Sunday, April 5, 2020

டாக்டர் ஜி. நம்மாழ்வார்

*இயற்கை வேளாண் விஞ்ஞானி,  தமிழகத்தின் முதன்மை இயற்கை விவசாய*
*முன்னோடியான- டாக்டர் ஜி. நம்மாழ்வார் (G.Nammalvar) பிறந்த தினம்.*

*பிறப்பு:*-

*தஞ்சாவூர் மாவட்டத்தில் இளங்காடு என்னும் கிராமத்தில் ஏப்ரல்-06, 1938 ஆம் ஆண்டு பிறந்தார்.*

*கல்வி:-*

*அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் B.Sc., (அக்ரி) பட்டப்படிப்பு* *பயின்றார்*
*காந்தி கிராமப்* *பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.* 

*பணிகள்:*-

*கோவில்பட்டியில் உள்ள மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக 1963-ம் ஆண்டில் தன் பணியைத் தொடங்கினார்*.

*சேவை மனப்பான்மை:-*

 *இங்கே, மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள்* *விவசாயிகளுக்கு உதவாது அதனை   மாற்றியமைக்க வேண்டும் என்றார்.* 
*அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ‘அய்லாண்ட் ஆஃப் பீஸ்’ என்ற தொண்டு நிறுவனத்தில் இணைந்தார். இந்த அமைப்பின் சார்பில் சுமார் 10 ஆண்டுகள் களக்காடு வட்டாரத்தில் பணியாற்றினார்.*

*இடுபொருட்களைப் பற்றியும், விவசாய நிலத்திலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்யும் முறைகளைக் குறித்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.*

*வினோபா பாவேயின் சித்தாந்தங்களால் கவரப்பட்ட இவர்,  சில கொள்கைகளை வகுத்துக்கொண்டார்.* 

*தமிழகத்தில் இயற்கை வேளாண் முறைகளைப் பரப்புதல், மண்ணின் உயிர்ச் சத்தை மீட்டெடுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.*

*தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியதற்கு முக்கியக் காரணம் என இவர் போற்றப்படுகிறார்.*

*விருதுகள்:-*

*தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ‘சுற்றுச் சூழல் சுடரொளி’ விருதை வழங்கியது.*

No comments: