Thursday, July 18, 2019

2019 - ( புதிய ) தேசிய கல்விக் கொள்கை...

தேசிய கல்விக் கொள்கையை யாராவது சுருக்கித்  தர மாட்டார்களா என்று பதிவு போட்டிருந்தேன். இதோ மதுரை அருணாசலம் சார் @Aruna Chalam.கேப்சூல் வடிவில் தந்துள்ளார்...மிகச் சுருக்கம்...
*******

2019 - ( புதிய ) தேசிய கல்விக் கொள்கை...

வரைவு நிலையில் உள்ள, இத்திட்டத்தில் மாநில அரசுகளிடம் இருக்கும், தொடக்க, இடைநிலை, உயர் கல்வி சார்ந்த உரிமைகள் முற்றிலும் பறிக்கப்படும்...

1. ஐந்து வயதிற்கு பதிலாக, 3 வயது முடிந்தவுடன் தொடக்கக் கல்வி கட்டாயமாக ஆக்கப்படுகிறது...

2. சமஸ்கிருததிற்கு கூடுதல் முக்கியத்துவம்...

3. மூன்று, ஐந்து, எட்டு வகுப்புகளுக்கு இந்தியா முழுமைக்குமான ஒரே தகுதித் தேர்வு...

4. ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை இடைநிலைக்கல்வி, 8 செமஸ்டர்களை உள்ளடக்கியது....

5. எந்தக் கல்லூரியில்  சேர வேண்டும் என்றாலும்,  இந்தியா முழுமைக்குமான தகுதித் தேர்வு.

6. உயர்கல்விக் கொள்கையின் படி, பல்கலைகழகங்கள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்படுவதால்,  ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்படும்.

7. ஒவ்வொரு நிலையிலும், தகுதித்தேர்வுக்கு ஒவ்வொரு மாணவனும், தனித்தனி கோச்சிங் என்று நிறைய செலவழிக்க வேண்டி வரும்..

8. ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

9. தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரை, எளிதில் தனியார் வசமாக மாற நிறைய வாய்ப்புகள்.

10. சிறிய கல்விச்சாலைகள், படிப்படியாக இணைத்து, கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றுவதற்கான சட்ட முயற்சி.

11.  எட்டாம் வகுப்பு தேசிய தகுதித் தேர்வில் தோல்வியுறும் போது, மாணவனுடைய 13 ஆம் வயதிலேயே, மேல் படிப்பு தொடர விடாமல், ஏதாவது ஒரு தொழிற்கல்வியை திணிக்கும் முயற்சி...

இனிமேல் உயர்கல்வி அனைவருக்கும் சாத்தியமாகாது..

மத்திய அரசின் இச்சட்ட வரைவை அனைவரும் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்...

இல்லையேல் வருங்கால சந்ததியினரின் கல்வி உரிமைகள் முற்றிலும் திசை திருப்பப்பட்டு, 'போலியான' தகுதி என்ற  மதிப்பீடுகளின் படி, ஏமாற்றப்படுவோம்.

1 comment:

Anonymous said...

அப்படியே நன்மைகளையும் பதிவு பண்ணினா இந்த விவாதம் முழுமையடையும்