Sunday, May 3, 2020

ஆசை வைத்தல்... ஆசை விடுதல்...

*படி!..*

*ஓராசை வை!-*
*உயிர்களிடத்தில் அன்பு.*

*ஈராசை  நடு!-*
*அறிவும் கல்வியும்*

*மூவாசை விடு!-*
*பேராசை, ஊழல், முறை தவறிய செயல்கள்.*

*நான்காசை கொடு!*
*ஈகை, இல்லார்க்கு கொடுத்தல், இரங்கல், பற்றி நிற்றல்.*

*ஐந்தாசையில் நில்!-*
*நன்னெறி பேணுதல்,  நல்லொழுக்கம் நாடுதல், மேன்மை கொள்ளுதல், விழிப்பொடு நடத்தல், வீரமாய் இருத்தல்.*

*ஆறாசை கொள்!-*
*அழகிய நடத்தை, ஆண்மை கொள்ளல், சூழ்ச்சிகள் அறிதல், முயற்சியில் வெற்றி, மோகம் தணிதல், முதுமையில் வாழ்தல்.*

*ஏழாசை தடு!-*
*பொய்மையில் புகுதல், போதையில் உலவுதல், களவுகள் செய்தல்,  காட்டி மறைத்தல், சண்டைக்கலைதல், சாடித்திரிதல், கனவில் மகிழ்தல்.*

*எட்டாசை படு!-*
*செல்வத்தில் சிறத்தல்,  வளம் வர உழைத்தல், நல்லோர் சேர்தல், உறவோர் மதித்தல், பதவிகள் வகுத்தல், பட்டறிவு உரைத்தல், நாள்பட நிலைத்தல், நல்மைகள் விதைத்தல்.*

*ஒன்பதாசை தொடு!-*
*வேண்டுவோர்க்கு பொருள், வேண்டார்க்கு அருள், தங்குவார்க்கு நிழல், தாங்கார்க்கு உணவு, கேட்பார்க்கு கிளைகள், கெடுப்பார்க்கு திருத்தம், தவிப்பார்க்கு துணை, பகைப்பார்க்கு  தெளிவு, பண்பார்க்கு  உறவு.*

*பத்தாசை இடு!-*
*ஓயாத உழைப்பு, ஓய்ந்தாலும் படிப்பு, தளராத நெஞ்சம், தாழ்த்தாத குணம், வருந்தாத பழக்கம், வறுமையில்லா நினைப்பு, கடுமையிலும் துணை, காய்ந்தாலும் கனிவு, விருப்பமான பழக்கம், விளக்கமான பேச்சு!*

*பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.*

No comments: