Sunday, January 13, 2019

சிந்தனை செய் மனமே...

உலகியல் அனுபவம்...

உலகியல் வாழ்வை துறந்து விட்டு

எங்கோ ஒரு மலையின் முகட்டை நோக்கி சென்று

தனிமையில் இருந்து பெறுவது அல்ல ஞானம்

போட்டிகளும், பொறாமைகளும்

அவமானங்களும், அலட்சியங்களும்

ஏமாற்றங்களும், ஏச்சுக்களும்

நிராகரிப்பும், நேர்மையின்மையும்

நிறைந்த உலகில் வாழும் மனிதர்களோடு மனிதராக

ஒன்றாகவே இணைந்து பயணித்து

மேலும்

தன்னுடைய உடற்கூறுகளின் ஆர்பட்டங்களையும் ஆராதித்து

அதனுடன் ஒத்திசைவு நிகழ்த்தி

அந்த ஒத்திசைவில்

இறை அனுபவம் பெறுவதே ஞானம் அன்றோ !!

நினைத்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கும் போதும்,

நீங்கள் செல்லும் பாதை கரடு முரடாக இருக்கும் போதும்,

கையிருப்பு குறைந்து கடன் தொல்லைகள் நெருக்கும் போதும்,

உங்களின் பொறுப்புக்கள் உங்களை அழுத்தும் போதும்,

ஒதுங்கி விடாதீர்கள்...

அவசியமானால் சற்றே ஓய்வெடுத்து விட்டு மீண்டும் முயற்சியுங்கள்.

வெற்றி பெறுவீர்கள்.

கற்றது கையளவு

இது ஞானியருக்கும் பொருந்துமா...???

கற்றல்லிருந்து விடுதலை  இதுவே ஞானிகள் நிலை

ஞானிகளானாலும் கற்றது கை மண் அளவு தான்

ஏனெனில்

எல்லாம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை

எதுவும் தெரியாதவர்களும் யாரும் இல்லை

There is No one who knows everything...

There is No one who knows nothing...

யாராலும் முழுவதும் கற்றுக் கொண்டதாக கூற முடியாது

அப்படியே கூறினாலும்

அது உண்மையானதாக இருக்க முடியாது

பாடப் புத்தகத்தில் படிப்பவர்கள் மாணவர்கள்

தன் அனுபத்தை பாடமாக்கி கற்றுக் கொண்டவர்கள் மகான்கள் !

முயற்சி செய்து தோல்வியடைந்தால் வருந்தாதீர்கள்...*

இங்கு

*நிறைய முட்டாள்கள் தோல்வி பயத்தில் முயற்சியே செய்யாமல் ஓடி ஒளிகிறார்கள்...*

*நாம் தொடர்ந்து முயற்சிப்போம்...*

No comments: