Wednesday, September 19, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 18

அரசியல் அமைப்பு சட்டத்தை இந்தியாவிற்கு அளித்துதான் இந்த எச்சரிக்கையை பாபாசாகேப் பதிவு செய்கிறார். இவரின் பேச்சிலிருந்த அதீத சக்தி பிரதமர் நெஹ்ருவை பயம் கொள்ளச் செய்தது. தொடர்ந்து பாபாசாகேப், ''இந்த அரசியல் அமைப்பு சட்டத்தை நேர்மையாக நீங்கள் 10 வருடங்கள் நடைமுறைப்படுத்தினால் நாடு செழிக்கும், சாதி ஒழியும், இந்தியா வல்லரசாகும்'' என்றார். அதற்கு நெஹ்ரு ''10 வருடம் அதிகம், 5 வருடத்தில் இதை நடைமுறைப்படுத்துவோம்'' என்றார். ஆனால் சட்டம் வந்து இன்னியோட 65 வருடங்கள் ஆனாலும் இந்தியா சீரழிந்துக் கொண்டிருக்கிறது. தடி எடுத்தவனெல்லாம் பிரதமர் ஆகிறான். ஆனால் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வில்லை.

அடுத்த வருடம் பாபாசாகேப், ''இந்தியாவில் 133 லட்சம் ஏக்கர் நிலமிருக்கு. அதை நிலமல்லாத ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிப்போம்''. காங்கிரஸ் சொன்னது, ''முடியாது''.

அடுத்து, ''வருடத்திற்கு 350 கோடி ரூபாய் இராணுவத்திற்கு செலவிடுகிறோம். எதற்காக? இந்த காஷ்மீர் பிரச்சனைக்காக. ஆனால் இந்த காஷ்மீர் என்பது பிரச்சனையே இல்லை. என் கையில் அதை 3 மாதம் ஒப்படையுங்கள். அதை நான் முடித்து தருகிறேன். 350 கோடி பணம் தேவையில்லை. 30 கோடி போதும். மீதமான 300 கோடியை நீங்க சரியா பயன்படுத்தினால் இந்த நாட்டிலுள்ள வேலையில்லா திண்டாட்டத்தை கண்டிப்பாக நிறுத்தலாம்''. நெஹ்ரு சொல்றார் ''முடியாது. காஷ்மீர் பிரச்சனை இருக்கணும். அது தீரக்கூடாது''. இன்னைக்கு வரைக்கும் அந்த காஷ்மீரை வைத்துதான் காங்கிரஸ், பா.ஜ.க. அரசியல் செய்ய பயன்படுத்திட்டிருக்காங்க.   

அடுத்ததாக பாபாசாகேப், ''அப்பாவோட சொத்துகளில் பெண்களுக்கு சம உரிமை வேணும்''. நெஹ்ரு, ''முடியாது''.

அடுத்து பாபாசாகேப், ''பட்டியலினத்திற்கு கொடுத்த மாதிரி இதர பிற்படுத்த பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு கொடு''. நெஹ்ரு, ''முடியாது''.

கடைசியாக பாபாசாகேப், ''சட்ட அமைச்சருக்கான எனது பணி முடிந்தது. எனக்கு ''பிளானிங் கமிஷனை கொடு'' என்கிறார். ஏன்னா அரசியல் அமைப்பு சட்டத்தை 10 வருடத்தில் நடைமுறை படுத்தத்தான். அதற்கும் நெஹ்ரு ''முடியாது''.

இறுதியாக பாபாசாகேப், ''என் அரசியல் அமைப்பு சட்டத்தை நீ நடைமுறைப்படுத்த வில்லை என்றால், நான் ஏன் சட்ட அமைச்சராயிருக்க வேண்டும்?'' என்று 27.09.1951ல் ராஜினாமா செய்து வெளியே வருகிறார்.

வெளியே நிருபர்களிடம், ''இப்பொழுதுள்ள அரசு, பட்டிலினத்தவர்களுக்கு, பிற்பட்டவர்களுக்கு, பெண்ணுரிமை, இளைஞர், தொழிலாளி, முக்கியமாக விவசாயிகளுக்கு எதிராக இருக்கு. இது மொத்த மொத்தம் முதலாளி வர்க்க கட்சி. பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரானது'' என அழுத்தமாய் பதிகிறார். அதோடு காங்கிரஸ் நிலையை மகாபாரத கதையோடு தொடர்பு படுத்துகிறார். அது ''பாண்டவர், கெளரவர்களுக்கிடையேயான மகாபாரத போர். துரியோதனன் படையில் முதல் தளபதியான பீஷ்மர் பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் தாத்தாதான். துரோணர் இருவருக்குமே குருதான். பீஷ்மர் போரில் துரியோதனன் பக்கம் நிற்கிறான். அப்பொழுது நாரதர் பீஷ்மரிடம், 'பாண்டவர்கள் உரிமைக்காக கஷ்டபடுறாங்க. நீங்க அவங்களுக்கும்தானே தாத்தா, குரு எல்லாம். நீங்க அவங்களை எதிர்ப்பது அக்கிரமம், அநியாயம்' என்கிறான். அதற்கு பீஷ்மர், 'அநியாயம், அக்கிரமம் இருக்கட்டும். நான் துரியோதனன் உப்பு தின்று வளர்ந்தவன். எனவே அவனுக்குதான் விசுவாசமாயிருப்பேன்' என்கிறான்.''

இந்த மகாபாரத பீஷ்மர் கதையை சொன்ன பாபாசாகேப், ''அதைப்போல டாட்டா, பிர்லா உப்பை தின்றவங்கதான் இந்த காங்கிரஸ். ஆக யார்க்கு விசுவாசமாயிருப்பான்? அவனுக்கு விசுவாசமா இருக்கிறதாலதான் அவனுக்கு சலாம் போடுறான்''. விவசாயிகள் சாகிறார்கள். சாகட்டும். ஆனால் நான் டாட்டா, பிர்லா உப்பு தின்கிறேனே. அவனிடம்தான் என் விசுவாசத்தை காட்டுவேன். அதனாலதான் அவனுக்கு 72000 கோடி கடன் வட்டியில்லாம கொடுக்கிறான். விவசாயிகளுக்கு 10% வட்டிக்கு கொடுக்க கூட அவனுக்கு துப்பில்லை. இதைத்தான் பாபாசாகேப் சொல்கிறார். ''அரசாங்கம் என்னுக்குமே மக்களுக்குத்தான் விசுவாசமா இருக்கணும். பணக்காரர்களுக்கு அல்ல''. ஆனால் இந்த காங்கிரஸ் கட்சியானது, பணக்காரர்கள் உருவாக்கிய கட்சி.
இன்றைக்கும் கூட பாருங்க, ''Association of Indian Democratical Rights'' என்று google வெப்சைட்டில் ADR என்று டைப் செய்து தேடினால் இந்த அமைப்பு சர்வே எடுத்து போட்டிருப்பது என்னன்னு பார்த்தீங்கன்னா, பணக்காரங்களிடம் எந்தெந்த கட்சி, எவ்வளவு பணம் வாங்கியிருக்காங்க என்ற செய்தி வருகிறது. போன எலெக்சனில் பா.ஜ.க. வாங்கியது 225 ஆயிரம் கோடி ரூபாய். காங்கிரஸ் கட்சி 187 ஆயிரம் கோடி ரூபாய். கம்யூனிஸ்ட் கட்சி 5000 கோடி ரூபாய். அ.தி.மு.க., தி.மு.க. என மாநில கட்சிகளுக்கும் 187 ஆயிரம் கோடி பணக்காரர்களால் கொடுக்கப்பட்ட விபரம் வருகிறது. இது எல்லோருக்குமே தெரிந்த ஓப்பன் ஸ்டேட்மெண்ட். ஆக யாரெல்லாம் அரசியலில் முன்னெடுக்கிறார்களோ அவர்களுக்கு ஏற்ற விலை பணக்காரர்களால் கொடுக்கப்படுகிறது. சரி. இந்த பணக்காரர்களிடம் ஒரு ரூபாய் கூட வாங்காத கட்சி இருக்கிறதா என்றால், இருக்கிறது. அது எது?

அது பகுஜன் சமாஜ் என்ற அம்பேத்கரிய கட்சிதான். அப்ப இவங்களுக்கு கட்சி நடத்த எங்கிருந்து பணம் வருகிறதென்றால், அது பொதுமக்கள், அரசு ஊழியர்களிடமிருந்துதான் பெறுகின்றனர். கார்ப்பரேட்டோ, கம்பெனிகளிடமிருந்தோ பெறுவதில்லை.

இதனால்தான் பா.ஜ.க., காங்கிரஸ் என யாரு ஆட்சிக்கு வந்தாலும் கம்பெனி, கார்ப்பரேட் வளர்கிறது. தொழிலதிபர்கள் வாழ்கிறார்கள். விவசாயிகளெல்லாம் சாகிறார்கள். ஏன்னா விவசாயிகளின் நலனிற்காக எந்த மசோதாவும் அரசாங்கம் கொண்டு வருவதில்லை. ஆனா விவசாயிகளிடமிருந்து உறிஞ்செடுக்க தவற மாட்டாங்க. இப்பகூட நரேந்திர மோதி ''நில அபகரிப்பு மசோதா'' கொண்டு வந்தார். அந்த மசோதா சொல்வது என்ன? விவசாயி அனுமதியில்லாம அவங்க நிலத்தை பிடுங்கலாம். முழு மெஜாரிட்டி என்பதால் லோக்சபாவில் பாஸாயிடிச்சி. ராஜ்யசபாவில் பாஸாகலை. ஏன்னா அங்கே அவங்க மெஜாரிட்டி இல்லை. ஒருவேளை இந்த மசோதா நிறைவேறியிருந்தா? 10 ஏக்கருக்குள்ள வைச்சிருந்த விவசாயி நாசமாயிடுவான். ஏற்கனவே விவசாயத்தை நம்பி, பணத்தை இழந்து, நொந்து நூடுல்ஸாயிருக்கிற விவசாயிக்கு உதவி செய்டான்னா, அவன்ட்ட இருந்த நிலத்தையும் பிடுங்கறாங்க. அதனால்தான் 30 நிமிஷத்திற்கு ஒரு விவசாயி சாகிறான். இந்த தற்கொலை பண்ணிய விவசாயிங்களில் பிற்படுத்தபட்டவர்கள்தான் 98%. பாபாசாகேப் சொன்னதை கேட்காததாலதான் இவனுங்க சாகிறானுங்க.

ஏன்னா இவங்கதான் 5 ஏக்கருக்கு மேலே நிலம் வைச்சிருக்கிறவனுங்க. இவங்களுக்குதான் வங்கி கடன் கொடுப்பாங்க. செட்யூல்டு காஸ்ட்டுக்கு எவன் கடன் கொடுக்கிறான்? கொடுத்தா கொடுக்கிறவன்தான் தூக்கு போட்டு சாகணும்.

No comments: