Thursday, July 1, 2021

விருப்பத்துடன் செய்தால்...!

*நாம் படிக்கும் பொழுதோ அல்லது விளையாடும் பொழுதோ அல்லது ஏதாவது ஒரு வேலை செய்யும் பொழுதோ, அதை நாம் விரும்பிச் செய்யாமல், அதை ஒரு கடமையாகக் கருதி செய்தால் அந்த செயலினால் நமக்கு எவ்வித பயனும் கிடைக்காது...*

*கடமைக்கு என்று ஒரு செயல் செய்தால், அது உறுதியாக தவறாகத்தான் முடியும். அதுவே!, ஒரு செயலை நீங்கள் மகிழ்ச்சியாக விரும்பி செய்தால், அது உங்களுக்கு எதிர்பாராத பயனையும் வெற்றியையும் தேடித் தரும்...*

*நாம் செய்யும் செயல் முதலில் நமக்கு ஈடுபாடு வேண்டும். அந்த செயல் நமக்கு பிடித்திருக்க வேண்டும். நீங்கள் விருப்பம் இல்லாமல் செய்தால் அது கடமைக்கு செய்யும் செயலாகிவிடும்...*

*நீங்கள் விருப்பத்தில் ஒரு செயல் செய்தீர்கள் என்றால் அந்த செயல் கண்டிப்பாக நல்ல வகையாக அமையும். அது உங்களுக்கு வெற்றியைத் தரும்..*

*நீங்கள் படிக்கும் பொழுது, எனக்கு படிப்பில் ஆர்வம் இல்லை, நான் படித்தால் அதனை கடமைக்கு என்று தான் படிப்பேன் என்று உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் படிக்க வேண்டாம்...*

*உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ, அதனை நீங்கள் எடுத்து செய்யுங்கள்...*

*உங்களுக்கு விளையாடுவதில் ஆர்வம் இருந்தால், அல்லது படம் பிடிப்பதில் ஆர்வம் இருந்தால், அல்லது பாடுவதில் ஆர்வம் இருந்தால், எதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ அந்த வேலையை எடுத்து அதனை நீங்கள் விரும்பிச் செய்யுங்கள்...*

*பிடிக்காத ஒரு வேலையை கடமைக்கு என்று செய்தால் அது உங்களுக்கு எந்த வகையிலும் பயன் தராமல், உங்கள் வாழ்க்கையையும், நேரத்தையும் நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றுதான் பொருளாகும்...*

*மற்றவர்களுக்காக உங்களுக்கு பிடிக்காத வேலையை நீங்கள் செய்தால் அது உங்களுக்கு உறுதியாக எந்த ஒரு பலனையும் கொடுக்காது...*

*உங்களுக்கு பிடித்த வேலை எது...? பிடித்த துறை எது...? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அந்த வேலையை நீங்கள் பிடித்து அனுபவித்து செய்தால், நீங்கள் எதிர்பார்க்காத பயனும் நீங்கள் எதிர்பார்க்காத வெற்றியும் உங்களுக்கு தானே கிடைக்கும்...!*

*அதனால் உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதனை நீங்கள் கண்டறிந்து அதற்கான வேலையை செய்யுங்கள். நீங்கள் ஏதாவது ஒரு செயலை செய்துதான் ஆகவேண்டும். செய்யும் செயலில் விருப்பமில்லை என்றாலும் எப்படியாவது அதில் விருப்பத்தை கொண்டுவர முயலுங்கள். அதை விரும்புவதற்கு முயற்சி செய்யுங்கள்...!*

*படிப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படிப்பதை பிடிக்குமாறு எப்படி படிப்பது என்பதை ஆலோசனை செய்யுங்கள். உங்களுக்கு பிடிக்காத ஒரு செயலை அதை எப்படி நமக்கு பிடிக்க வைப்பது என்பதை எண்ணுங்கள். அதுபோல் பிடிக்காத ஒரு செயல் உங்களுக்கு பிடிப்பது போல் தோன்றினால் அதை நீங்கள் விரும்பி செய்யலாம்...!!*

*ஆனால்!, என்ன செய்தாலும் அந்த செயல் பிடிக்காது என்றால் அந்த செயலை செய்யாமல் இருப்பது நல்லது, உங்கள் வேலையைத் திறம்படச் செய்ய வேண்டுமென்றால் அதனை விரும்பி செய்பவராக நீங்கள் இருக்க வேண்டும்....!!!*

*உங்கள் வேலையை நீங்கள் விரும்பினால் தவிர, அதனைக் கற்றுக்கொள்ள இயலாது. அதனை விரும்பி செய்தால் நீங்கள் ஆசைப்படுவது உங்களுக்கு மிகவும் அருகில் வரும்...!!!*

*நாம் ஈடுபடுகின்ற எந்த செயலானாலும் உள் அன்போடும், பொறுப்பு, கடமை உணர்ச்சியுடன் விரும்பி செய்தால் எந்த பணியையும் எளிதாக செய்யலாம். அந்தப் பணியில் வெற்றியும் அடையலாம்...!!!*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*     

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*

No comments: