Monday, July 29, 2019

மூன்று சம்பவம் - மூன்று கிளைமேக்ஸ்

*சம்பவம் 1* :

கத்தியை காட்டி மிரட்டி ஒரு பெண்ணின் செயினை திருடன் ஒருவன் பறித்துக் கொண்டு ஓடுகிறான், அப்போது அருகில் இருந்த இருவர் திருடனை மடக்கி பிடித்து செயினை மீட்டு அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறார்கள்.

சம்பவம் 1 *குறித்து மதவாதிகள் கண்ணோட்டம்* :

*அந்த ஆண்டவன் தான் இந்த ரெண்டு பேரையும் அனுப்பி செயினை காப்பாத்தி கொடுத்திருக்கான்*.

சம்பவம் 2 :

கத்தியை காட்டி மிரட்டி ஒரு பெண்ணின் செயினை திருடன் ஒருவன் பறித்துக் கொண்டு ஓடுகிறான், அப்போது அருகில் யாரும் இல்லை. திருடன் தப்பி விடுகிறான்

சம்பவம் 2 குறித்து *மதவாதிகள் கண்ணோட்டம்* :

*நல்ல வேளை செயினோட போச்சு, உயிர் போயிருந்தா திரும்பி வருமா ? ஆண்டவன் உயிரை காப்பாற்றி இருக்கிறான்*.

சம்பவம் 3 :

கத்தியை காட்டி மிரட்டி ஒரு பெண்ணின் செயினை திருடன் ஒருவன் பறிக்க முயல்கிறான், அந்தப் பெண் அவனோடு போராடுகிறாள், கோபம் அடைந்த திருடன் அவளை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிக்கிறான். இரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண் மரணம் அடைகிறாள்.

சம்பவம் 3 குறித்து *மதவாதிகள் கண்ணோட்டம்* :

*விதியை யாரால் மாத்த முடியும்*, அவளுக்கு ஆண்டவன் கொடுத்த ஆயுசு அவ்வளவு தான்.

*கடவுளை காப்பாற்ற மதவாதிகள் (பக்தர்கள்) எப்படி எல்லாம் போராடுகிறார்கள்?*

No comments: