Saturday, July 10, 2021

கனவு காணுங்கள்...

உங்கள் ஓய்வு நேரங்களில் நீங்கள் சாதிக்க நினைத்த செயலை சாதித்து முடித்து விட்டதாகக் கருதி உங்கள் மனதிற்குள் கனவு காணுங்கள். 

நீங்கள் சாதிக்க நினைக்கும் செயலை முனைப்போடு செய்யத் தொடங்குங்கள். 

அமெரிக்காவில் சிகாகோவில் கன்சாலஸ் என்றொரு பாதிரியார் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒருநாள் ஏழை எளிய மக்களுக்காக ஒரு சிறந்த தொழிற்கல்வி நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது. 

நல்லவற்றை போதிக்கும் அந்தக் கல்வி நிறுவனத்தைத் தொடங்க அவர் எவ்வளவு பணம் தேவை என்று கணக்கு போட்டுப் பார்த்தார். 

அவர் விரும்பும் அந்த சிறந்த கல்விக் கூடத்தைத் தொடங்க சுமார் ஒரு மில்லியன் டாலர் தேவைப்பட்டது. 

அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. தம்மால் இது முடியாது என்று அவர் விட்டு விடவில்லை.

தினந்தோறும் இதே எண்ணமாகவே இருந்தார். எப்பொழுதும் இதைப் பற்றியே சிந்தித்து வந்தார். இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர் தன் எண்ணத்தை நினைத்துப் பார்ப்பார்.

காலையில் கண் விழித்ததும் தனது கனவு கல்விக் கூடத்தை மனதில் காண்பார். இப்படியே சுமார் இரண்டு வருடங்கள் சென்றன.

ஒருநாள் தான் விரும்பும் கல்வி நிறுவனத்தை விரைவில் எப்படியாவது நிறுவி விட வேண்டும் என்று முடிவு செய்தார். 

இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்த போது தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்த பின்னர் தனது எண்ணத்தை வந்திருப்போரிடம் சொல்லலாம் என்று முடிவு செய்தார். 

அதன்படி 1890ம் ஆண்டில் ஒரு நாள் பிரார்த்தனை முடிந்ததும் தான் நிறுவ விரும்பிய கல்விக் கூடத்தைப் பற்றி மிகச் சிறப்பாக விரிவான முறையில் எடுத்துரைத்தார். 

அந்தக் கூட்டத்தில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவர் பெயர் ஆர்மர். 

கன்சாலஸின் பேச்சும் எண்ணமும் அவரை மிகவும் கவர்ந்து விட்டது.

உடனே பாதிரியாரை அணுகித் தான் பத்து மில்லியன் டாலர் நன்கொடை தருவதாய்க் கூறினார். 

மேலும் கன்சாலஸ் தொடர்ந்து ஐந்து வருடங்கள் அந்தக் கல்வி நிறுவனத்தை தலைமையேற்று நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

பின்னர் ஆர்மர் தான் தருவதாய்க் கூறிய தொகையின் ஒரு பகுதியாக ஒரு மில்லியன் டாலர் பணத்தையும் கொடுத்தார்.

கன்சாலஸ் ஒரு மில்லியன் டாலரைக் கொண்டு 1893ல் ஆர்மர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்றொரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார்.

அவரே அக்கல்லூரியின் தலைவராகவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பின்னர் 1940ஆம் ஆண்டில் ஆர்மர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற பெயரில் புதிய கல்வி நிறுவனம் செயல்படத் தொடங்கியது. 

இன்று உலகத்தின் சிறந்த கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது.
கன்சாலஸின் விடாமுயற்சி பலித்து விட்டது..

 *ஆம்.,நண்பர்களே..,* 

 *விடாமுயற்சி, வலிமையான எண்ணம் இவை இரண்டையும் மனதில் நிறுத்தி முயற்சி செய்தால் யார்* *வேண்டுமானாலும் எதையும் சாதிக்க முடியும்.* 

 *வெற்றியும் தோல்வியும் நம் மனதில் தான் இருக்கிறது.* 

 *உங்களுக்கு வேண்டியது வெற்றியா, தோல்வியா என்பதை முதலில்* 
 *தீர்மானியுங்கள்.* 

 *எல்லோரும் விரும்புவது வெற்றியைத் தானே.* 

 *விடாமல் முயலுங்கள்.* 

 *விரும்பியதை அடையுங்கள்.*

📣📣📣📣📣📣📣📣📣📣📣📣

No comments: