Wednesday, September 19, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 19

பாபாசாகேப் கேட்ட எல்லாத்தையும் காங்கிரஸ் புறக்கணிச்சதால், அவர் அமைச்சர் பதவியை துறந்து வெளியே வருகிறார். மக்கள் அவரிடம் கேட்கிறாங்க, ''ஐயா நீங்க எழுதின சட்டம் நல்லாயிருக்கு. ஆனால் நீங்களே வெளியே வந்திட்டா, அந்த சட்டத்தோட கதி என்னவாகும்?. அதற்கு பாபாசாகேப், ''சட்டம் நான் எழுதினதுதான். ஆனால் அந்த சட்டத்தை நடைமுறை படுத்துற இடத்தில் இருக்கிறது மனுஸ்மிருதி எழுதினவனோட பேரனுங்க. அப்படின்னா நான் எழுதியதை நடைமுறைப்படுத்துவானா? அவனோட மனு(அ)தர்மத்தை நடைமுறைப்படுத்துவானா? நான் என் வேலையை முடிச்சிட்டேன் என்றாலும், அதை நடைமுறைப்படுத்துவது என்பது அவன் கையில் இருக்கிறது. அதனால அவன் இருக்கிற வரைக்கும் சட்டம் குப்பையிலேதான் இருக்கும். நான் எழுதின சட்டத்தால் எந்த சமூகம் பலனடைகிறதோ, எவனுக்கு லாபமாயிருக்கிறதோ அவன்தான் ஆட்சியாளனாய் ஆகணும். அவனால்தான் இந்த சட்டம் மதிக்கப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்படும்'' என்றார். அதாவது அசோகரின் பேரன்கள்தான் ஆட்சி செய்யணுமென்கிறார். இது எப்படி முடியும்? முடியும். முடியாதுன்னு நினைச்சா, நாம பள்ளர், பறையர், சக்கிலியர், etc..வா சிந்திக்கிறோம்ன்னு அர்த்தம். அதாவது சேரி மூளையில் சிந்திக்கிறோம். எப்படி? இதனால எனக்கு என்ன கிடைக்கும்னு சிந்திக்கிறோம். எல்லோருக்கும் எல்லா உரிமைகளை கொடுப்பது எப்படி என்பதாக இனி நம் சிந்தனை இருக்கட்டும். மற்றவர்களை பற்றி நாம் சிந்திக்கும்போதுதான் நம் உரிமைகள் தானே காக்கப்படும். இதுவரை நாம பிச்சைக்காரன் போல கூட சிந்திச்சிருக்கலாம். ஆனா இனி ஆட்சியாளர்களாக சிந்திப்போம். நல்ல ஆட்சியாளர் என்பவன் எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்கணும்னு சிந்திப்பான். அப்படியாக சிந்தியுங்கள். ''என்னய்யா நமக்கே ஒண்ணுமில்ல, நாம போயி....''

இப்படியாக ''நமக்கே ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல''ன்னு சொல்லி சொல்லி, சிந்திச்சி, சிந்திச்சி ஒண்ணுமேயில்லாமல்தான் போயிட்டோம். இதுதான் தலித் புத்தி, தாழ்த்தப்பட்டவங்க புத்தி என்பது. இன்னைக்கே பள்ளர், பறையர், சக்கிலியர் உள்பட 76 பட்டியலினத்தோர் ஒன்று சேருங்க. ஆட்சியாளர்களாக மாறுவது என்பது நம் கையில் இல்லை. உள்ளத்தில்தான் இருக்கணும். அதனால்தான் பாபாசாகேப், ''போங்க, உங்கள் வீடுகளில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இந்திய நாட்டை ஆளுவதே என் இறுதி இலட்சியம்'' என்பதாக. ஒரு நாளைக்கு பத்து முறை பாருங்க, பத்துமுறை வாசிங்க, ஒரு நாளைக்கு பத்து முறை உங்கள் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுங்கள். அதனை கற்பனை செய்யுங்கள், முடியும். இந்தியாவை யாரெல்லாம் ஆட்சி செய்தார்களோ அவர்கள் ஒன்றுமில்லாத இடத்திலிருந்து வந்தவங்கதான். ஏன்னா 'நம்மால் முடியும்' என்ற எண்ணம் அவர்களிடம் இருந்திச்சி. இன்றைக்கு இந்த சுதந்திர இந்தியாவில் எவனுமே நிம்மதியாயில்லை. விவசாயிகள், தொழிலாளிகள், கூலிகள், பெண்கள், முஸ்லிம், கிருத்தவன், இளைஞர்கள் உள்பட எவருமே நிம்மதியாயில்லை. ஏன்னா எல்லோருக்கும் நிம்மதியை கொடுக்கும் தகுதி, புத்திசாலிதனம் எவனுக்குமே இல்லை. அப்ப அது யாருகிட்ட இருக்குது? அது நிச்சயமா அசோகர் வாரிசான நம்மிடம்தான் உள்ளதாக பாபாசாகேப் எண்ணுகிறார். ஆம். நம்மால்தான் முடியும். நாம எல்லோரும் மனசு வைச்சா இந்தியாவின் லெவல்லே வேற. சந்தேகமிருக்கா உங்களுக்கு?

மனுவாதிகள் எல்லாம் நம்மை கவனத்தில் வைத்துதான் எல்லாத்தையும் செய்கிறான். உதாரணமா மதத்தை அரசியலுடன் புகுத்தி வைத்திருக்கிறான். அந்த மதத்திலுள்ளவர்களை மட்டுமே தேச பக்தி உள்ளவர்களாகவும், மற்றவர்கள் தேச விரோதிகளாகவும் எல்லோரையும் பார்க்க வைத்திருக்கிறான். ஆனா எதிர்கட்சியானவனும் அதே மதத்திலுள்ளவன்தானே என்றால், கப்சிப். நாமெல்லாம் அவன் சொல்றதுக்கு வளைந்து கொடுப்பதால்தான் அவனால சுகமா ஆட்சி நடத்த முடிகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் எங்க மதம் குறைஞ்சிட்டேன்னு வருத்தப்படுறவங்க, தங்கள் பூர்வீக மதமான பெளத்தம் வெறும் 80 லட்சமா குறுகிடிச்சேன்னு யாராச்சும் கவலை படுறாங்களா? அதுவும் எங்க மதத்தில் உள்ளதுதான்னு கூசாம பொய் சொல்றான். நாமளும் நம்புறோம். இந்த பெளத்த மதம் சிதறடிக்கப்பட்டு இன்னைக்கு இந்து, கிறித்தவம், முஸ்லிம் என்ற பெயரில் இருக்காங்க. நமக்கு இதிலுள்ள அரசியலை புரிஞ்சா, இந்த மனுவாத சிஸ்டமே காலி பண்ணிடலாம். பாபாசாகேப்பின் பேரனா நாமிருந்தா கண்டிப்பா பெளத்தத்தை சிந்தித்தே ஆக வேண்டும். அதுவும் சேஷசமுத்திரம் விவகாரம் நம்ம தலையில விழுந்த சம்மட்டி அடின்னு புரியுதா?

ஆக ஆட்சியை நாம பிடிக்கணும். ஏன்னா பாபாசாகேப்போட கனவை நிறைவேற்றணும். அதுக்கு நான் பள்ளர், பறையர், சக்கிலியர், .....ன்னு யோசிக்காதீங்க. அதைப்போல் நான் கன்னடன், நான் மலையாளி, நான் தமிழன், நான் தெலுங்கன்னும் யோசிக்காதீங்க. நாம் இந்திய நாட்டில் இருக்கிறதால, இந்தியர்களாகத்தான் செயல்படணும். அதனால்தான் பாபாசாகேப் ''Think as an Indian first, as an Indian last'' என்கிறார்.
ஏன்னா பார்ப்பான் வெறும் 3 1|2% சதவீதமே இருந்தாலும், இந்தியா முழுமையும் இருக்கிறானோ, அதைப்போல நாமளும் 25 முதல் 30% இருந்தாலும் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறோம். செட்யூல்டு காஸ்ட் என்பது ஒரு தேசிய சமூகம். ஒரு மாநில சமூகமல்ல. நம்மை ஒரு மாநிலத்தில் அடக்க நினைப்பவர்களுக்கு துணை நிற்பதும் பாபாசாகேப்பிற்கு செய்யும் துரோகம். கொஞ்சம் விசாலமா யோசிச்சி பாருங்க, சட்டம் எல்லாருக்கும் சமமாத்தான் எழுதியிருக்கார். அதை நடைமுறை படுத்தற ஆட்சியாளரை தவறாக தேர்வு செய்திட்டு, குத்துதே, குடையுதேன்னு ஒட்டுமொத்த இந்தியாவிலிருந்து பிச்சுக்கிட்டா சரியாயிடுமா?  உணர்ச்சி சார்ந்து சிந்திக்காதீங்க. அறிவார்ந்த சமூகமா யோசிங்க.
பட்டியலினம், பார்ப்பான், முஸ்லீம் இந்த மூன்றும்தான் தேசிய அளவில் எல்லா இடங்களிலும் பரவியிருக்காங்க. அத இன்னும் சிம்பிளா சொல்றதானா...

தொடரும்

No comments: