Friday, July 5, 2019

வெண்தாமரையின் மருத்துவ பயன்கள்...

*தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து* *பனை  வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். பித்தத்தைக் குறைக்கும்.*
*நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை எரிச்சல் போன்றவற்றைப் போக்கும்.*
*வயிற்றுப் புண்ணை ஆற்றும்.  சரும எரிச்சலைப் போக்கும்.* 

*வெண்தாமரைப் பூக்கள்.. கல்தாமரை அவற்றுடன் பூண்டு, வெங்காயம், இஞ்சி சேர்த்து இடித்து எலுமிச்சை சாறு தேனுடன் கலந்து சேகரித்து இந்த சாற்றை அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு குவளை நீருடன் தினமும் பருகி வர...*

*உயர் ரத்த அழுத்தம் சீராகும். இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புகளைக் கரைக்கும். இரத்த ஓட்டம் சீராகும்.* *இதயத்தைப் பாதுகாக்கும்.  இதய தசைகளை வலுப்படுத்தும்.*

*தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும்.*

*வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது.  நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது..*

*தாமரை மலரின் நடுவில் இருக்கும் மகரந்த பகுதியை உடைத்துப்பார்த்தால்* *அதனுள்*
*விதைகள் காணப்படும் இவைகள்* *மிகக்கடினமாக இருக்கும் இந்த விதைகளை உடைத்து அதில் இருக்கும்* *பருப்பை சாப்பிட இதய நோய் தீரும் இதயம் பலப்படும்*
*சிறுநீரகங்களை  வலுப்படுத்தும். ஆண்மையைப் பெருக்கும்..*

*தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும்.  காது கேளாமை நீங்கும்.  ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.*

*தாமரைப்பூ, அதிமதுரம், நெல்லிக்காய், மருதாணிஇலை ஆகியவற்றை சம அளவு எடுத்து பால்விட்டு அரைத்து உருட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் விட்டு இந்த உருண்டையை அதில் போட்டு காய்ச்சி வடித்து எடுக்கவும். இந்த தைலத்தை தினமும் தலையில் பூசி வர இளநரை மறையும், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்*

*வெண்தாமரையே அதிக அளவில் மருத்துவத்திற்குப் பயன் படுத்தப்படுகிறது !*

No comments: