Tuesday, May 5, 2020

ஊக்கம் தரும் பயிற்சியும், முயற்சியும்...

பயிற்சியும், முயற்சியும்தான் பலருடைய மனங்களை ஆற்றல் பெற்ற மனங்களாக உருவாக்குகின்றன.அடிப்படையில் அனைத்து மனிதர்களின் மனங்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

*முயற்சியும், முறையான பயிற்சியும் இருந்தால் ஒருவர் தனது மனத்தையே மூலதனம் ஆக்கலாம். வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம் .*

மனதை வளப் படுத்துவதற்கும் மூலதனம் ஆக்குவதற்க்கும் பலவற்றை கற்றுக் கொள்வதோடு முறையான பயிற்சியும் இருக்க வேண்டும்.

*முயற்சி செய்யாமல் வெற்றி கிடைக்காது, அதே போல் முயற்சி செய்பவர்கள் எல்லாம் வெற்றி பெறுவது இல்லை.*

திட்டமிட்டு நாம் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும். தோல்விகள் கூட நல்ல அனுபவங்களை தரும். 

*அதோடு, வெற்றிக்கான பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது.*

எனவே வெற்றியை போலவே அதன் பாதையும் முக்கியம்தான்

*புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர் படேர்வஸ்கி அவர் புகழின் உச்சியில் இருந்த போதிலும் தினமும் 10 முதல் 12 மணி நேரம் வயலின் இசைத்து பயிற்சி செய்வார்.*

ஒரு முறை அவரது  நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரிடம் வாசிக்கும் வயன் கலைஞருமான ஒருவர் ''உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?'' என்று கேட்டார்.

*அதற்கு படேர்வஸ்கி.,*

'' எனது வெற்றியின் ரகசியம் தினமும்  பயிற்சி செய்வது தான். நான் ஒரு நாள் பயிற்சி செய்ய வில்லை என்றல் அதனால் ஏற்படும் மாற்றங்களை என்னால் அறிய முடியும்.

*நான் இரண்டு நாட்கள் பயிற்சி செய்யவில்லை என்றால் அதை எனது விமர்சகர்கள் கண்டு பிடித்து விடுவார்கள்.*

நான் மூன்று நாட்களுக்கு மேல் பயிற்சி செய்ய வில்லை என்றால் அதை இந்த உலகமே அறிந்து கொள்ளும் என்று கூறினார்.

*எந்த துறையிலும் ஒருவர் வெற்றியாளராக திகழ வேண்டுமானால், அவர் தனது பணியில் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.*

அப்போது தான் அவரால் தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

*உழவுக் கருவியைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.. இல்லை என்றால் இது துருப்பிடித்து விடும்.*

அது போலத்தான் தொடர்ந்து ஈடுபடும் கலையிலோ, விளையாட்டிலோ பயிற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர்கள் ஈடுபடும் செயலில் திறமை மங்கி விடும்.

*உங்களுக்கு      2012 ல் நடந்த ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஒட்ட பந்தயத்தில் உலக சாதனை படைத்த உசேன் போல்ட் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.*

அவர் 9.63 வினாடிகளில் 100 மீட்டரை கடந்தார். அவர் ஒரு வினாடியையும் வீணடிக்காமல் தொடர்ந்து பயிற்சி செய்ததால்தான் சில நொடிகளில் அந்த சாதனையை செய்ய முடிந்தது.

*வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ பல விதமான பயிற்சிகள் தேவைப் படுகின்றன.  நன்கு பயிற்சி அடைந்த ஒருவர், தேவையற்ற கடின உழைப்பு கொடுக்காமல், சாதுர்யமான செயல்பாட்டின் மூலம், குறைந்த நேரத்தில் அதிக பலன்களை அடைய முடியும்*.

வாழ்க்கை தேவைகளை அடையும் செயல் முறைகளும் அனைத்து உயிர் இனங்களுக்கும் உள்ளேயே அமைந்துள்ளன. 

*பல உயிரினங்கள் தன் குட்டி களுக்கும், குஞ்சுகளுக்கும் வாழ்க்கைக்கு தேவையான பயிற்சிகளை அளிக்கின்றன*

குழந்தையாக பிறந்ததிலிருந்தே மனித வாழ்க்கையில் பயிற்சி தொடங்கி விடுகிறது. பயிற்சி இல்லாத மனிதன் ஒரு மிருகம் போல கூட வாழ முடியாது அவனுக்கு எதையுமே செய்யத் தெரியாது.

*_ஆம்.,நண்பர்களே..,_*

*ஒரு செயலில் வெற்றி பெற முறையான பயிற்ச்சியும், முயற்சி இல்லாமல் சோம்பலோடு இருக்கிற ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட,ஆக்கத்தோடும், ஊக்கத்தோடும் முயற்சியோடு முறையான பயிற்ச்சி செய்கிற ஒருவருடைய ஒரு நாள் வாழ்க்கை மேன்மை உடையது ..*

No comments: