந்தாலும் பார்ப்பான் வாழ்வான், சூத்திரன் சாவான். உ-ம் கம்யூனிச தலைவர் பிரகாஷ் கரத் கூட பார்ப்பான்தான். மதத்தின் பேரில் அரசியல் செய்யும் பார்ப்பனர்கள் அந்த மதத்திலுள்ள சூத்திரர்களுக்கு என்ன நன்மை செய்தார்கள்? ஏன் கெடுதி மட்டும் செய்கிறார்கள்? ஏன்னா அதுதான் மனுதர்ம சட்டம். சூத்திரன் தனக்கு மேல் உள்ள மூணு வர்ணத்துக்கும் சேவை செய்வதுதான் மனு தர்மம். கோமாதாவிற்காக கண்ணீர் விடுறவங்தான் சூத்திரன் கழுத்தறுக்கிறான். வெறும் ஓட்டு வங்கிக்காக மட்டும் மதத்தை வைத்து அரசியல் பண்றான். அதை எதிர்த்து அரசியல் பண்றவங்களுக்கும் பார்ப்பான்தான் தலைவன்னா, சூத்திரனை பாபாசாகேப்தான் காப்பாற்ற வேண்டும்.) எப்படி?
ஆக அரசன் டம்மியாயிட்டதால அவனுக்கு வரலாற்றில் இடம் கிடையாது. ஏன்னா முதலிடத்திற்குதான் வரலாற்றில் இடம். இவன் ஆரியனை எதிர்த்து சாதிச்சிருந்தா, அவன் வரலாறும் வந்திருக்கும். எப்ப பார்பானுக்கு கீழே என்றானதோ, அப்பவே தன் வரலாற்றை தானே அழித்தான் தன் சுயநலத்துக்காக. ஒருவேளை கொஞ்சம் தன்மானம் வந்தாலும், ஆரியன் படைத்தளபதியுடன் வேறொரு  அரசனின் உதவியுடன், இவனை காலி செய்து புது அரசனுடன் சேர்ந்துக்குவாங்க. தமிழ்நாட்டில் முகலாயர்கள், மங்கோலியன் வருகை 15ம் நூற்றாண்டுக்கு மேல்தான். அப்ப யாரெல்லாம் இந்த அரசனுக்கு ராஜகுருவாய் இருந்தாங்களோ, இவங்களெல்லாம் முகலாயர்களுக்கு ஆதரவா இங்கே இருந்த அரசனோட தம்பி, மச்சான், மாமாவை தன்னுடன்  சேர்த்து, வீழ்த்தினார்கள். ஆட்சியை இழந்த அரசன், பிச்சைகாரனானான். ஏன்னா, அரசனுக்கு நாடே சொந்தம். வீழ்ச்சிக்குபின் எல்லாம் கைவிட்டு போகும். அரசன் என்பதால் அரசியல் தவிர வேறு தொழில் தெரியாது. பாபாசாகேப் சொல்கிறார் 'அந்த பிச்சைக்காரனின் குடியிருப்புக்கு பெயர்தான் சேரி'. இப்போது சொந்த நிலம் கிடையாது. அவனோட வீழ்ச்சிக்கான காரணம் என்னன்னா, 1. அவர்கள் தனித்தனியாக இருந்தது. 2. எதிரிகளை ஈசியா ஜெயிக்கலாம். ஆனால் துரோகிகளை ஜெயிக்க முடியாமல் போனது. ஏன்னா கூட இருந்த சகோதரனோ, மாமனோ, மச்சானோ, சேனாதிபதியோ, தளபதியோதான் துரோகிகளாகி விட்டார்கள். எனவே மண்ணின் மைந்தன் இப்போது பிச்சைக்காரன். அதனால்தான் இந்த சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களை தோற்கடித்த பெரிய போர்கள் என்று வரலாற்றில் எங்கும் இல்லை. நடந்தது பச்சைத் துரோகம் ஒன்றுதான். ஆரியனின் சூழ்ச்சிக்கு அரசனோட கூட இருந்தவங்கதான் துணை நின்றாங்க.அவங்க யாரு? என்னவானாங்க?
ஆரிய பார்ப்பான் கூட சேர்ந்து துரோகம் இழைத்தவர்கள் இன்றைக்கும் நிலத்தை வைத்திருப்பவர்கள். பிற்படுத்தபட்டவர்களில் சிலர் செழிப்பா இருக்க, இதுதான் காரணம். பிச்சைகாரன் யாருன்னா இவர்களால் துரோகம் இழைக்கபட்ட சேரி மக்கள். காரணம் ஒன்றுதான். போரில் எதிர்வரும் சேனையை அழிக்க முடியும். கூட நின்ற சேனாதிபதியே எதிரிகளிடம் விலைபோய், அதாவது '' நான் வென்றால் உன்னை ஆட்சியில் வைப்பேன்'' என்ற வார்த்தையை நம்பி, போரின்போது சொந்த அரசனையே கொன்று, தான் அரசனான பின்னும் இவனை பார்ப்பான் விட்டுவைக்கவில்லை. ஏன்?தனது அரசனுக்கே விசுவாசமில்லாத இவனை விட்டா நமக்கு எப்படி விசுவாசமா இருப்பான்? என்பதால் இவனையும் காலி பண்ணிடுறாங்க. இப்படிதான் அதிகாரம் நம்ம கைய விட்டு போயிடிச்சி.
- தொடரும்

No comments: