Wednesday, June 23, 2021

எப்படி வாழ வேண்டும்? ஒரு நதியைப் போல் வாழ்வோம்...

*1. சிறியது ; ஆயினும் செயல்படுகிறது:* 

 நதி துவங்கும் பொழுது ஒரு சிறிய நீர்நிலையாகத் தான் இருக்கிறது. ஆனால் நான் சிறியன் என்று நினைத்து செயல்படாமல் இருந்து விடுவதில்லை. அது ஓடத் துவங்குகிறது.
அது போல நாம் சிறியோர் ஆயினும் செயல்படத் துவங்குவோம்.

 *2. துணை கொள்வோம்:* 

நதி அதனோடு இணைகின்ற ஓடைகள், கால்வாய்கள் போன்றவற்றை தன்னோடு அரவணைத்துக் கொள்கிறது. எனவே அதன் அளவும் வேகமும் அதிகரிக்கின்றன. 
நாமும் துணை கொள்வோம்.

 *3. துணையைத் தூய்மை ஆக்குவோம்:* 

நம்மோடு சேர்பவர்கள் அழுக்காக இருந்தால் தூய்மை படுத்துவோம். முடியவில்லை என்றால், எங்காவது ஓரமாக - கரையோரமாக - ஒதுக்கி விடுவோம்.

 *4. தங்க வேண்டாம்:* 

ஓரளவு வளர்ந்து விட்டோம் என்று நதி அதோடு திருப்தி அடைந்து, ஓடாமல் ஓரிடத்தில் தங்கி விடுவதில்லை. தொடர்ந்து ஓடுகிறது. 
நாமும் தங்க வேண்டாம். பயணிப்போம்.

 *5. தடைகளை எதிர்கொள்வோம்:* 

வழியில் தடைகள் பல. சிறியதென்றால் நதி தாண்டிச் செல்லும். பெரியது என்றால் சுற்றி வளைந்து செல்லும். தடைகள் விலகும் என்று காத்திருப்பதில்லை. தடைகளை குறித்து புலம்புவதுமில்லை. 
நாமும் தடைகளை எதிர்கொள்வோம்.

 *6. நதி திரும்புவதில்லை:* 

வழி கரடு முரடாக இருக்கிறதே என்று திரும்பிச் செல்வதில்லை.
நாமும் முன்னேறுவோம்.

 *7. ஓர் இன்பத்தில் தேங்குவதில்லை:* 

 செல்கிற வழி அழகாக இருக்கிறது என்று கருதி அதை ரசித்த வண்ணம் அங்கேயே தங்கி விடுவது இல்லை. ராபர்ட் பிரோஸ்ட் சொல்லுகிறார்: "Miles to go before I sleep" .அதுபோல சென்றுகொண்டே இருக்கிறது. 
நாமும் தொடர்வோம்.

 *8. களைப்பு அடைவதில்லை:* 

இத்தனை தூரம் வந்தோமே களைப்பாக இருக்கிறது இளைப்பாறி போவோம் என்று தேங்குவதில்லை.
நாமும் களைப்பு அடைய வேண்டாம்.

 *9. ஆணவம் கொள்வதில்லை:* 

தான் செல்லும் இடமெல்லாம் செழிப்பு அடைகின்றன என்று அகம்பாவம் கொள்வதில்லை. கர்மயோகி போல் பயணத்தை தொடர்கிறது.
நாமும் ஆணவம் கொள்ள வேண்டாம்.

 *10. முடிவில் கலக்கிறது:* 

 முடிவில் தன்னை விட பெரியது ஒன்றில், தனது தனித்துவத்தை இழந்து இரண்டறக் கலக்கின்றது. வாழ்வை நிறைவாக வாழ்ந்தோம் என்று மகிழ்கிறது. அதுபோல
 நாமும் கடவுளோடு கலப்போம். மகிழ்வாய் இருப்போம்.

 நதியைப் போல் வாழ்வோமாக.
இன்பத்தில் கலப்போமாக.

📣📣📣📣📣📣📣📣📣📣📣📣📣

No comments: