Tuesday, January 1, 2019

சிந்திக்க சில வரிகள்...

சொல் வன்மையுடையவன் பொய்யும் உண்மை ஆகும் சொல்வன்மை இல்லாதவன் மெய்யும் பொய் யாகவே கருதப்படும் என்ன விந்தை உலகம் இது...

எச்சரிக்கை உணர்வோடு இருங்கள்... அதே சமயத்தில் அதிக எச்சரிக்கையோடு இருக்க முயற்சிக்காதீர்கள்... அது உங்கள் தூக்கத்தை கெடுப்பதோடு மன உளைச்சலையும் உருவாக்கும்...

"கோபமும் அழுகையும் சட்டுனு வருதுன்னா" மனம் பல காலமா ரணமாகி கிடக்குதுன்னு அர்த்தம்... ஒவ்வொரு சோகமும், துன்பமும், வாழ்க்கை எனும் பாடத்தை ஆழமாக கற்றுத் தரவே வருகின்றன... நம்பிக்கையோடு வாழுங்க...

*பணம் வைத்திருப்பவர்கள்தான் பணக்காரர்கள் என்று சொல்ல முடியாது. நல்ல குணம் படைத்தவர்கள்தான் நிரந்தரப் பணக்காரர்கள். அதுதான் என்றும் நிலைத்து நிற்கும்.*

வாழ்க்கையில் விதியின் விளையாட்டு வலிமையானது... அதைவிட  வலிமையானது நீங்கள்  உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை...

எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும் ஆனால் கழுகு மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும் - நீங்கள் கழுகாக இருங்கள்...

உங்கள் விதியை மாற்றி எழுதும் சக்தி உங்கள் எண்ணங்களுக்கு உண்டு. உங்கள் எண்ணங்களில் திண்ணம் இருந்தால் விதியும் விலகிச் செல்லும்... தொடர்ந்து செயல்படுங்கள்... வெற்றி நிச்சயம்...

ஒரு நாள் ஒருவன் காக்காகிட்ட நீ மட்டும் கருப்பா இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும் என்று... கடலிடம் சொன்னான் நீ மட்டும் நீலமா இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும் என்று... ரோஜாவிடம் சொன்னான் நீ மட்டும் வாடாமல்  இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும் என்று... அப்போது அந்த மூன்றும் ஒன்று சேரந்து அவனிடம் சொன்னது... ஏ மனிதனே உன்னிடம் மட்டும் பிறரின் குறை கண்டுபிடிக்கும் பழக்கம் இல்லைன்னா... எவ்ளோ நல்லா இருக்கும் என்று...

No comments: