Monday, April 13, 2020

இது வண்டலூர் சார்...

ஒருத்தன் தன்னுடைய ஆபிசில் இருந்து வீட்டுக்கு போன் செய்தான்.. ரிங் போய் எடுக்கப்பட்டு, 'ஹலோ..' என்ற பெண் குரல் கேட்டது.

அது அவன் பொண்டாட்டி குரல் போல இல்லாததால் அவன், 'யாரு பேசறது' என்று கேட்டான்.

மறுமுனையில்:- 'நான் வீட்டு வேலைக்காரி பேசறேங்க..'

அவன்:- நாங்க வேலைக்காரியே வச்சில்லையே...

மறுமுனை:- இந்த வீட்டுக்காரம்மா என்னை இப்போ தான் வேலைக்கு சேர்த்தாங்க.. ஆமா நீங்க யாரு..

அவன்:- உங்க வீட்டுகாரம்மாவோட வீட்டுக்காரர்.. அவ என்ன பண்ணிட்டு இருக்கா..

மறுமுனை:- அவங்க மாடியில பெட் ரூமுல ஒருத்தரோட பேசிகிட்டு இருக்காங்க.. அவர் தான் அவங்க வீட்டுக்காரர்னு நான் நினச்சேன்..

வேலைக்காரி சொன்னதை கேட்டு கொதிப்படைந்த அவன், 'ஹேய்.. உனக்கு ஒரு லட்சம் ரூபாய் காசு தரேன்.. நான் சொல்றதை இப்போவே செய்வியா..

மறுமுனை:- சொல்லுங்க என்ன செய்யணும்..

அவன்:- ஹால் அலமாரியில என்னோட துப்பாக்கி இருக்கும்.. இப்போவே போய் எடுத்து ரெண்டு பேரையும் சுட்டு தள்ளிட்டு வந்து பேசு.. துப்பாக்கி சத்தம் என் காதுல கேக்கணும்... போ.. போய் சுடு ...

சில வினாடிகள் கழித்து துப்பாக்கி சத்தம் கேட்டது.. அதை தொடர்ந்து வேலைக்காரி பேசினாள்..

மறுமுனை:- ரெண்டு பாடியையும் இப்போ என்ன செய்யறது..

அவன்:- வீட்டுக்கு பக்கத்துல கூவம் ஆறு ஓடும்.. மொட்டை மாடிக்கு போய் அங்கே இருந்து பாடியை தூக்கி கூவம் ஆத்துல போட்டுடு...

மறுமுனை:- கூவம் ஆறா? அப்படி எதுவும் இங்க ஓடலையே.. இது வண்டலூர் ஆச்சே.. இங்க எப்படி கூவம் ஆறு ஓடும்?

அவன்:- என்னது வண்டலூரா.. சாரி ராங் நம்பர்...

No comments: