Monday, March 4, 2019

பிறந்த வீடே சொர்க்கம்...

விடுமுறை நாட்களில் திருமணமான பெண்கள் விருப்பத்துடன் போக விரும்புவது
ஊட்டியோ கொடைக்கானலோ
இல்லை தன் பிறந்த வீடு அதை விட ஒரு சிறந்த ஓய்விடம் அவளுக்கு எங்கேயும்
கிடைக்காது.

சொந்த வீட்டினில்
காத்தால சீக்கிரம் எழுந்து காபி கொடுத்து
காலை டிபன் செஞ்சு
அது கூட மதியமும் சேர்த்து லஞ்ச் செஞ்சு
குழந்தைகளைக் குளிப்பாட்டி
எட்டு மணிக்கெல்லாம்
அவர்களை ஸ்கூல் வேனில் ஏத்தி
மிஞ்சிய டிபனை இருக்கிறதை
வாயிலப் போட்டு
சமைச்ச பாத்திரங்களைக் கழுவி
ஊற வைத்த துணிகளைத் துவைச்சு
வீடு மொத்தமாய்‌ப் பெருக்கி,
மதியம் சாப்பிட
ஒருத்திக்கு எதுக்கு சமையல்னு
இருக்கிறதை அள்ளிப் போட்டு சாப்பிட்டு

தனியாய் வெறுப்பாய்
பேசக் கூட ஆள் இல்லாமல்
டிவியும் ஃபோனும்
மாறி மாறிப் போயி வந்துட்டு காய்ந்த துணிகளைக் கொண்டு வந்து ஸ்கூல் விட்டு வந்த குழந்தைகளுக்குக்
குடிக்கக் காம்பளான் கொடுத்து விட்டு
பாடத்தை வரவழைக்க வாய் வலிக்க சொல்லித் தந்து, இடையில் இட்லிக்கு ஊறப்போட்டு,
நைட்டு டிபன் என்ன செய்யறதுன்னு
இடையில பிளான் எல்லாம் போட்டு
தூங்கப் போறதுக்குள்ள ஒரு யுகமே முடியற மாதிரி இருக்கும்

ஆனா இதுவே இங்க அம்மா வீட்டில
காலை எவ்வளவு நேரமும் தூங்கலாம்
சமைக்க வேண்டாம்
பாத்திரம் கழுவ வேண்டாம் கீரைகளை ஆய வேண்டாம்
சீக்கிரம் சாப்பிடலாம்
சாப்பிடும் போதும் டிவி பார்க்கலாம்
அக்கம் பக்கம் கதை பேசலாம் அப்பா கூட வம்பு இழுக்கலாம்
அம்மாவைக் கொஞ்சலாம்
இருக்கிற அந்த ஒரு வாரமும் சுவர்க்கமாய்ப் போகும். எங்களுக்கு
இது எல்லாம்
கணவன் வீட்டிலும் கிடைக்கும்
ஆனா ஒரு படி மேல்
பிறந்த வீட்டில் தான் அந்த நிம்மதி கலந்த சந்தோஷம் கிடைக்கும்.
அதுவே பெரும்பாலும் பெண்கள் விரும்புவர்

அதுவும் திருமணம் ஆனப் பின்னும்
அதே உரிமை வீட்டில் இருந்தால் அவர்கள் அதை தனிக் கொண்டாட்டாமாகவே
விரும்புவர்.
காலச் சூழ்நிலையால் பிறந்த வீடு இல்லாமல் இருக்கும் சில பெண்கள் நிச்சயம் பாவம் தான் ...

No comments: