உலகத்துலேயே நல்லவன் திருடன் தான்..
எப்படின்னு கேக்கறிங்களா...?
ஒரு டாக்டரோட எதிர்பார்ப்பு எல்லாரும் நோயாளியா இருக்கனும்ன்னு...
ஒரு வக்கீலோட எதிர்பார்ப்பு எல்லாருக்கும் நிறைய பிரச்சனை இருக்கனும்ன்னு...
ஒரு போலீசோட எதிர்பார்ப்பு எல்லாரும் கிரிமினலா இருக்கணும்ன்னு...
ஒரு மெக்கானிக்கோட எதிர்பார்ப்பு எல்லாரோட காரும் ப்ரேக் டவுன் ஆகணும்ன்னு...
ஒரு டென்டிஸ்ட்டோட எதிர்பார்ப்பு எல்லார் பல்லும் சொத்தையாகணும்ன்னு...
ஒரு வெட்டியானோட எதிர்பார்ப்பு எல்லாரும் எப்ப சாவான்னு...
ஆனா திருடன் மட்டும் தான்
எல்லாரும் நல்லா வசதியா வாழணும்..
அம்புட்டு பயலும் நைட்டு நிம்மதியா தூங்கணும்ன்னு எதிர்பார்ப்பான்...
இப்படி அடுத்தவங்க நல்லாருக்கணும்ன்னு நினைக்கற ஒரு ஒப்பற்ற ஜீவன பொசுக்கு பொசுக்குன்னு புடிச்சு உள்ளார போட்டறோமே இது நியாயமா?
No comments:
Post a Comment