Thursday, March 15, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 9

சாகுமகராஜுவிற்கு வருஷாவருஷம் அரச பதவியை புதுப்பிக்க ஐயர் மந்திரம் ஓதுவது வழக்கம். அப்படி ஒருமுறை ஓதும்பொழுது சாகு மகராஜின் நண்பர் ராஜாராம் சாஸ்திரி உடனிருந்தார். திடீரென பார்ப்பான் கழுத்தை பிடித்து ''டேய் என்னடா சொல்ற, மந்திரத்தை வாழ்த்தி சொல்லாம, சபிச்சி சொல்றயே'' என்றார். அதுக்கு பார்ப்பான் ''சூத்திரனுக்கு இப்படித்தான் மந்திரம் சொல்லணும்னு சாஸ்திரம் சொல்லுது''. சாகு கேட்கிறார் நண்பரிடம் ''அப்படி என்னதான் சொல்றான் இவன்''. ''நீ சூத்திரப்பய நீ அரசனாக கூடாது, ஆனாலும் ஆயிட்டே. அதனால சீக்கிரம் செத்துப்போ''ன்னு சொல்றான். ''ஏண்டா அப்படி சொல்றே?''. அதுக்கு பார்ப்பான் சொல்றான் ''ஷத்திரியன்தான் ஆட்சி செய்யணும். அதுதான் மனுதர்மம். சூத்திரன் ஆட்சி செய்வது கர்மம். இதுதான் பிரம்மன் சொன்ன மந்திரம்''. ''டேய், பிரம்மன் உனக்கு சம்பளம் குடுக்கல, நான்தான் கொடுக்கிறேன். வாழ்த்தி சொல்லுடா''. ''முடியாது''. அவனை வேலையை விட்டு நீக்கினார். அந்த காலத்திலேயே வருடம் ரூ.30000/- சம்பளம் அவனுக்கு. இவனுக்கு சப்போர்ட்டுக்கு சங்கராச்சாரியர் முதல் பெரிய பெரிய பார்ப்பானுங்க வந்தாங்க. அதில் முக்கியமானவர் பால கங்காதார திலகர் என்ற பார்ப்பான். ''சுதந்திரம் எனது பிறப்புரிமை'' என முழங்கியவர். இவர் போயி, ''ஐயர் சூத்திரனுக்கு சொன்ன மந்திரம் சரிதான். ஐயரை வேலைக்கு சேர்த்தே ஆகணும்'' என பிரிட்டிஷாரிடம் முறையிட்டார். பிரிட்டிஷார் ''கோர்ட்டில் முறையிடுங்கள்'' என்றவுடன், சாகுக்கெதிராய் திலகர் வழக்கு நடந்தது ''ஐயா, அரசர் தர்மத்திற்கெதிராய் நடந்தார்'' என்று. வழக்கு தோல்வியாச்சு. ஏன்னா அது பிரிட்டிஷார் சட்டம். மனுதர்மம் அந்த சட்டத்தில் இல்லை. திலகருக்கு பயங்கர ஷாக். முதல்முறையா தோத்ததால ஏனென்று யோசிக்கிறார்.
அப்பதான் திலகருக்கு உரைக்குது. இப்ப இருக்கிறது பிரிட்டிஷார் ஆட்சி, இதில் மனுதர்மத்திற்கு இடமில்லை. அப்ப மனுதர்ம சட்டம் வரனும்னா நாம ஆட்சி பண்ணணும் என்று. அதுதான் ''சுயராஜ்யம் எனது பிறப்புரிமை''. உண்மையில் சுதந்திரபோராட்டம் என்பது வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போகணும் என்பதல்ல திலகர், காந்தி போன்ற ஆட்களுக்கு. மனுசட்டம் இந்த நாட்டுக்கு திரும்ப வரணும். இன்றைக்கு நரேந்திர மோதி நடத்திட்டு இருக்கிற ஆட்சி மனுசட்ட ஆட்சி. அரசியல் அமைப்பு சட்டம் சும்மா பேருக்குதான். ஏன்னா மனுஸ்மிருதியை ஆதரிக்கிறதாலதான் மாட்டுக்கு மதிப்பிருக்கு, மனுஷனுக்கு இல்லை. அதனால இட ஒதுக்கீடை ஓரம்கட்டி வைச்சிருக்காங்க. உதாரணமா, ''தூய்மை இந்தியா'' திட்டத்தை பார்த்தா என்ன சொல்ல வாராருன்னா இது கடவுளுக்கு பிரியமான வேலை, அதனால பிரதமரான நானே செய்றேன். பரம்பரை பரம்பரையா தூத்து அள்ளுற உனக்கு என்னடா கேடு''. ஒரு சுத்தமான துடைப்பத்தை எடுத்து, சுத்தமான சாலையில், சுத்தமான குப்பையை போட்டு பெருக்கிறாரு. அர்த்தம் என்னன்னா, ''ரிசர்வேசன் மூலம் மேனேஜர், லெக்சுரர், தாசில்தார், டாக்டர்தான் ஆகணுமா? ஏன் இந்த வேலை செய்யக்கூடாது?''. அதனால்தான் ''national skill developement corporation'' மூலமா இந்த சூத்திரர்களுக்கு சேவை தொழில் செய்ய இலவசம் என்ற பெயரில் தொழில் கத்துக் கொடுக்கிறான். அதுக்கு பதில் நமது அக்கவுண்டிலிருந்து 10000 ரூபாய் பத்து வருடத்தில் எடுத்திடுவான். இது இலவசமாம். ஆக இதை நடத்துற corporate, ngoக்களுக்குதான் தொழில் வளருகிறது. S.c.s.t., obc மக்களுக்கு  பெயரளவில் நடத்தி சூத்திரனை சாகடிக்க மத்திய அரசு செயல்படுகிறது. நாம உயர்ந்த இடத்திற்கு போனால் அவன் நம்ம இடத்திற்கு தாழ வேண்டியிருக்குமோ? என்ற பயம்தான் காரணம்.
50% சதவீத இட ஒதுக்கீடு பார்ப்பனரல்லாதாருக்கு சாகு மகராஜ் அறிவித்ததும், பார்ப்பானுங்க சேர்ந்து சாகுவை கொல்வது என முடிவெடுத்தார்கள். தீர்த்தத்திலே விஷம் கலந்து கொடுத்தாங்க. ஆனா பார்ப்பான் கை நடுக்கத்தால் தூர கொட்டிய சாகு, தன் உயிர் எந்நேரத்திலும் பறிக்கபடலாம் என உணர்ந்து, மக்களுக்கான இன்னும் அநேக திட்டங்களை போடணும் என்ற பரந்த எண்ணத்தில், தொழில் மட்டும் வைசியனும், பார்ப்பானும்தான் செய்யணுமா? அதை சூத்திர, பஞ்சமனுக்கும் கொடுத்தால் என்ன? என யோசித்து ''கங்காராம் காம்ளே'' என்ற சூத்திரரை ஹோட்டல் நடத்த சொன்னார். சாப்பிட யாரும் வரலை என்றதால் ஒரு சட்டம் இயற்றினார். ''எனது அரசாங்கத்தில் உங்களுக்கு ஏதேனும் வேலை ஆக வேண்டுமெனில், இந்த காம்ளே ஹோட்டலில் சாப்பிட்ட பில்லில் அவர் கையெழுத்திட்டிருந்தால் உடனே ஆகும்''. இப்ப ஹோட்டலில் நீண்ட கியூ. எல்லாம் விற்பனையானது. இது எதை காட்டுது என்றால் ''அதிகாரம் நம் கையிலிருந்தால் சட்டத்திற்குட்பட்டு எதையும் செய்ய வைக்கலாம்'' என்பது.இந்த பிற்படுத்தபட்ட சாகு மகராஜ்தான் 1920ல் பாபாசாகேப் அம்பேத்கரை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இதை இதற்கு முன் எப்பவாவது கேள்விபட்டிருக்கிறீர்களா?
- தொடரும்.

No comments: