Saturday, July 13, 2019

விண்டோஸ் 10 இல் டேட்டா தேவையின்றி வீணாவதை தடுத்தல்...

* அனைத்து பள்ளிகளுக்குமே Laptop வழங்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு வழங்கப்பட்டுள்ள Laptop-ல் Windows 10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயங்குதளம் மற்ற இயங்குதளங்களை விட அதிக வசதிகள் கொண்டது.

*ஆனால் இதில் இருக்கும் ஒரு மிகப்பெரிய பின்னடைவு எதுவென்றால் இந்த இயங்குதளம் அதிகப்படியான டேட்டாவை எடுத்துக் கொள்ளும் என்பது தான். நாம் பெரும்பாலும் தினமும்1.5 GB என்ற அளவிலேயே டேட்டாவை பயன்படுத்தி வருகிறோம்.

* ஆனால் இந்த இயங்குதளமானது 15 நிமிடங்களிலேயே 1.5GB டேட்டாவைத் தீர்த்து விடும். நாம் Internet connection கொடுத்துவிட்டாலே போதும் நாம் பயன்படுத்தாமல் இருந்தாலும் நமது டேட்டா தீர்ந்து விடும்.

* இதற்கு காரணம் இந்த விண்டோஸ்10 தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் தன்மை கொண்டது. இவ்வாறு நமது டேட்டா வீணாவதை பின்வரும் வழிமுறைகளைக் கையாண்டு தவிர்த்து கொள்ளலாம்.

1. உங்கள் லேப்டாப்பில் *Windows+R* பட்டனைக் கிளிக் செய்யவும்.

2. கீழே தோன்றுகின்ற Search box ல் *services.msc* என்று டைப் செய்து enter செய்யவும்.

3. தற்போது திரையில் தோன்றும் dialog box ல் *windows update* என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து double click செய்யவும்.

4. தற்போது திரையில் தோன்றும் புதிய box ல் *start up type* என்ற ஆப்ஷனுக்கு எதிரில் இருக்கும் கட்டத்தில் automatic அல்லது manual என்று இருக்கும்.

அதை கிளிக் செய்தால்
Automatic (start delay)
Automatic
Manual
Disabled
என்று 4 ஆப்ஷன்கள் தோன்றும்.

அதில் *disabled* என்பதனைத் தேர்வு செய்யவும்.

5. அதன் கீழிருக்கும் *service status* கட்டத்தில் *stop* என்பதனைத் தேர்வு செய்து *OK* கொடுக்கவும்.

6. பின்னர் மீண்டும் *windows update* ல் Double click செய்து *service status stopped* என உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

*இவ்வாறு செய்யும் பட்சத்தில் நமது டேட்டா தேவையின்றி வீணாவதை தடுக்கலாம்.*

முபாரக் சாதிக் அலி கான்,
கணினி ஆசிரியர்,
அமேநிப, அகரம்.

No comments: