Friday, March 9, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 8

பூலே யோசித்து , யோசித்து இரவு 11 மணிக்கு விடை கிடைத்தது. அது என்னன்னா? ''இவங்களுக்கெல்லாம் இல்லாத அவமானம் எனக்கு தோன்றுவதற்கு காரணம் என் கல்விதான். அதனால்தான் எனக்கு தன்மானம் வந்திருக்கு. தன்மானம் வந்ததால் முகம் வாடிடிச்சி'' என்பதை உணர்ந்தார். ஏனென்றால், இவர் படிச்சது ஆங்கில பள்ளியில். அங்கே ''மனிதர்கள் எல்லோரும் சமம்'' என்று கற்றுக் கொடுத்தாங்க. ஆனா இந்த மகர்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம் எல்லாம் ''அடிமையாய் இரு'' என்பதே. அதாவது ''பிச்சை எடுப்பது உன் கடமை. இதை தவிர வேறு எதுவும் செய்யக்கூடாது'' என்பது. இவன் கீழ்சாதியாய் இருப்பதால்தான், அவன் மேல் சாதியாய் இருக்கிறான். நான் படித்தால் மட்டும் போதாது. இவர்களும் என்னை மாதிரி சிந்திக்கணும், என்னை மாதிரி தன்மானத்துடன் வாழணும்ன்னா, நான் படிச்ச கல்வியை இவர்களுக்கும் கத்துக் கொடுக்கணும்'' என்று முடிவெடுத்து 1848ல் பள்ளிக்கூடம் ஆரம்பித்தார். இதுதான்  சூத்திரர்களுக்காக ஆரம்பிக்கபபட்ட முதல் பள்ளிக்கூடம். அதுவும் பெண்களுக்காக முதலில் ஆரம்பிக்கப்பட்டது. முதல் டீச்சர் யாருண்ணா, பூலேயின் மனைவி ''சாவித்ரி பூலே''. இவங்க இரண்டு பேரும் 40 வருஷம் பல போராட்டங்களை சந்தித்தும், பல தாக்குதலை எதிர்கொண்டும், பல இழிவுகளை சந்தித்தும், படிப்படியாக மொத்தம் 22 பள்ளிக்கூடமாக மாற்றினார்கள்.நம் பாபாசாகேப்பின் தந்தை இந்த பள்ளியில்தான் படித்தார். இப்படியாகத்தான் நமக்கு கல்வி புரட்சியின் முதல் கட்டம் ஆரம்பமானது.இன்றைக்கு நம்ம கைல மொபைல் இருக்கு, பேன்ட், செறுப்பு, வேலை, கல்வி என எல்லாமே வந்திருக்கிறது. ஆனால் இது நம் கைக்கு  வருவதற்கு பலபேரோட போராட்ட வாழ்க்கை இருக்கு. இதைத்தான் நாம முதலில் தெரிஞ்சிக்கணும். பார்ப்போமா?
இப்படியாக கல்வி புரட்சி நமக்கு பூலேயினால் கிடைத்தது. அடுத்தது,2. இட ஒதுக்கீடு புரட்சி.           கல்வி கிடைச்சிடுச்சி. ஓ.கே. இப்ப படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க கஷ்டமாச்சி. ஏன்னா, எங்கே வேலைக்கு போனாலும், பார்ப்பான்தான் இன்டர்வியூ எடுக்கிறான். அப்ப எப்படி வேலை கிடைக்கும்? இந்த புரட்சி சூத்திரர்களுக்கு கிடைக்க காரணம், மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் அரசர் சத்ரபதி சாகு மகராஜ் அரசர். இவர் சிவாஜியின் வம்சத்தில் வந்த பேரன். இவரும் மற்ற அரசர்கள் போல் 10, 11 பொண்டாட்டி கட்டி, ஜாலியா இருந்திருந்தா பார்ப்பானுக்கு எந்த கஷ்டமுமில்லை. ஆனா இவர் ஆங்கில மீடியத்தில் படித்து சில உண்மைகளை தெரிந்திருந்தார். இதில் இவர் வாழ்க்கையை புரட்டிபோடுற சம்பவம் நடந்தது. அது என்னவென்றால், வருஷாவருசம் அரசர்களுக்கு ஒரு சடங்கு நடக்கும். அது அரசனோட அதிகாரத்தை புதுப்பிக்க, இவர் தண்ணீரில் நிற்க, பார்ப்பானுங்க மந்திரம் சொல்வாங்க. இது பண்ணினாதான் ஆட்சி நிலைக்கும், இல்லைன்னா அழியும் என்ற நம்பிக்கையை, பார்ப்பான் உண்டு பண்ணியிருந்தான். பார்ப்பான் சமஸ்கிருதத்தில் சொல்லச்சொல்ல, இவரும் அது என்னவேன்று புரியாமல் பதிலுக்கு சொல்லும் வைபவம்தான் அது. இப்பவும்கூட பாருங்க. ஐயரு வந்து ஓதி சடங்கு வைத்து நடந்தால்தான் கெளரவமான திருமணம் என்ற எண்ணம், நம்முடைய படித்த (அ) கொஞ்சம் பணம் சேர்த்த நம் மக்களுக்கும் வந்திருக்கிறது. கல்யாணத்தில் பார்ப்பான் என்ன மந்திரம் சொல்றான்னு நாம அவனிடம் கேட்கிறதில்லை, அவனும் சொல்றதில்லை. அது என்னன்னு உங்களால சொல்ல முடியுமா?
திருமணத்தில் பார்ப்பான் ஓதும் மந்திரத்தின் அர்த்தம் ''உன் பக்கத்தில் இருக்கும் இந்த பொண்ணு 30 நாட்கள் கடவுளுடன் இருந்தாள், அப்புறம் 3 நாட்கள் தேவர்களுடன் இருந்தாள், அப்புறம் என்னிடமும் இருந்தாள். இப்ப உன் கூட இருக்கா. வேணும்னா வச்சுக்க. இல்லேன்னா விட்டுக்கோ'' அப்படியே பெண்ணிடம், ''கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன், இவன்ட்ட இருந்தா சொர்க்கம் போவ, இல்லேன்னா நரகம் போவ'' இதுதான் அந்த மந்திரம். நாமளும் பக்தியா கேட்டுக்கிறோம். இதை தமிழில் சொன்னா அவனை சும்மா விடுவீங்களா? ஆனா நாம அவனுக்கு15000 கொடுத்து அனுப்புகிறோம் நம்ம பொண்ண வேசின்னு சொன்னதுக்கு.பெரியார் ஒருமுறை கர்நாடகா பொதுக்கூட்டத்தில் பேச ஆரம்பிக்கும் முன் ''யாரெல்லாம் ஐயரை வைத்து கல்யாணம் பண்ணினீங்க''ன்னு கேட்டாரு. பிற்படுத்தபட்டவர்கள் அதிகமாய் இருந்ததால் ஏறக்குறைய அனைவரும் கைதூக்கினர். இப்போது அவருக்கு கன்னடம் தெரியாததால், தமிழில் பேச ஆரம்பித்தார். ''என் அருமை தேவடியா பசங்களா''. கூட்டத்தில் சலசலப்பு. பெரியார் மறுபடியும், ''நான் சொல்றது புரியலையா? மீண்டும் சொல்கிறேன், என் அருமை தேவடியா பசங்களா''ன்னு சொல்லி அதை கன்னட மொழிபெயர்ப்பாளரையும் சொல்ல சொன்னார். கூட்டத்தில் பெருத்த சச்சரவானது. ''இதை உங்க மொழில சொன்னதால புரிஞ்சிடுச்சி. இதையே ஐயர் உன் வீட்டு கல்யாணத்தில் சொன்னா சன்மானம் கொடுப்பீங்க''. என்றார். புது வீட்டு ஹோமம் நடத்துவது, திருமணத்தில் ஐயரை கூப்பிடுவதை பார்த்தால் எனக்கு பெரியார் சொல்வதுதான் நினைவு வரும்.இப்படிதான் சாகு மகராஜூம் சமஸ்கிருதம் தெரியாதலால் ஐயர் சொல்வதை பதிலுக்கு சொல்லி கொண்டிருந்தார். அப்பொழுதுதான்,
- தொடரும்.

No comments: