Friday, November 16, 2018

அவல் பிரியாணி...

*சமைக்காத பிரியாணி...!* "*அவல் பிரியாணி'.*

அவலை சுத்தப்படுத்தி தேங்காய்ப் பாலில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் பட்டை, கிராம்பு, சோம்பு பொடித்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றை கழுவி பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கொட்டி கிண்டினால் அவல் பிரியாணி தயார். "தம்' போடுவதற்கு கரி தேட வேண்டியதில்லை; ஆவி வரும்முன் விசில் போட வேண்டியதும் இல்லை!

பிரியாணிக்கு பிரதானமான தயிர் பச்சடியும் உண்டு. இந்த பச்சடி தயிரில் இருந்து தயாரிக்கப்படுவதல்ல! தேங்காய்ப் பாலில் எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் சுவையான தயிர் தயார். அப்புறம் பெரிய வெங்காயம், கேரட்... இத்யாதிகளைச் சேர்த்தால் போதும்.

அவலைப் பொடித்து தேங்காய்ப் பால், தண்ணீர், நாட்டுச் சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்தால் பாயசம் தயார். இவற்றை தலைவாழை இலையில் பரிமாறினால் *"படாகானா'* தோற்றுவிடும் "இயற்கை உணவு விருந்து'. எல்லாவற்றையும் நன்றாக மென்று சாப்பிட்டாலே போதும், உடலுக்குத் தேவையான சத்துகளுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தானாக வரும்.

அதிகாலை 4.30 மணிக்கு எழுந்துவிட வேண்டும்.  இடையிடையே முன்பு பட்டியலிடப்பட்ட இயற்கை உணவு.

- உமிழ்நீர் ஊட்டச்சத்து

- குடல் சுத்தமே உடல் சுத்தம்

- நடப்பது கால்களுக்கு நன்மை

- ஊறுகாய் தவிர்த்தால் ஊறு நேராது

No comments: