Saturday, April 21, 2018

கொழுப்பை எரிக்கும் ஜூஸ்: வாரம் ஒருமுறை குடித்தால் போதும்

லேசான கசப்பு சுவை கொண்ட *நெல்லிக்காயில் ஜூஸில் விட்டமின் C, இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் கள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
⚜இந்த ஜூஸை வாரம் ஒருமுறை குடித்து வந்தால் பல ஆபத்தான நோய்கள் நம்மை அண்டாமல் எளிதில் கட்டுப்படுத்தலாம்.
*நெல்லிக்காய் ஜூஸின் நன்மைகள்* 
⚜நெல்லிக்காய் ஜூஸ் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, புரத கூட்டிணைப்பை மேம்படுத்துவதால், நம் உடலில் உள்ள *அதிகப்படியான கொழுப்புக்களை எளிதில் எரிக்கிறது*.
நெல்லிக்காய் *நார்ச்சத்து* நிறைந்ததால், கழிவை வெளியேற்ற இயக்கங்களை ஒழுங்குப்படுத்தி, *மலச்சிக்கல் பிரச்சனை* வராமல் தடுக்கிறது.
ரத்தத்தில் உள்ள தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றி *ஹீமோகுளோபினையும், ரத்தச் சிகப்பணுக்களின்* எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்கிறது.
நெல்லிக்காயில் உள்ள *விட்டமின் C* கண் பார்வையை பழுதடையாமல் பாதுகாப்பதோடு கண் தசைகளை வலிமைப்படுத்துகிறது.
இதயத்தில் அடைப்புகள் ஏற்படாமல் தடுத்து, *இதயத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டினை சீராக்கி*, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
*எலும்புகளுக்கு* தேவையான கால்சியம் நெல்லியில் கிடைப்பதால், எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
*மாதவிடாயினால்* ஏற்படும் வயிற்று தசைப்பிடிப்புகள் மற்றும் வலி போன்ற பிரச்சனைகளை குணமாக்குகிறது.
நெல்லிச் சாறுடன் சில துளிகள் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், *ஆஸ்துமா* போன்ற சுவாசப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
நெல்லி சாறுடன் *மஞ்சள் மற்றும் தேனை கலந்து குடித்து வந்தால்,* புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்களின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

No comments: