Friday, May 22, 2020

கூர்மையான வாளாக உள்ள ஆறு விஷயங்கள்...

நூறு வயது வரை வாழத் தடையாக, மனித வாழ்வை அறுக்கும் கூர்மையான வாளாக உள்ள  விஷயங்கள் ஆறு:-

*1) கர்வம்:-*
கர்வம் இல்லாமல் இருக்க வேண்டும்.
தன்னுடைய குற்றம் குறைகளையும், மற்றவர்களின் நற்குணங்களை மட்டுமே பார்க்க வேண்டும்.

*2) அதிகமாக பேசுவது:-*
தனக்கு பேச விஷயங்கள் இல்லாத போதும் வீண் பேச்சு பேசி வீண் வம்பை விலைக்கு வாங்குவது.

*3) தியாக உணர்வு இன்மை:-*
அதீத ஆசையே மனிதனின் தியாக உணர்வை தடுக்கிறது. இதை உணர்ந்தால் தியாக உணர்வு தானே வரும்.

*4) கோபம்:-*
கோபத்தை வெல்பவனே உண்மையான யோகி. கோபம் வந்துவிட்டால் தர்மம் எது ? அதர்மம் எது ? என்பது தெரியாமல் போகிறது. தவிர விவேகம் இழந்து பல பாவங்களை செய்ய நேர்கிறது.

*5) சுயநலம்:-*
சுயநலமே எல்லா தீமைகளுக்கும் காரணம். தனது காரியத்துக்காக எந்தவொரு பாவமும் செய்ய தயங்குவதில்லை. 

*6) துரோகம்:-*
இந்த உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பது ரொம்ப ரொம்ப அரிது. அப்படிப்பட்டவர்களுக்கு துரோகம் செய்வது தவறு.

ஆக இந்த 6 விஷயங்களில் இருந்து ஒருவன் விலகி வாழ்ந்தால் அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான்.
- விதுரரின் விதுர நீதி புத்தகத்திலிருந்து.

No comments: