Sunday, March 25, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 14

காரணம் அசோகருக்கு பின்னால் அநேக படையெடுப்புகள். கிரேக்க, ஈரானிய, டச்சு, பிரெஞ்சு, போர்ச்சுக்கீசி, யூத, ஈராக்கி, ஆப்கானிஸ், மங்கோலிஸ், ஜெயினிஸ், திபெத்தினிஷ், முஸ்லிம், பிரிட்டிஸ் என எல்லோருமே இங்கே வந்திருக்காங்க. கிட்டத்தட்ட அமெரிக்க நிலைதான். அதனால்தான் பாபாசாகேப் ''இது மாநிலங்களின் கூட்டம்'' என்கிறார். இந்த யுனெட்டட் இந்தியாவிற்கான சட்டத்தை எப்படி எழுதுகிறார் என்றால் ''இந்திய நாட்டில் சாதி இருக்கு. ஒவ்வொருவர் மனதிலும் அது ஊடுருவி இருக்கு. இதற்கு ஆதரவாக பல புராணங்கள் இருக்கு. காந்தி சொல்றமாதிரி  ''தம்பி இனி சாதி பார்க்காதே, சகோரத்துவமாய் இருப்போம்''ன்னு என போதனை செய்வதால் போகாது. ஏன்னா ஜமீன்தார் ஜமீன்தாரராக இருக்கும் வரைக்கும், கூலிக்காரன் கூலிக்காரனாயிருக்கும் வரைக்கும், ஜமீன்தாரரெல்லாம் மேல்சாதியா இருக்கிற வரைக்கும், கூலிக்காரனெல்லாம் கீழ்சாதியாயிருக்கும் வரைக்கும் சாதி என்பது இருக்கும். எப்ப கூலிக்காரரெல்லாம் ஜமீன்தாரராக முடியுமோ? அப்பொழுதுதான் சாதி என்பது போகும். ஒரு ஜமீன்தாரா சொல்லும்போது கேட்கிறான் (அ) கேட்ட மாதிரியாவது நடிக்கிறான். ஜமீன்தாருக்கு என்னத்தான் போதனை பண்ணினாலும் திமிர் இருக்கும். மாறுகிற மாதிரி நடிப்பான். ஆனா மாற மாட்டான். இந்த ஜமீன்தார், வாரிசு முறையில் வருவதை மாற்றணும். அதுக்கு பாபாசாகேப் சொன்ன சிஸ்டம் என்னன்னா? நம்பர் 1. ''இந்த நாட்டில் இருக்கிற எத்தனை தொழிற்சாலைகள் எது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கிறதோ, அந்த கம்பெனிங்க எல்லாம் அரசாங்கத்தின் கையிலிருக்க வேண்டும். எந்த தனிப்பட்ட, பிரைவேட்காரன் கையிலும் இருக்கக்கூடாது. அதாவது உணவு, உடை, மருத்துவம், கல்வி, நீர், போக்குவரத்து, மின்சாரம் இதெல்லாம் பிரைவேட் கைகளில் இருக்கக்கூடாது.
உதாரணமா, தண்ணீரெல்லாம் பிரைவேட்காரன் கையிலிருந்தா பத்து நாளா கொடுக்காம நிறுத்தினா, எல்லாரும் தண்ணீருக்காக அலைமோதுவாங்க. அப்போது குடம் 1க்கு ஒரு ரூபாயில் விற்பனை செய்ய ஆரம்பிச்சுடுவான். இதுதான் தனியார்மயம். இதைபோல் முக்கிய இலாகாக்கள் ''ராணுவம், ரயில்வே, போக்குவரத்து, இன்சூரன்ஸ், ஏர்வேஸ், கல்வி'' இதெல்லாம் ஒரு நாட்டிற்கு முக்கியமானது.இதையெல்லாத்தையும் விட ''நிலம்'' இது அரசாங்கத்தின் கையில்தான் இருக்க வேண்டும். இதுவும் தனிப்பட்டவனின் கையில் இருக்கக்கூடாது. அப்ப விவசாயம் எப்படி செய்வது? ஒரு கிராமத்தில் 1000 ஏக்கர் இருக்குது. அந்த இடத்தில் 100 வீட்டு குடும்பங்கள் இருக்குது. இந்த 100 வீட்டினரும் அந்த 1000 ஏக்கர் நிலத்துக்கு குத்தகைதாரராயிருக்கணும். இந்த 1000 ஏக்கர் யாருக்கும் பிரிக்காமல் மொத்த 100 குடும்பங்களும் விவசாயம் செய்ய கொடுக்கணும். இந்த 100 வீட்டிலுள்ளவர்கள் சமமா எல்லா வேலையையும் செய்யணும். இதுக்கு தேவைப்படுற உரம், நீர், விதை அரசாங்கம் கொடுக்கணும். விளைந்து வந்த தானியங்களை அரசாங்கமே மார்க்கெட் பண்ணி, அதில் வரும் வருமானத்தை 10 பாகமா பிரிச்சி, ஒரு பாகம் அரசாங்க வரியாக எடுத்துகொண்டு, 1 பாகம் அந்த நிலத்தை முன்னே வைத்திருந்த ஜமீனுக்கு, 1 பாகம் உரம், நீர், விதைக்கு போக, மீதமுள்ள 7 பாகத்தை அந்த 100 குடும்பத்திற்கு சமமாய் பிரித்து கொடுக்கணும். இதற்குதான் Collective formingன்னு பெயர். சரி இந்த நிலத்தை கொடுத்த ஜமீனெல்லாம் என்ன பண்ணுவாங்க. பார்ப்போமா?
இதுக்கு முன்னாடி தொழிற்சாலை வைச்சிருந்தவங்க, ஜமீன் எல்லாம் இந்த 100 குடும்பத்தோடு இணைந்து, அவர்களும் ஒரு குடும்பமாக பயிர்தொழில் செய்ய வேண்டும். ஏன்னா அது விவசாய புரட்சியின் காலம். சரி, இந்த ஜமீன் பெரிய முதலீடு பண்ணியிருக்கான். அதனால  1000 ஏக்கர் நிலம் வைச்சிருந்த ஜமீன்தாருக்கு அரசாங்கம் நிலத்திற்குரிய பணம் கொடுத்து அரசுடமையாக்கணும். அவ்வளவு பணமில்லாதபோது அந்த பணத்திற்கான வட்டியை நிலத்தை கைப்பற்றும்வரை கொடுக்க வேண்டும். இப்படியான ஒரு அரசியல் அமைப்பு சட்டத்தை 10 வருடம் நடைமுறைப்படுத்தினால் கொத்தடிமை, ஜமீன் என யாருமே இருக்க முடியாது. முதலாளி, தொழிலாளி இருக்க முடியாது. அதைப்போல் மேல்சாதி என்ற திமிரும், கீழ்சாதி என்ற தாழ்மையும் இருக்கமுடியாது. இதுதான் பாபாசாகேப் 1946ல் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டம். இந்த பொருளாதார திட்டத்திற்கு பெயர்தான் ஸ்டேட் சோஷலிசம் (state socialism) என்பது. நீங்க இதுக்கு முன்னாடி இந்த ஸ்டேட் சோஷலிசம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க.. நாம கம்யூனிசம், சோசலிசம், குளோபலிசம், காந்தியிசம், மாவோயிசம் இதெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த இசம் நல்லது, அந்த இசம் அற்புதமானது என சொல்ல கேட்டிருப்போம். ஆனால் இந்த இசங்கள் அநேகம் இந்தியாவிற்கு வந்தும் ''சாதி அமைப்பு'' அப்படியேதான் இருக்கிறது. ஏன்னா சாதியை ஒழிக்க எந்த இசமுமே வழி சொல்லலை. ஏன்னா சாதி ஒழியணும்னா, அந்த சாதி கொடுக்கிற முதலாளித்துவம் ஒழியணும். அந்த சாதி கொடுக்கிற சேவை, கடமை என்ற பெயரில் கொத்தடிமையும் ஒழியணும். இது ஒழியும்போது சாதி ஒழியும். இந்த ஸ்டேட் சோசலிஷத்தில் முதலாளி, தொழிலாளி கிடையாது. இதை 10 வருடம் நடைமுறைபடுத்தினா சாதி ஒழியும். இதை பிரிட்டிஷார் ஏற்றுக்கொள்கிறார்கள்.ஆனா?
- தொடரும்

No comments: