Tuesday, December 25, 2018

சிந்தனைக்கு சில வரிகள்...

* பொய்யர்களுடன் ஒருபோதும் வாதாடவேண்டாம். நீங்கள் வெற்றி பெறவே முடியாது. ஏனென்றால் அவர்கள் தங்கள் பொய்களை திடமாக நம்புகிறார்கள். அதை நிரூபிக்க என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள், செய்வார்கள்...

* கோபமும்,  புயலும், ஒரே மாதிரி தான் அடங்கின பிறகு தான் தெரியும் அடைந்த நஷ்டம் எவ்வளவு என்று... அன்பையும் அமைதியையும் கையாண்டால் அதன் பலன் எப்பொழுதுமே இனிமையாகவே இருக்கும்...

* வெற்றியடையும் வரை தனது சிந்தனைகளை சிதறவிடக்கூடாது. தனது குறிக்கோளை உணவாக உண்ணவேண்டும், நீராக குடிக்க வேண்டும். வைராக்கியமாக மனதில் தைக்க வேண்டும். மனதை தொய்வடைய வைக்கும் பலவீன வார்த்தைகளை கேட்க கூடாது. அதைப்பற்றி சிந்திக்கவும் கூடாது. இவற்றுடன் உற்சாகம் குறையாமல் தனது லட்சிய பயணத்தை அடைந்துவிட வேண்டும்...

* படிப்படியாய் மேல் நோக்கி செல்வதே வாழ்க்கை. இன்பம் மேலே மட்டுமல்ல, ஒவ்வொரு படியிலும் கூட இருக்கிறது... பழகுபவர்கள் வேறு... உரிமையுள்ளவர்கள் வேறு... பழகுபவர்கள் ஒரு போதும் உரிமையாய் நம் கஷ்டத்தில் பங்கெடுப்பதில்லை. யார் ஒருவன் தனக்கு உள்ள கெளரவமும், மரியாதையும் போய் விடுமே என்று பயந்தபடி இருக்கிறானோ, அத்தகையவன் அவமானத்தைத்தான் அடைகிறான்... "எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம் " என்ற மனநிலை எப்போது வருகிறதோ அப்போது தான் நாம் பயம் என்ற‌ உணர்வில் இருந்து விடுபட முடியும்...

* பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை... தோல்விகள் சூழ்ந்தாலும் இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.

* வாழ்க்கையின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இரண்டு காரணங்கள் நாம் சிந்திக்காமல் செயல் படுகிறோம்... அல்லது சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்கிறோம்...

* தெருநாய் ஒன்று உடையாத தேங்காய் ஒன்றைப் பற்றி அதனை உடைத்து உண்ண முடியாமல் உருட்டியபடியே  சென்றதாம். அதனை எடுக்க யார் வந்தாலும் குரைத்துத்  துரத்தியதாம் அந்த தேங்காய் அதற்கும் பயன்படாது பிறர்க்கும் உதவாது சேற்றில் விழுந்து மறைந்ததாம். உலோபியும் அந்த நாயைப் போல். அழிவான்...

No comments: