Monday, March 26, 2018

ஸ்டெர்லைட் ஆலை அன்று முதல் இன்று வரை...

அந்த ஸ்டெர்லைட் முதலில் மகராஷ்ட்ரா ரத்னகிரி பக்கம் அமைந்தது, அதனால் பாதிக்கபட்ட விவசாயிகள் பொங்கினர். ஒரு கட்டத்தில் உள்ளே நுழைந்து ஆலையினை அடித்து நொறுக்கினர்
அன்று முதல்வரான சரத்பவாருக்கு வேறு வழி இல்லாததால் உடனே கிளம்புங்கள் என உத்தரவிட்டார், அடித்து நொறுக்கியவர் மேல் ஒரு வழக்கும் இல்லாமல் அவர் பார்த்துகொண்டார்
கோவாவில் நுழைய முயன்ற ஸ்டெர்லைட் அங்கிருந்தும் விரட்டபட்டது
குஜராத்திலும் இந்த அபாய ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பியது, இந்நிலையில்தான் அதன் கவனம் தமிழகம் மீது வந்தது
இங்கோ வளர்ப்புமகன் திருமணம், தமிழகத்தை சுருட்டுதல் என மிக அட்டகாச ஆட்சி செய்துகொண்டிருந்த ஜெயாவிடம் அனுமதி வாங்குவது அவர்களுக்கு சிரமமில்லை
1995ல்  ஜெயாதான் ஸ்டெர்லைட்டை அனுமதித்தவர்
ஆனால் அதன் அபாயம் உணர்ந்து எதிர்ப்பு வந்தவுடன் கொஞ்சம் சமாளிக்கபார்த்தார் ஆனால் வெளியேறு என சொல்லவில்லை
வைகோ வழக்கு தொடர்ந்து வாதாடினார், உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட்டை மூடவும் உத்தரவிட்டது, ஜெயாவின் மறைமுக ஆதரவும் ஆலைக்கு உதவவில்லை
பணம் படைத்த அணில் அகர்வால் குடும்பம் சும்மா இருக்குமா? உச்ச நீதிமன்றம் பாய்ந்தார்கள். அங்கும் வழக்காடினார் வைகோ
இந்திய நீதி எப்படிபட்டது? உயர் நீதிமன்றம் தடை செய்த ஆலையினை உச்ச நீதிமன்றம் இயக்க அனுமதித்தது,, இது முரண்
அதன் பின் ஸ்டெர்லைட் இயங்க யாரும் தடை செய்யவில்லை, ஆனால் தூத்துகுடி உறுமிகொண்டே இருந்தது
வைகோ கண்டித்து கொண்டே இருந்தார், பல போராட்டங்களை அவர் நடத்தினார்
வைகோவிடம் ஏகபட்ட கோளாறுகள் உண்டென்றாலும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவர் காட்டியது நியாயமான போராட்டம், அதில் அவரை பாராட்டியே ஆக வேண்டும்
ஆனால் அதே வைகோ பின்பு ஸ்டெர்லைட்டை அனுமதித்து அதற்கு உதவிய ஜெயாவுடனும் கூட்டு சேர்ந்து புன்னகைக்க தவறவில்லை, அது வன்மையாக கண்டிக்கதக்கது. அரசியல் அப்படித்தான்
ஜெயா ஆட்சி, கலைஞர் ஆட்சி எதுவந்தாலும் யாருக்கும் அந்த ஆலையினை மூட சொல்லும் எண்ணமில்லை
நாமும் தூத்துகுடிக்கு சில நேரம் சென்றிருக்கின்றோம், அங்கு இருக்கும் மாசு மிக அதிகம், காற்றின் கருமை நிறம் சில நிமிடங்களில் உடலில் படும் அளவு கடும் மாசு
உண்மையில் டெல்லியினை விட தூத்துகுடியில்தான் காற்று மாசு மிக மிக அதிகம்
இந்நிலையில் இப்பொழுது இன்னும் 700 ஏக்கரில் ஸ்டெர்லைட்டை விரிக்கின்றார்களாம்
கவனியுங்கள், இந்த ஸ்டெர்லைட் இங்கு வர அனுமதி கொடுத்தவர் ஜெயலலிதா, இன்று கிட்டதட்ட ஆயிரம் ஏக்கரில் விரிவாக்குங்கள் என அனுமதி கொடுத்திருப்பதும் பழனிச்சாமி அரசு
உண்மையில் இப்பொழுது தூத்துகுடி பகுதி பொங்கி கொண்டிருக்கின்றது, பெரும் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது
இனியும் தங்கள் பகுதி மாசடைய விடமாட்டோம், சாக தயாரில்லை என இறுதி போராட்டத்திற்கு கிளம்பிவிட்டார்கள்
ஆனால் பல ஊடகங்கள் மறைக்கின்றன‌
குறிப்பாக ஜல்லிகட்டு போராடத்தை உலகறிய செய்த வைகுண்டராஜனின் நியூஸ் 7 பின் வாங்குகின்றது
இவ்வளவிற்கும் அது வைகுண்டராஜனின் சொந்த ஊர் என்பது குறிப்பிடதக்கது. பணக்காரர்கள் அகர்வால் என்றாலும் வைகுண்டராஜன் என்றாலும் உறவு வந்துவிடும் போல‌
இப்பொழுது ஒரு சில ஊடகங்கள் அதை கவனிக்க அது விஸ்வரூபமெடுக்கின்றது
கமலஹாசன் கூட இது மக்கள் போராட்டம் என களமிறங்கிவிட்டார்
இன்னும் பிரபல கட்சிகள் ஏதும் வாய்திறக்கவில்லை
தூத்துகுடி சசிகலா புஷ்பா கூட இரண்டாம் திருமணத்தில் கடும் பிசி
தூத்துகுடி திமுக ஈரோட்டில் கொடிபிடிக்கின்றது, பழனிச்சாமி அனுமதி கொடுத்தவர் என்ற முறையில் மகா அமைதி
ராமதாஸ் மட்டும் கண்டிக்கின்றார்
இது பரவுகின்றது, ஆச்சரியமாக லண்டன் வாழ் தமிழர்கள் அணில் அகர்வால் வீட்டு முன்னாலே ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்
இப்போராட்டம் வெல்ல வேண்டும், ஸ்டெர்லைட் முடக்கபட வேண்டும்
தூத்துகுடி மக்கள் முரட்டு மனிதர்கள் என்றாலும் மகராஷ்ட்ராவில் நடந்தது போல ஆலை உள்ளே நுழைந்தெல்லாம் அடித்து நொறுகவில்லை
மாறாக ஆர்ப்பாட்டம் மட்டும் செய்கின்றார்கள்
மகாராஷ்ட்ரா அரசு விரட்டிய ஆலை, கோவா மக்கள் விரட்டிய ஆலை, குஜராத் மக்கள் விரட்டிய ஆலை தமிழகத்தில் இயங்கலாமாம்
அதற்கு உச்சநீதி மன்றம் எல்லாம் உதவுமாம்
நீதிமன்றம் அதன் சட்ட ஆதாரத்தை பார்க்கும், நடந்தது என்னவென்றால் மகாரஷ்ட்ர அரசும், கோவா அரசும் மக்கள் நலனுக்காக அந்த ஆலையினை தடை செய்தன‌
ஆனால் இந்த  ஜெயா அரசு கொஞ்சமும் யோசிக்காமல் அதை அனுமதித்தது, பழனிச்சாமி அரசு விரிவாக்கவும் அனுமதி கொடுத்திருக்கின்றது
நிச்சயம் இதில் மாநில அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்
மற்ற மாநிலங்களில் எல்லாம் விரட்டபட்ட ஆலை இங்கிருந்தும் விரட்டபட்டே ஆக வேண்டும்
அவர்கள் எல்லாம் வாழவேண்டும், தூத்துகுடியார்கள் மட்டும் சாக வேண்டும் என்பதெல்லாம் அயோக்கியதனம்
பழனிச்சாமி மிக முக்கிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது
ஸ்டெர்லைட் ஒன்றும் அரசு திட்டம் அல்ல, அதற்கு எந்த வரைமுறையும் கிடையாது, லாப வேட்கையில் அது யாரையும் கொல்ல துணிந்தது. அதன் பலம் முன்பு சாதாரணமானோர் ஏதும் செய்ய முடியாது
இதே வேதாந்தா பல இடங்களில் விரட்டபட்டது, மும்பை கோவா தொடர்ந்து  வடகிழக்கின் தாண்டேவாரா காடுகளின் கனிமத்திற்காக இது நுழைந்ததும் அம்மக்கள் விரட்டியதும் வரலாற்று சாட்சிகள்
இந்த பரகாசுர தனியார் கம்பெனியிடமிருந்து தூத்துகுடியினை விடுவிப்பது அரசுகளின் கடமை.
போராட்டம் வெல்லட்டும் , நாசகார ஸ்டெர்லைட் ஒழியட்டும்
அதை ஒழிக்கமுடியவில்லை என்றால் பழனிச்சாமி அரசு ஒழியட்டும்
அரசு மாறினால் நிச்சயம் ஸ்டெர்லைட் தானாக அடங்கி ஒழியும்
ஆயிரம் ஏக்கர் விரிவாக்க அனுமதிகொடுத்துவிட்டு ஒன்றுமறியாத கன்னிபோல் பழனிச்சாமி மவுனமாக இருப்பது நிச்சயம் தவறு, பெரும் அயோக்கியதனம்.
ஒரு மக்கள் விரோத ஆலையினை விரட்ட கூட அதிகாரமில்லா மாநில முதல்வர் எதற்கு?
தூத்துகுடி மக்களின் நியாயமான போராடத்தை ஆதரிக்க வேண்டியது நம் கடமை
கடமையிலிருந்து  தவறாமல் போராட்டத்தை எல்லோரும் ஆதரித்து அந்த ஸ்டெர்லைட்டை விரட்டியே தீரவேண்டும்...

No comments: