Sunday, March 25, 2018

அண்ணல் சொல்வது என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

*** நீங்கள் எப்போதுமே இந்துவாக இருந்தது இல்லை, இன்றும் கூட உங்களை இந்துவாக அம்மதமே ஏற்று கொண்டது இல்லை.
*** இந்து தர்மமே மனிதனை அடிமை படுத்துவதையே தத்துவமாக கொண்டது. இந்து தர்மத்தில் நீங்கள் ஒரு அடிமை!!  
 
*** இந்து மதத்திலிருந்து வெளியேறுவது மதமாற்றம் அல்ல,*
*மாறாக உங்களை அடிமைபடுத்தியிருக்கும் அடிமை சங்கிலியை உடைத்தெருந்து வெளிவருவதே ஆகும்.*
     
*** உயர் சாதிகாரன் மேலாவன் என்பதும் கீழ்சாதிகாரன் கீழாவன் என்ற நம்பிக்கை கேவலமான மனநோய்..
*** இந்துத்துவத்தின்  ஆன்மாவே வருணம் மற்றும் சாதியை அடிப்படை தத்துவமாக கொண்டது. இவை பார்பணனின் வாழ்வாதரத்திற்காக உருவாக்கப்பட்டது.*
*** வருணம் மற்றும் சாதி இல்லாத இந்து தர்மத்தை கற்பனைகூட செய்ய இயலாது!!*
*** செய்யும் தொழிலைவிட சாதியையே தத்துவமாக, தர்மமாக , புனிதமாக கொண்டதுதான் இத்துத்துவம்.
   
*** வருணாசிரமத்தை தத்துவமாக கொண்ட இந்துமதத்தில் நீங்க எந்த சாதியிலும் வரவில்லை என்றாலும் உன்னை கீழ்சாதியில் வைத்து இந்துதுவம் அதன் தர்மத்தை நிலைநாட்டியே தீரும். 
*** உங்களுக்கு இந்துத்துவம் சம்பந்தமான மதசடங்குகளை செய்வதற்க்கு இந்து தர்மபடி நீங்கள் தடைசெய்யபட்டவர்கள்.
*** இந்து கடவுள்கள், தேவதைகள் மற்றும் அவதாரம் போன்றவைகள் பார்பணர்களை சார்ந்தவைகளாகவே உள்ளது. சூத்திரர்களான உங்களுக்கு எந்த அடிப்படை சம்மந்தமும் இல்லாதவை. 
*** நாய், பூனையின் மூத்திரத்தைகூட புனிதமாக ஏற்றுகொள்ள தயங்கமாட்டர்கள், ஆனால் தங்களால் கொடுக்கப்படும் கங்கை நீர் கூட தீட்டாக கருத்தப்பட்டு ஏற்றுகொள்மாட்டார்கள்.
*** மாட்டு சிறுநீரை வைத்து தங்களை சுத்தப்படுத்தி கொள்வார்கள் ஆனால உங்களை சுத்தப்படுத்தவே இயலாது. நீங்கள் பிறப்பால் தீட்டானவர்கள், மாட்டு மூத்திரம்கூட உங்களுக்கு உதவாது.
   
*** உங்களுக்கான இடம் மற்றும் நிலை இந்துத்துவத்தில் எந்தகாலத்தில் மாறப்போவதில்லை. உங்களுடைய அடுத்த தலைமுறைக்கும் அதே இடம்தான்!!
*** அவர்கள் உங்களுடைய மூதாதயையர்களை கொன்று அடிமைபடுத்தியவர்கள்.  
*** மதம் மனிதனுக்காக, மனிதானுக்காக மதம் இல்லை. உன்னை மனிதனாக அடையாளபடுத்த தவறும் மதம் அல்ல, அது ஒரு அடிமை தத்துவம்.
 
*** எங்கு ஒருவன் மற்றொருவனைவிட மேலானவன் கீழானவன் என்ற நிலை உள்ளதோ அது மதமே அல்ல, மாறாக இது அடிமை தத்துவம்.
 -- *புரட்சியாளர்அம்பேத்கர்*

No comments: