Friday, November 16, 2018

சத்தான சில குழம்பு வகைகள்...

*மண்டைக்குத் தேவை வெண்டைக்காய் குழம்பு*

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, வெங்காயம் - 1, கீறிய பச்சை மிளகாய், தக்காளி - தலா 2, பூண்டு - 2 பல், புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தேங்காய் துண்டுகள் - 2, சீரகம் - ஒன்றரை டீஸ்பூன், கறிவேப்பிலை, குழம்பு பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், வெண்டைக்காய், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, வெண்டைக்காய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி... மிளகாய்த்தூள், தேங்காய் - சீரகம் விழுதைப் போட்டு வதக்கவும். கடைசியாக புளியைக் கரைத்து ஊற்றி, சிறிது தண்ணீர் விட்டு, குழம்பு பொடி சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும் with குழைவான சாதம்

*இரத்த குழம்பு*

தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும் அல்லது பொடியாக நறுக்கவும்), கீறிய பச்சை மிளகாய் - 1, பூண்டு - 2 பல், பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிதளவு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு... பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரைத்த தக்காளி விழுது (அ) பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும். With குழைவான சாதம்

*காய்கறிக் கலவை'*
தினமும் ஒவ்வொரு வேளை உணவிலும் பலாப்பழம், பேரீச்சம்பழம், தேங்காய் கீற்றுகள், கேரட், மாங்காய், வெள்ளரிக்காய் போன்றவை "சைடு டிஷ்'. முட்டைகோஸ், கேரட், புடலங்காய், செüசெü, மாங்காய் போன்றவற்றை பொடித் துண்டுகளாக நறுக்கி உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித் தழைகளைக் கலந்தால் "காய்கறிக் கலவை' தயார். வேகவைத்து, தாளித்து நாம் அன்றாடம் தயாரிக்கும் கூட்டு பொறியலை விஞ்சுகிறது இந்தப் பச்சைக் கலவை.

No comments: