Saturday, November 9, 2019

நியாயம்... அநியாயம்...

🦊நரி ஒன்றும் 🐱பூனை ஒன்றும் பேசிக் கொண்டே காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தன. நற்பண்புகள் அனைத்திலும் உயர்ந்தது அன்புதான்., அறிந்தோ அறியாமலோ எந்த உயிர்க்கும் தீங்கு செய்யக் கூடாது. இதுதான் என் கொள்கை. இதைப்பற்றி உன் கருத்து என்ன?" என்று கேட்டது நரி.

"நீ சொல்வது உண்மைதான். ஏன்தான் சில விலங்குகள் எளிய விலங்குகளைக் கொன்று உயிர் வாழ்கின்றனவோ தெரியவில்லை. அப்படிப்பட்ட வாழ்க்கை இழிவான வாழ்க்கை. நான் பிற உயிர்களைக் கொன்று உயிர் வாழ மாட்டேன். அன்பான வாழ்க்கையைத்தான் நடத்துவேன்" என்றது பூனை. இவ்வாறு இரண்டும் அன்பின் பெருமையைப் பேசிக் கொண்டே நடந்தன.

அப்பொழுது 🐺ஓநாய் ஒன்று ஆட்டு மந்தையின் மேல் பாய்ந்து ஓர் 🐐ஆட்டைக் கொன்று தின்றது.இதைப் பார்த்த இரண்டும் "இந்த ஓநாய்க்கு இரக்கமே இல்லையா? இப்படி ஆட்டைக் கதறக் கதற அடித்து உண்பது கொடுமை அல்லவா? எதற்காக இப்படி ஓர் உயிரைக் கொல்ல வேண்டும்? இந்த🐺 ஓநாய் நாசமாகப் போகட்டும். மண்ணோடு மண்ணாகட்டும்" என்று சபித்தபடி நடந்தன.

வழியில் ஓர் ஊர் வந்தது. அங்கே குப்பை மேட்டில் நின்ற ஒரு 🐓சேவல் கொக்ரக்கோ என்று கூவுவதை நரி கேட்டது. தான் பேசி வந்ததை எல்லாம் மறந்த அது ஒரே பாய்ச்சலில் அந்தச் சேவலைப் பிடித்து விழுங்கியது. பக்கத்தில் ஓர் 🐭எலி ஓடுவதைப் பூனை பார்த்து. அன்பின் பெருமையை மறந்த அது அந்த எலியைப் பிடித்து விழுங்கியது.

இது தான் வாழ்க்கை அடுத்தவன் செய்தால் 
அநியாயம் தான் செய்தால் நியாயம் 


உங்களில் ஒருவன்
இர.ஜேசுதாசன் ✍

No comments: