Wednesday, January 2, 2019

சிந்திக்க சில வரிகள்...

இஷ்டப்பட்ட வாழ்க்கை நமக்கு கிடைக்கவில்லை என்று கஷ்டப்பட்டு வாழ்வதல்ல வாழ்க்கை..! இஷ்டமில்லா வாழ்க்கை  கிடைத்த போதும்..! அதை நம் இஷ்டத்திற்கு மாற்றியமைத்து சந்தோஷமாக வாழ நினைப்பது தான் உண்மையான வாழ்க்கை..!

முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..

எதுவுமே கிடைக்கவில்லையா? நீங்கள் இப்போது உயிரோடு இருப்பதே பெரிய விஷயம். அதற்காக மகிழ்ச்சி அடையுங்கள். அந்த மகிழ்ச்சி எல்லாவற்றையுமே கொடுக்கும். மன தைரியத்தை இழந்துவிட்டால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்.

மழலையின் கள்ளச்சிரிப்பில், களவு போனது என் மனம் மட்டுமல்ல, கவலைகளும்.

எதற்கும் தயங்காதே..!! எதற்கும் அஞ்சாதே...!! எதற்காகவும் வெட்கப்படாதே..!! உன்னை உலகம் பார்க்கவில்லை நீ தான் அவனை இவனை பார்க்கிறாய் இந்த உலகமே உன்னை பார்க்கவை..!!

நாம் எதை செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ... அதைத் தான் நம்மை முதலில் செய்ய வைக்கிறது... வாழ்க்கை

கோபம் வருவதற்கு தகுதியே உரிமை தான்! உரிமை இருந்தா தான் கோபமும் செல்லுபடியாகும்!! அன்பு இருந்தா தான் அந்த கோபமும் மதிக்கப்படும்!!! உன்னை தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு... உயர்த்தி பேசும் போது செவிடனாய் இரு... வாழ்வில் எளிதில் வெற்றி பெறலாம்...

எதை எல்லாம் நடக்கக்கூடாது என்று எண்ணுகிறாயோ... அதெல்லாம் நடப்பது தான் வாழ்க்கை... மாற்றத்தை மற்றவர்களிடம் எதிர்பார்பதை விட நம்மிடத்திலிருந்து ஆரம்பிப்போம்...

வயதில் வலிகளை சுமந்தால் வயதான பிறகு சுகங்களை சுமக்கலாம் ...

நம்மளா பாத்து உருவாக்கி விட்ட ஒரு விஷயம் தான் இந்தப் பணம். இப்ப நாம மனுஷனா வாழணும்னாக் கூட பணம் இல்லாம முடியுறதில்ல...

இந்த உலகில் இறைவன் இரண்டு பேருடைய பிராத்தனையை மட்டுமே கேட்கின்றார்...
ஒன்று உண்மையானவன்... மற்றொன்று சுயநலமற்றவன்...

எவ்வளவு சம்பாதித்தாய்... என்பதை விட... எவ்வளவு சந்தோஷமாய்... வாழ்கிறாய் என்பதே...
அவசியம்... வாழ்க்கையில்...  
              
பொய்யை  உடனே  சொல்லிவிட  முடிகிறது. உண்மையை  சொல்லத்தான்  யோசிக்க வேண்டியிருக்கிறது!

ஒருபோதும் மனிதர்கள் மாறுவதில்லை, அவர்களின் மீதான அபிப்பிராயங்கள் தான் மாறுகின்றன...!

ஒன்றை இழக்கும் போதோ அல்லது ஒன்றை வெறுக்கும் போதோ தான் மற்றொன்றின் மீது பற்று ஏற்பட்டு ஞானோதயமாகி ஒரு புதிய பாதையை தேடி போகின்றது மனசு...

No comments: