Monday, July 1, 2019

வரலாற்றில் இன்று : தேசிய மருத்துவர் தினம்

பிடன் சந்திர ராய் (Bidhan Chandra Roy)பீகார் மாநிலம் பாட்னாவில் 1882ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று பிறந்தார்.

மருத்துவம் பயின்ற பிறகு பீகார் மற்றும் மேற்கு வங்க ஏழை மக்களுக்கு சிகிச்சை அளித்தார்.

14 ஆண்டுகள் மேற்கு வங்க முதல்வராக இருந்தார். அப்போது தினமும் ஒரு மணி நேரம் ஏழைகளுக்கு மருத்துவம் செய்தார்.

நாட்டிலேயே சிறந்த மருத்துவர் எனக் குறிப்பிடும் வகையில் ஏழைகளுக்கு மருத்துவ சேவை புரிந்தார்.

இவரின் சேவையைப் பாராட்டி 1961ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

இவர் 1962ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று இறந்தார். இவரின் பிறப்பும், இறப்பும் ஜூலை 1 ஆம் தேதி வருகிறது.

இந்திய மருத்துவத்துறைக்கு பெருமை தேடி தந்த பி.சி. ராயின் நினைவைப் போற்றும் வகையில் ஜூலை 1 ஐ தேசிய மருத்துவர் தினமாக கொண்டாட அரசு அறிவித்துள்ளது.

No comments: