Monday, October 8, 2018

முடி வளர ஆலிவ் எண்ணெய்...

முடி வளர ஆலிவ் எண்ணெயை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? (How To Use Olive Oil For Hair Growth?

முடி உதிர்வது இன்று பெரும்பாலான மக்களின் பிரச்சனையாக உள்ளது. போதிய ஊட்டச்சத்து இல்லாமை, வாழ்க்கை முறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மாசுபடுதல், மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் முடி உதிர்கிறது. கர்லிங், ஹேர் ஸ்ட்ரெய்ட்டெனிங் போன்ற ஹேர் ஸ்டைல் செய்துகொள்வதாலும் ஹேர் கலர் போட்டுக்கொள்வதாலும் முடி உதிர்வது இன்னும் அதிகமாகிறது.
ஆரம்பத்திலேயே இதனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பிற்காலத்தில் வழுக்கை உண்டாகலாம். அதுமட்டுமல்ல, வழுக்கையைச் சரி செய்வதை விட, முடி உதிர்வதைச் சரி செய்வது எளிது! முடி உதிர்வதைத தடுத்து உங்கள் முடியைக் காத்துக்கொள்ள சில இயற்கையான தீர்வுகள் உள்ளன. அதில் ஒன்று ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது.

முடி வளர்ச்சிக்கு ஆலிவ் எண்ணெய் (Olive oil for hair growth)
ஆலிவ் எண்ணெய் (உயர்தரமானது, எக்ஸ்ட்ரா விர்ஜின் என்று கூறுவார்கள்) தலையின் மேற்பகுதி எலும்பு மற்றும் தொலை ஆரோக்கியமாக வைக்க உதவும். இது முடி உதிர்வதைத் தடுப்பதுடன் முடி வளரவும் உதவுகிறது. உயர்தர ஆலிவ் எண்ணெய் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை நிரூபிக்க பெருமளவிலான புள்ளிவிவரங்கள் கிடைக்கின்றன.

ஆலிவ் எண்ணெயை வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம் உள்ளுக்கும் எடுத்துக்கொள்ளலாம் (Olive oil can be used for both external and internal purposes):
a) தலை மசாஜ்: (DTH (டைஹைட்ரோடேஸ்டோஸ்டிரோன்) ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தி ஆவதன் காரணமாக) முடியின் வேர் சிறிதாகிப் போவதால் முடி உதிர்கிறது. மண்டையோட்டின் (பாக்டீரிய அல்லது பூஞ்சான்) நோய்த்தொற்று காரணமாகவும் முடி உதிரும். உயர் தரமான ஆலிவ் எண்ணெயைக் கொண்டு தினமும் மண்டைக்கும் முடிக்கும் மசாஜ் செய்து வந்தால், DTH ஹார்மோன் உற்பத்தி குறைந்து, நோய்த்தொற்றுகளும் குறைந்து முடி உதிர்வது குறைகிறது.

b) ஹேர் கண்டிஷனர்: உங்கள் முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் உங்கள் தலையின் மேற்பகுதியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தலையில் மிதமான சூட்டுடன் கூடிய ஆலிவ் எண்ணெயைப் பூசினால் அது தலையில் ஈரப்பதத்தை அதிகரித்து, முடியைத் தடிமனாகவும் உறுதியாகவும் மாற்ற உதவும். இப்படிச் செய்வது உங்கள் முடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது.

சமையலில்: சமையலுக்கும் குடிப்பதற்கும் (நீரில் ஆலிவ் எண்ணெயையும் எலுமிச்சம் பழச் சாற்றையும் சேர்த்து அருந்தலாம்) அடிக்கடி ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.

ஆலிவ் எண்ணெயை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? (How to use the olive oil?)
1) தலை மசாஜ்: எப்போதும் உயர் தர ஆலிவ் எண்ணெயையே வாங்கவும், அதுதான் ரசாயனப் பொருள்கள் இல்லாத சுத்தமான எண்ணெய்.

சிறிதளவு எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றிக்கொண்டு தலையில் சுமார் பத்து நிமிடம் தேய்த்து மசாஜ் செய்யவும். நீராவி பறக்கும் வெதுவெதுப்பான துண்டைக் கொண்டோ ஷவர் கேப் கொண்டோ முடியைக் கட்டி மூடிக்கொள்ளவும். எண்ணெய் முடியில் நன்கு ஊறும்வரை காத்திருக்கவும். முடி நன்கு ஊறியதும் மென்மையான ஷாம்பூ கொண்டு குளிக்கவும்.

அல்லது இதையும் செய்யலாம்: மூன்று டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் டீ மர எண்ணெய் 7-10 துளிகள் விட்டு கலந்து அதைக் கொண்டு தலைக்கு மசாஜ் செய்யவும். இரவு முழுதும் ஊறவைத்துவிட்டு காலையிலும் குளிக்கலாம்.

ஆலிவ் எண்ணெய் உயர் தரமானதா எனச் சோதிக்கும் முறைகள் (Checklist to confirm if the olive oil is extra virgin):

பேக்கேஜிங்கைப் பாருங்கள். பேக்கேஜில் QvExtra எனும் தர முத்திரை இருக்க வேண்டும் (அதாவது, இரசாயன, பௌதிக மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிபந்தனைகளுக்கு இணங்கியுள்ளது என்று பொருள்)
org எனும் இணையதளம் அல்லது www. fda. gov எனும் FDA-வின் அரசாங்க இணையதளத்தில் புதிய ஆலிவ் எண்ணெய் பிராண்டுகள் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆலிவ் எண்ணெயின் சுவை கசப்பாகவும், லேசாக மிளகு நெடி கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஆலிவ் எண்ணெய் கெட்டுப்போன வாடை அடித்தால் அல்லது பொலிவின்றி மங்கலாக இருந்தால் அதைப் பயன்படுத்த வேண்டாம்.
2) ஹேர் கண்டிஷனர்: வீட்டிலேயே ஹேர் கண்டிஷனர் தயார் செய்துகொள்ளலாம்.

a) ஒரு கிண்ணத்தில் ஆலிவ் எண்ணெயை எடுத்துக்கொண்டு, அதில் முட்டையின் வெள்ளைக் கருவையும் அதனுடன் எலுமிச்சம் பழச் சாறு ஓரிரு சொட்டுகளும் சேர்க்கவும். இவற்றை நன்றாகக் கலந்துகொண்டு, தலையில் தேய்க்கவும்.

தலை முழுவதும் பூசியிருக்க வேண்டும். அதை அப்படியே 15-20 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். ஷாம்பூ போட்டு தலை குளிக்கும் முன்பு, நன்கு அலசிவிடவும்.

b) டீப் கண்டிஷனிங் பேஸ்ட்டும் தயார் செய்யலாம். இதற்கு, ஒரு கப் ஆலிவ் எண்ணெயை மைக்ரோவேவ் அவனில் சுமார் பத்து வினாடி வைத்து வெதுவெதுப்பாக சூடாக்கிக்கொள்ள வேண்டும். அதை கால் கப் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் சின்னமோன் பவுடருடன் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை முடியில் பூசவும். பத்து பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு பிறகு ஷாம்பூ போட்டு முடியைக் கழுவவும். இதைக் குறைந்தது வாரம் ஒருமுறை செய்யலாம்.

ஆகவே, உயர்தர ஆலிவ் எண்ணெய் தலை மேற்பரப்புக்கும் முடிக்கும் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி, சிறப்பாகக் கண்டிஷனிங் செய்து முடி உதிர்வதை தடுக்கலாம்.

No comments: