*முக அழகை' அசிங்கமாக காட்டும் மேடு பள்ளங்கள் நிறைந்த சருமத் துளைகளைப் போக்க முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் முடியும். அதுவும் ஒருசில ஃபேஸ் பேக்குகள் கொண்டு எளிதில் முகத்தில் உள்ள மேடு பள்ளங்களைப் போக்கலாம்.*
*முல்தானி மெட்டி மற்றும் ஆலிவ் ஆயில்*
*ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.*
*பின்பு அதனை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.*
*இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் மறையும்.*
*தேன் மற்றும் டீ-ட்ரை எண்ணெய்*
*ஒரு பௌலில் 2 டீஸ்பூன் தேனுடன் 3-4 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.*
*பின் முகத்தை நீரால் நனைத்து, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.*
*பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.*
*சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர்*
*1/2 டீஸ்பூன் சந்தன பவுடரை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.*
*பின்பு அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.*
*பின் 10-15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.*
*மஞ்சள் மற்றும் பால்*
*ஒரு சிறிய பௌலில் 1 டீஸ்பூன் பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.*
*பின் அந்த கலவையை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வையுங்கள்.*
*பின்பு முகத்தை நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வர, முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
No comments:
Post a Comment