Monday, October 8, 2018

குறளும் - கீதையும்!

திருக்குறளில் ஜாதி, மத வேறுபாடுகள் இல்லை. ஆனால், பகவத் கீதையில் ஜாதி அமைப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக திருக்குறளை எந்தப் பார்ப்பனரும் ஏற்றுக்கொள்வதில்லை.
பார்ப்பனர்கள் இவ்வாறு திருக்குறள் மீது வெறுப்புக் கொள்வதற்கே காரணம், அது பிறவிப் பேதத்தை எதிர்ப்பதுதான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கருத்தை வலியுறுத்துவதுதான்.
பார்ப்பனர்கள் பிறவியிலேயே உயர்ந்தவர்கள் பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள், சூத்திரர்கள் பிரம்மாவின் பாதத்தில் இருந்து பிறந்தவர்கள் இழிந்தவர்கள் என்ற இந்து மதக் கூற்றுக்கு மனுதர்மம் வேதங்களின் புளுகுக்கு கீதையின் சரக்குக்கு திருக்குறள் மரண அடி கொடுக்கிறது என்கிறபோது குறளை எப்படி ஏற்பார்கள் பார்ப்பனர்கள்?
நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது. (கீதை, அத்தியாயம் 4, சுலோகம் 13).
ஜாதி தருமம் என்பது தன்னால் உண்டாக்கப்பட்டது என்றும், ஜாதியை உற்பத்தி செய்த பகவான் கிருஷ்ணனாலேயே அதனை மாற்றியமைக்க முடியாது என்றும் கூறுவது கீதை. இது புனித நூலாம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (திருக்குறள் 972)
பிறப்பு என்பது எல்லா மக்களைப் பொறுத்தும் ஒன்றுதான்; அதில் ஏற்றத் தாழ்வு கிடையாது என்று கூறுவது திருக்குறள்.
வருண தன்மையில் பிராமணன், சூத்திரன் என்ற பேதத்தைக் கற்பிப்பதோடு கீதை நின்றுவிடவில்லை; சூத்திரரும், வைசியரும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்றும் கேவலப்படுத்துகிறது. அதாவது வேசி மக்கள் என்கிறது. அத்துடன் சூத்திரர்களை மென்மேலும் இழிவுபடுத்துவதே கீதை. எச்சில் உணவே அவனுக்கு பிடிக்கும் எனவும், பிராமணன் இட்ட கட்டளையை சூத்திரன் கடைப்பிடிப்பதே அவனுக்கு விதிக்கபட்ட பணி என்றும் கூறுகிறது. அத்யாயம். 17- / 9-11.
அதனால்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கீதை என்பது ஒரு முட்டாளின் உளறல் என்று முகத்தில் அடித்ததுபோல விமர்சித்தார்.
இன்னும் சமஸ்கிருத ஆரிய கீதையை புனிதநூலாக ஏற்கும் தமிழனுக்கு சுயபுத்தி வரவில்லை என்பதுதான் வேதனை.

No comments: