Wednesday, May 6, 2020

மருத்துவ பழமொழிகள்...

🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை.

🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்..நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்.

🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும்.. பொன்னாங்கண்ணி
மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி.

🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி..
சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை.

🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு.

🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்.

🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை.

🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை.

🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை.

🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை.

🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே.

🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம்
விஞ்சு வாதத்தின் விளைவு போம்.

🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்.

🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை.

🌿15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்.

🌿16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்.

🌿17) வில்வம் பித்தம் தீர்க்கும். 

🌿18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் வாழ்வை வளமாக்கும் . 

🌿19) அனைத்து வியாதிக்கும் அருகம்புல் சாறு.

இவ்வாறு மனித உடம்பைத் தாக்கும் நோய்களையும் மருத்துவரிடம் செல்லாமல், அந்நோயைத் தீர்க்க எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளையும் மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றன இப்பழமொழிகள்...

No comments: